மனம் உடைந்து வீட்டிற்கு வந்த பாக்கியா, எழிலிடம் பாக்கியா வந்ததை சொன்ன செல்வி – இன்றைய எபிசோட்!

0
மனம் உடைந்து வீட்டிற்கு வந்த பாக்கியா, எழிலிடம் பாக்கியா வந்ததை சொன்ன செல்வி - இன்றைய எபிசோட்!
மனம் உடைந்து வீட்டிற்கு வந்த பாக்கியா, எழிலிடம் பாக்கியா வந்ததை சொன்ன செல்வி - இன்றைய எபிசோட்!
மனம் உடைந்து வீட்டிற்கு வந்த பாக்கியா, எழிலிடம் பாக்கியா வந்ததை சொன்ன செல்வி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா உண்மை எல்லாம் தெரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் வீட்டிற்கு வருகிறார். செல்வி அவரிடம் விவரத்தை கேட்க ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. பின் எழில் அம்மாவிற்கு எதோ ஆனது போல நினைத்து செல்விக்கு போன் செய்து விவரத்தை கேட்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் வீட்டில் செல்வி மற்றும் ராமமூர்த்தி மட்டும் இருக்க மழையில் நனைந்து கொண்டு பாக்கியா வருகிறார். அப்போது செல்வி தாத்தாவிடம் காபி வேண்டுமா என கேட்க அவர் ஒன்றும் வேண்டாம் என சொல்கிறார். பின் பாக்கியா வாசலில் நிற்பதை பார்த்து என்ன அக்கா இப்படி நனைந்து போய் இருக்கிறாய் என கேட்கிறார். பாக்கியாஎதுவும் பேசாமல் இருக்க தாத்தா அவரை பார்த்து என்ன நடந்தது முதலில் சென்று ட்ரெஸ் மாற்றிக் கொண்டு வா என சொல்கிறார்.

தமிழகத்தில் 10,371 ஆசிரியர் & பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

பின் பாக்கியா எதையோ யோசித்துக் கொண்டு மாடி ஏறி செல்கிறார். தாத்தா அதை பார்த்து சந்தேகப்படுகிறார். மறுபக்கம் மருத்துவமனையில் அனைவரும் கோபியை பார்த்துக் கொண்டு இருக்க டாக்டர் வருகிறார். அவரிடம் ஈஸ்வரி எதுவும் பிரச்சனை இல்லையே என கேட்க எதுவும் இல்லை தலையில் அடிபட்டு வந்தார் ஸ்கேன் எல்லாம் பார்த்து இப்போது சரியாகிவிட்டது என சொல்கிறார். அப்போது கோபி நான் மயக்கம் தெளிந்தது முதல் தனியாக தான் இருக்கேன் என சொல்ல ஈஸ்வரி அப்போ பாக்கியா எங்கே என நினைக்கிறார்.

Exams Daily Mobile App Download

எழில் வெளியே வர ஜெனி வந்து ஆன்டி எங்கே என கேட்கிறார். அம்மாவிற்கு போன் போகவில்லை என சொல்லி ரிசெப்சனில் கேட்க செல்கிறார். அங்கே ஜெனி கோபிநாத் பார்க்க யார் வந்தார் என கேட்க அவருடைய மனைவி வந்தார் அவர் தான் பணம் எல்லாம் கட்டியதாக சொல்கிறார். பின் செல்விக்கு போன் செய்து எழில் கேட்க அக்கா இப்போ தான் வந்தா மழையில் நனைந்துவிட்டு வந்திருக்கிறாள் அவளுடைய முகமே சரி இல்லை என சொல்கிறார். அதை கேட்டு எழில் எதோ தவறாக இருக்கிறது என நினைக்கிறார்.

பின் நர்ஸ் வந்து அவர் நன்றாக இருக்கிறார் நாளைக்கு வீட்டிற்கு அனுப்பிருவாங்க என சொல்ல இத்தனை பேர் இருக்க வேண்டாம் என சொல்கிறார். ஈஸ்வரி எழிலுடன் இங்கே இருக்கேன் எனவும் ஜெனி செழியன் இனியாவை கிளம்ப சொல்கிறார். அவர்கள் வீட்டிற்கு செல்ல அப்போது செல்வி மாடிக்கு வந்து பார்க்கிறார். பாக்கியா அப்படியே அமைதியாக நிற்க பாக்கியாவிடம் சாரிடம் சண்டை எதுவும் போட்டியா என் கேட்கிறார். பாக்கியா செல்வியை கிளம்ப சொல்ல, கீழே ஐயா சாப்பிடாமல் இருக்கிறார் என சொல்கிறார்.

அவருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு கிளம்பு என சொல்ல செல்வி நீ இப்படி இருக்கவே மாட்டியே என்ன ஆனது என கேட்கிறார். ஆனால் பாக்கியா செல்வியை நான் சொல்வதை செய் என சொல்லி சத்தம் போடுகிறார். பின் ஜெனி இனியா செழியன் வீட்டிற்கு வர தாத்தா அவன் எப்படி இருக்கிறான் என கேட்கிறார். டாடி நன்றாக இருப்பதாக சொல்ல, ஜெனி செல்வியிடம் ஆன்டி எங்கே என கேட்கிறார். அக்கா மாடியில் நின்று கொண்டே இருப்பதாக சொல்ல அப்போது ஜெனி சென்று பாக்கியாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். என்னாச்சு ஏன் இப்படி இருக்கீங்க என ஜெனி கேட்க பாக்கியா எதுவும் பேசாமல் இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here