பணம் இல்லாமல் தவிக்கும் கோபி, முன்வந்து உதவி செய்யும் பாக்கியா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
பணம் இல்லாமல் தவிக்கும் கோபி, முன்வந்து உதவி செய்யும் பாக்கியா - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பணம் இல்லாமல் தவிக்கும் கோபி, முன்வந்து உதவி செய்யும் பாக்கியா - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பணம் இல்லாமல் தவிக்கும் கோபி, முன்வந்து உதவி செய்யும் பாக்கியா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த திருப்பங்கள் நடந்து வருகிறது. அடுத்த என்ன நடைபெறப்போகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை இப்போது பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி :

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா முன்னேற வேண்டும் என்ற முயற்சியில் சமையல் தொழிலை செய்ய தொடங்குகிறார். 1000 பேருக்கு சமைக்க வேண்டும் என்ற ஆர்டரை எடுக்கிறார். அனைவரது எதிர்ப்புக்கும் மத்தியில் மகன் எழிலின் உதவியுடன் வெற்றிகரமாக சமையல் செய்து அனுப்பி விடுகிறார். இந்த மகிழ்ச்சி சற்று நேரம் கூட நிலைக்காது வங்கியில் இருந்த பணத்தை இழக்கிறார். இதனையடுத்து சீரியலில் அடுத்த சம்பவங்கள் சுவாரசியமாக உள்ளது. இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் கோபி வழக்கம் போல பாக்யாவிடம் ஒவ்வொரு வேலையாக வாங்குகிறார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மீனாட்சி’ சீரியல் – ஹீரோ இவர் தானாம்!

அப்போது இனியா ஸ்கூல் பீஸ் கட்டனும். எப்பவும் முதல் தேதிலயே கட்டிருவீங்க. இப்போ லாஸ்ட் டேட் வர போகுது என சொல்கிறாள். அதற்கு கோபி, நாளைக்கு கொடுத்துறேன் என்கிறான். அதன் பிறகு ஆபிசுக்கு போகும் கோபி இவ்வளவு பெரிய கம்பெனியை ரன் பண்றேன். ஆனால் என்னால என் பொண்ணோட ஸ்கூல் பீஸ் கட்ட முடியலை. ஆபிஸ்ல இருக்குற எல்லாரையும் வேற வேலை தேடிக்க சொல்லுங்க. நானும் வேற வேலைக்கு போறேன் என சொல்லி கத்துகிறான். இதற்கிடையில் வீட்டிற்கு வரும் அமிர்தாவிடம் எழில் மட்டும் இல்லைன்னா நாங்க எல்லாரும் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்போம் என சத்தியமூர்த்தி சொல்கிறான்.

விஜய் டிவி ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ பிரபலங்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

அப்போது பாக்கிய எழில் மாதிரி ரெண்டு நாள்ல வந்து எல்லோருக்கும் பணம் கொடுத்தான். அவன் வந்து நின்னப்ப, எனக்கு மகன் மாதிரி தெரியல. என் சாமி மாதிரி தெரிஞ்சான் என்கிறாள். அதற்கு சத்தியமூர்த்தி அவன் அப்படித்தான். எல்லாமே செய்வான். ஆனால் வெளியே எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறான். அதன் பின்னர் வீட்டிற்கு வரும் கோபி அவன் பிரெண்ட் சேகருக்கு போன் பண்ணி உன்கிட்ட கொஞ்சம் பணம் இருக்குமா என கேட்கிறான். கோபி பேசுவதை கேட்டு கொண்டிருந்த பாக்கிய வீட்டு செலவுக்கு நீங்க பணம் கொடுக்க வேண்டாம். என்கிட்ட இருக்கு என்கிறாள் அதற்கு அவன் இந்த மாசம் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்கலன்னு குத்தி காமிக்கிறியா என சொல்கிறான். அத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here