ராதிகாவின் புது வீட்டு கிரகப்பிரவேசம் – குடும்பத்துடன் வந்த பாக்கியா, திட்டு வாங்கும் கோபி!

0
ராதிகாவின் புது வீட்டு கிரகப்பிரவேசம் - குடும்பத்துடன் வந்த பாக்கியா, திட்டு வாங்கும் கோபி!
ராதிகாவின் புது வீட்டு கிரகப்பிரவேசம் - குடும்பத்துடன் வந்த பாக்கியா, திட்டு வாங்கும் கோபி!
ராதிகாவின் புது வீட்டு கிரகப்பிரவேசம் – குடும்பத்துடன் வந்த பாக்கியா, திட்டு வாங்கும் கோபி!

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகா வீட்டின் பால் காய்ச்சு விழாவிற்கு பாக்கியா குடும்பத்தினர் சென்று விடுகின்றனர். அங்கு அவருக்கு அனைத்து சடங்கிலும் அவருக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

“பாக்கியலட்சுமி” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று ராதிகாவின் பால் காய்ச்சு விழாவிற்கு அனைவரும் கிளம்பி செல்லுகின்றனர். இதனால் ராதிகா மிகவும் சந்தோசம் அடைந்து விடுகிறார். பின், பாக்கியா விழாவிற்கு தேவையான எல்லா வேலைகளையும் செய்கிறார். குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் பால் காய்ச்சு விழாவில் பங்கேற்று மகிழ்கின்றனர். விழாவிற்கு கோபி மற்றும் செழியன் வராததால் பாக்கியா குடும்பத்தினர் வருந்துகின்றனர்.

பின், அவர்களை ராதிகா சமாளித்து உணவு உட்கொள்ள சொல்கிறார். அனைவரும் உண்டு முடித்து விட்டு வீட்டிற்கு கிளம்பி விடுகின்றனர். அப்போது ஜெனி செழியனிடம் பால் காய்ச்சு விழா குறித்து கூறுகிறார். அதே போல் அவர் வராததால் ராதிகா வருத்தப்பட்டதாகவும் கூறுகிறார். இவை அனைத்தையும் செழியன் அமைதியாக கேட்கிறார். பின், ஜெனி தனது அம்மாவிற்கு போன் கால் செய்து பேசுகிறார். அதில் செழியன் புது வீடு வாங்க இருக்கும் திட்டம் குறித்து கூறுகிறார். இதனால் ஜெனியின் அம்மா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்.

அதே போல் இது நல்ல விஷயம் தான் என்றும் கூறுகிறார். ஆனால், ஜெனிக்கு இந்த யோசனை பிடிக்காததை பற்றி கூறும் போது ஜெனியின் அம்மா போனை எதோ எதோ காரணம் கூறி கட் செய்து விடுகிறார். இப்படியாக இருக்க, இங்கு ராதிகாவின் வீட்டிற்கு வெகு நேரம் கழித்து கோபி செல்கிறார். மயூரிக்கு ஸ்பெஷலாக என்று பரிசு பொருட்களையும் வாங்கி செல்கிறார். அவர் அப்படி நடந்து கொண்டாலும், ராதிகா அவர் ஏன் இவ்வளவு தாமதமாக வந்தார் என்பது குறித்து கேட்கிறார். கோபி ஏதேதோ காரணம் கூறவும் கோபம் அடியும் ராதிகா அவரை திட்டுகிறார். இதனால் மயூரி பயந்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிந்து விடுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here