ரசிகரின் கேள்வியால் கடுப்பான ‘பாக்கியலட்சுமி’ இனியா நடிகை நேஹா – இதெல்லாம் முக்கியமா?

0
ரசிகரின் கேள்வியால் கடுப்பான 'பாக்கியலட்சுமி' இனியா நடிகை நேஹா - இதெல்லாம் முக்கியமா?
ரசிகரின் கேள்வியால் கடுப்பான 'பாக்கியலட்சுமி' இனியா நடிகை நேஹா - இதெல்லாம் முக்கியமா?
ரசிகரின் கேள்வியால் கடுப்பான ‘பாக்கியலட்சுமி’ இனியா நடிகை நேஹா – இதெல்லாம் முக்கியமா?

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை நேஹா வலைதளத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு காட்டமாக பதிலளித்துள்ள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை நேஹா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்க கூடிய சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இத்தொடர் பாக்கியலட்சுமி என்ற குடும்பத் தலைவி, பாவப்பட்ட ஒரு அம்மாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இது குடும்பப்பாங்கான கதைக்களம் கொண்ட சீரியல் என்பதால் இதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் இனியா என்ற கதாப்பாத்திரத்தில், பாக்கியலட்சுமியின் கடைசி பெண்ணாக, வீட்டின் செல்லப்பிள்ளையாக நடித்து வருபவர் நடிகை நேஹா.

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று – அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை நேஹாவுக்கு ஒரு அடையாளத்தை பெற்று தந்தது இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தான். வழக்கமாக மற்ற நடிகர், நடிகைகளை போலவே எப்போதும் வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை நேஹா அவ்வப்போது ‘பாக்கியலட்சுமி’ சீரியல் படப்பிடிப்பில் எடுக்கும் புகைப்படங்கள், சக நடிகர்களான நடிகர் விஷால், திவ்யாவுடன் இணைந்து செய்யும் சில ரீல்ஸ் வீடியோக்களை வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

நடிகர் விஜயுடன் ‘பீஸ்ட்’ திரைப்பட அனுபவம் குறித்து மனம் திறந்த நடிகை பூஜா ஹெக்டே – உற்சாகத்தில் ரசிகர்கள்!

இது தவிர இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடும் நடிகை நேஹா, சில நேரங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தும் வருகிறார். அந்த வகையில் நடிகை நேஹாவின் இன்ஸ்டா பக்கத்தில், உங்களது எடை என்ன என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, என்னுடைய எடையை பற்றி ஏன் எல்லாரும் கவலைப்படுகிறீர்கள். அதை தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிறீர்கள். இது உங்களுக்கு அறிவை தரக்கூடியதா. இதன் மூலம் என்னை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள தேவையில்லை. இந்த கேள்வி வருவது இது முதல் முறையல்ல’ என காட்டமாக பதில் அளிக்க இப்பதிவு வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!