பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகியது ஏன்? ஜெனிபர் பதில்!
ஒரு பெண்ணுக்கு தன்னுடைய குடும்பம் எவ்வளவு முக்கியமோ அது போல அவளின் ஆசைகள், கனவுகள் மற்றும் குறிக்கோள் போன்றவையும் முக்கியம் என்ற கதையை மையமாக கொண்டது தான் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல். இதில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நந்திதா ஜெனிபர் அந்த சீரியலை விட்டு திடீரென விலகி உள்ளார். இதற்கான காரணத்தையும் ஒரு வீடியோ மூலம் தெரிவித்து உள்ளார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் DNA டெஸ்ட் எப்போ எடுப்பாங்க? வெண்பா பளிச்!
பாக்கியலட்சுமி சீரியல் ஒரு குடும்ப கதை மட்டுமல்லாமல் சாதிக்க துடிக்கும் ஒரு இல்லத்தரசியின் கதையாகும். இதில் பாக்கியா அவர்களின் தோழியாக அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து அவரின் அன்பு மற்றும் நம்பிக்கையை பெற்ற ராதிகா கதாபாத்திரத்தில் நந்திதா ஜெனிபர் நடித்து வந்தார். மேலும் இவர் பாக்கியாவின் கணவர் கோபியின் முன்னாள் காதலியும் ஆவர். இது போன்ற கதாபாத்திரங்களில் தன்னுடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நந்திதா ஜெனிபர்.
தற்போது இவர் இந்த சீரியல் விட்டு விலகி உள்ளார். இதற்கான காரணங்கள் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில் அதனை ஒரு வீடியோ மூலம் தெரிவித்து உள்ளார். அதில் ஜெனிபர் கூறியதாவது, இந்த சீரியலை விட்டு விலக இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று தன்னுடைய தனிப்பட்ட காரணம், மற்றொன்று இது வரை ராதிகா கதாபாத்திரம் மூலம் பாக்கியாவின் தோழியாக இருந்து நல்ல பெயரை பெற்று விட்டேன். இனி இதன் கதைக்களம் மாறப்போகிறது.
விஜய் டிவி புதிய சீரியல் ‘தமிழும் சரஸ்வதியும்’ – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இதனால் தன்னுடைய கதாபாத்திரத்தை ரசிகர்கள் வேறு கோணத்தில் பார்க்கக்கூடும். இதை விரும்பாத காரணத்தால் தான் விலகியதாக தெரிவித்து உள்ளார். மேலும் அவரின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து உள்ளார். மேலும் வேறு பல சீரியலில் அவரை எதிர்பார்த்து உள்ளனர். ஜெனிபர் சீரியலில் இல்லை என்றாலும் அவர் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்து உள்ளார்.