நிஜத்தில் வைராக்கியம்.. மனதில் கோபியின் நினைவுகள் – “பாக்கியலட்சுமி” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

0
நிஜத்தில் வைராக்கியம்.. மனதில் கோபியின் நினைவுகள் -
நிஜத்தில் வைராக்கியம்.. மனதில் கோபியின் நினைவுகள் - "பாக்கியலட்சுமி" சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!
நிஜத்தில் வைராக்கியம்.. மனதில் கோபியின் நினைவுகள் – “பாக்கியலட்சுமி” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கோபியை பிரிந்து கவலை இல்லாமல் வாழ்வது போல நடித்தாலும், அடிக்கடி கோபியின் நினைவுகள் பாக்கியாவை வருத்தப்பட செய்கிறது. இன்றைய எபிசோடில் கோபி நினைவுகளுடன் பாக்கியா இருப்பது போல வரும் காட்சிகள் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியாவை பிரிந்து வாழ தொடங்கிவிட்டார். பாக்கியா கோபியை பற்றி நினைக்காமல் குடும்பத்திற்கு தேவையான எல்லாம் செய்ய வேண்டும் என்பதை மட்டுமே தனது வாழ்க்கையின் லட்சியமாக வைத்து ஓட தொடங்கி இருக்கிறார். அதற்காக பாக்கியா பெரிய சமையல் காண்ட்ராக்ட் ஒன்றை வாங்குகிறார். அதில் நல்லபடியாக சமைத்து தன்னை நிரூபிக்க வேண்டும் என பாக்கியா நினைக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க மறுபக்கம் கோபி தன்னுடைய குடும்பத்தை மறந்து கல்யாண குஷியில் இருக்கிறார்.  தன்னுடைய கல்யாணத்தில் அம்மா வர வேண்டும் என நினைத்து ஈஸ்வரியை கோவிலில் சந்தித்து பேசுகிறார். ஆனால் ஈஸ்வரி வரமாட்டேன் என சொல்லி எப்படி கல்யாணத்தை நடத்துகிறாய் என பார்க்கிறேன் என சொல்கிறார். பின் ஈஸ்வரி  வீட்டிற்கு வந்து பாக்கியாவை சத்தம் போடுகிறார். உன் வாழ்க்கை இப்படி இருக்கிறது அதை நினைத்து நீ கவலைப்படவில்லை என கேட்கிறார்.

சூப்பர் சிங்கர் செந்தில் – ராஜலக்ஷ்மி வீட்டில் நடந்த சம்பவம் – அவர்களே வெளியிட்ட வைரல் பதிவு!

Exams Daily Mobile App Download

ஆனால் பாக்கியா அதை நினைத்து கவலைப்படாமல் வாழ்க்கையை பார்த்தால் தான் குடும்பத்திற்கு தேவையானது எல்லாம் செய்ய முடியும் என சொல்கிறார். வாய்யால் இப்படி சொன்னாலும் மனதால் அவர் கோபியை மறக்கவில்லை. கோபியின் நினைவுகளுடன் அவர் இருக்க அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்கியா சமைப்பதை கோபி ரசிப்பது போல காட்டப்பட்டுள்ளது. ஆனால் அது பாக்கியாவின் கனவு தான் என்பதால் அதை நினைத்து அவர் அழுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here