பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவுக்கு பதில் இந்த ‘பிக்பாஸ்’ பிரபலம் – ஷாக்கான ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாக்கியலட்சுமி” இந்த சீரியலில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் பிக் பாஸ் புகழ் ரேஷ்மா நடிக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் அனைவர் மத்தியிலும் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால், அதும, “பாக்கியலட்சுமி” சீரியல் தான். இதில் சராசரியான ஒரு குடும்ப தலைவி எது போன்ற பிரச்சனைகளை கடந்து வருகிறார் என்று அழகாக எடுத்து காட்டி இருப்பர். இப்படியான இந்த சீரியலில் பாக்கியலட்சுமி தான் நாயகி. அவரது கணவராக வரும் கோபி வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார்.
தனது அம்மா பெயர் கண்ணம்மா என்று கூறும் ஹேமா – என்ன சொல்ல போகிறார் பாரதி??
இதனை தனது குடும்பத்தினரிடம் இருந்து மறைத்தும் வைக்கிறார். இப்படியாக இருக்க, இந்த சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் நடிப்பவருக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக புகழ் பெற்ற நடிகை ரேஷ்மா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தவர் எதன் காரணமாக விலகுகிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை. ரேஷ்மா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி அவரது ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.
கூடுதலாக, இந்த சீரியலில் ராதிகா கதாபாத்திரத்திற்கு மாயா என்ற குழந்தை இருக்கும். அந்த கதாபாத்திரத்தில் நடித்த அந்த குழந்தைக்கு பதிலாக “மௌனராகம்” சீரியலில் நடித்த குழந்தை அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.