எழிலிடம் ராதிகா பற்றி உண்மையை சொல்லப் போகும் ராமமூர்த்தி தாத்தா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
எழிலிடம் ராதிகா பற்றி உண்மையை சொல்லப் போகும் ராமமூர்த்தி தாத்தா -
எழிலிடம் ராதிகா பற்றி உண்மையை சொல்லப் போகும் ராமமூர்த்தி தாத்தா - "பாக்கியலட்சுமி" சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
எழிலிடம் ராதிகா பற்றி உண்மையை சொல்லப் போகும் ராமமூர்த்தி தாத்தா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையிலும் கோபியை ராமமூர்த்தி எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் எழிலிடம் ராதிகாவை தான் கோபி திருமணம் செய்ய போகிறார் என்ற உண்மையை தாத்தா சொல்வது எல்லாம் அடுத்த எபிசோடுகளில் வர இருக்கிறது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கோபி எப்போது சிக்குவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சென்ற வாரம் தாத்தா கோபியை பற்றிய உண்மையை ராதிகாவிடம் சொல்லிவிட கிளம்ப ஆனால் அவர் வீட்டை காலி செய்துவிட்டு சென்றுவிடுகிறார். அதனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய தாத்தாவை பார்த்து எழில் வருத்தப்படுகிறார். இந்நிலையில் கோபியின் லீலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிக்கும் கோபி யார் தெரியுமா? லீக்கான சுவாரசியமான தகவல்கள்!

கோபி இனியாவிடம் அம்மாவை விட்டு பிரிய போகிறேன் என சொல்ல அதை கேட்டு இனியா கோவப்படாமல் விளையாட்டிற்கு சொல்வது போல நினைக்கிறார். அதனால் அப்பா மீது அவருக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. ராமமூர்த்தி முடியாத சூழ்நிலையிலும் கோபி மீது பயங்கர கோவத்தில் இருக்கிறார். கோபியை ஒரு கையால் கொல்ல முயற்சி செய்ய ஆனால் கோபி அவரை அப்பா என பார்க்காமல் கீழே தள்ளி விடுகிறார். அதனால் ராமமூர்த்தி கோபியை கோபத்துடன் எச்சரிக்கிறார்.

திடீரென மயங்கி விழுந்த ‘நாம் தமிழர்’ சீமான் – தொண்டர்கள் அதிர்ச்சி! நடந்தது என்ன?

இப்படி கதை சென்றிருக்க எழிலிடம் ராமமூர்த்தி ஒரு உண்மையை சொல்லப் போகிறார். அதாவது ராதிகாவை தான் கோபி திருமணம் செய்யப் போகிறார் என்ற உண்மையை எழிலிடம் சொல்ல எழில் அடுத்து என்ன முடிவு செய்யப் போகிறார் என்பது எல்லாம் அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது. இந்த உண்மை பாக்கியாவிற்கு தெரிய வருமா என்பது எல்லாம் சீரியலில் மிகப்பெரிய திருப்பமாக இருக்க போகிறது. மேலும் ராதிகாவை இத்தனை நாள் கோபி ஏமாற்றியது தெரிய வரும் போது குடும்பத்தில் பல பிரச்சனைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here