பாக்கியலட்சுமி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் லூட்டிகள் – வைரலாகும் வீடியோ!!
சின்னத்திரை சீரியல்களில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி இடம் உண்டு, இந்த வரிசையில் குடும்பத் தலைவிகள் வீடுகளில் படும் கஷ்டம் குறித்து பாக்கியலட்சுமி சீரியல் அமைந்துள்ளது. இந்நிலையில் பரபரப்பான படப்பிடிப்பு தளம் இருந்தாலும் அதற்கு நடுவே நடிகர்கள் செய்யும் லூட்டிகள் அடங்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்:
கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்காமல் உள்ளதால் மக்களிடம் சீரியல் மோகம் தலைதூக்கி உள்ளது. அதற்கு ஏற்றார் போல கதைக்களத்தை அமைத்து தொலைக்காட்சி நிறுவனங்கள் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். பல முன்னணி தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பினாலும், விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வரிசையில் படித்த கணவரை திருமணம் செய்து கொண்டு வசதியாக வாழ்ந்தாலும், குடும்பத்திற்காக மாடாய் உழைக்கும் குடும்ப தலைவி எதிர்கொள்ளும் சவால்களை மையமாக கொண்டு பாக்யலட்சுமி கதை உருவாக்கப்பட்டுள்ளது.
அனுவை குணப்படுத்த காளி பூஜைக்கு ஏற்பாடு செய்யும் பாட்டி – வெளியான “ரோஜா” சீரியல் ப்ரோமோ!
கணவன், 3 பிள்ளைகள், மாமனார், மாமியார், மற்றும் மருமகளுடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வரும் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி நடித்து வருகிறார். அவரது கணவன் கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார்.தனியாக மசாலா மற்றும் சாப்பாடு டெலிவரி செய்யும் பிசினஸ் செய்யும் பாக்கியாவின் கணவனான கோபி, தனது கல்லூரி பருவ காதலி ராதிகாவுடன் (ரேஷ்மா பசுபுலேட்டி) வீட்டிலிருக்கும் யாருக்கும் தெரியாமல் பழகி வருகிறார். தவறான உறவு இல்லை என்றாலும் இந்த விவகாரம் வீட்டிற்கு தெரிந்து விட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அதற்காக எல்லா வேலைகளையும் செய்கிறார்.
TN Job “FB
Group” Join Now
இப்படியான கதைக்களம் இருக்க பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் காட்சிகளுக்கு நடுவே ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்கள் செய்த லூட்டி அடங்கிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை ராதிகா கேரக்டரில் நடிக்கும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து உள்ளார். வீடியோவில் பேக்ரவுண்டில் பிஜிஎம் ஒலிக்கிறது. அதில் ராதிகாவுடன் கோபி பேசி கொண்டிருக்கும் போது, சட்டென்று பாக்கியாவும் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் செல்வியும் வருகின்றனர். அவர்களை பார்த்ததும் கையில் இருக்கும் ஹெல்மெட்டை சட்டென்று தலையில் மாட்டி கொள்ளும் கோபி, இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிடுகிறார். பாக்கியாவோ கோபியை அடிக்க செல்வது போல கையை முறுக்குகிறார். இறுதியாக நால்வரும் சேர்ந்து தங்கள் கைகளையும், கால்களையும் ஆட்டி ஒரு டான்ஸ் ஸ்டெப் போடுகின்றனர். இந்த விடீயோவை பார்த்து ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.