விஜய் டிவியில் விரைவில் தொடங்கும் “பாக்கியலட்சுமி சீசன் 2” சீரியல் – பாக்கியாவாக பிரபல நடிகை!

0
விஜய் டிவியில் விரைவில் தொடங்கும்
விஜய் டிவியில் விரைவில் தொடங்கும் "பாக்கியலட்சுமி சீசன் 2" சீரியல் - பாக்கியாவாக பிரபல நடிகை!
விஜய் டிவியில் விரைவில் தொடங்கும் “பாக்கியலட்சுமி சீசன் 2” சீரியல் – பாக்கியாவாக பிரபல நடிகை!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல், பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிகை நதியா நடிக்க இருப்பதாகவும் அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி சீசன் 2:

பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஹீரோ கோபி ராதிகாவை திருமணம் செய்ய வேண்டும் என்பதால் பாக்கியாவை ஏமாற்றுகிறார். கோபி மீது கண்மூடித்தனமாக நம்பும் பாக்கியா தெரியாமல் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடுகிறார். ஆனால் கோபி இன்னும் உண்மையை குடும்பத்திற்கு சொல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் கோபியின் நடவடிக்கைகளை பார்த்து பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது.

குழந்தைக்காக கதிருக்கு வேறு திருமணம் செய்து வைக்கும் குடும்பத்தினர் – கேள்விக்குறியாகும் முல்லையின் நிலை!

ஆனாலும் குடும்பம் முக்கியம் என்பதால் எதுவும் கேட்காமல் சென்று கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் எழில் அமிர்தா காதல் காட்சிகளும் காட்டப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் எல்லாருடைய குடும்பத்தில் நடக்கும் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. அதனால் ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த சீரியல் பார்த்து வருகின்றனர். குடும்பக்கதை மட்டுமல்லாமல் அவ்வப்போது சமூக கருத்துக்களும் காட்டப்பட்டு வருகிறது. அதனால் எல்லா தரப்பு ரசிகர்களையும் இந்த சீரியல் கவர்ந்துள்ளது.

கோபி மீது சந்தேகப்படும் பாக்கியா, இருவரையும் சந்திக்க வைக்க திட்டமிடும் ராதிகா – இன்றைய எபிசோடு!

இந்நிலையில் இந்த சீரியலின் இரண்டாவது சீசன் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்கியாவாக நடிகை நதியா நடிக்க இருக்கிறார். ஏற்கனவே அம்மா பாசம் உள்ள பல படங்களில் நடித்து இருக்கிறார். அதனால் இந்த சீரியலில் நடிக்க அவர் பொருத்தமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் சீசன் 1 இப்போதைக்கு முடிய வேண்டாம் என ரசிகர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!