அவார்ட் நிகழ்ச்சியில் ராதிகாவுக்கு ஏற்பட்ட அவமானம்.. திண்டாட்டத்தில் கோபி – “மகா சங்கமம்” ப்ரோமோ ரிலீஸ்!

0
அவார்ட் நிகழ்ச்சியில் ராதிகாவுக்கு ஏற்பட்ட அவமானம்.. திண்டாட்டத்தில் கோபி -
அவார்ட் நிகழ்ச்சியில் ராதிகாவுக்கு ஏற்பட்ட அவமானம்.. திண்டாட்டத்தில் கோபி - "மகா சங்கமம்" ப்ரோமோ ரிலீஸ்!
அவார்ட் நிகழ்ச்சியில் ராதிகாவுக்கு ஏற்பட்ட அவமானம்.. திண்டாட்டத்தில் கோபி – “மகா சங்கமம்” ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மகா சங்கமம் எபிசோடில், கோபிக்கு அவார்ட் நிகழ்ச்சி நடக்க, அதில் ராதிகாவும், பாக்கியாவும் வருகின்றனர். இந்நிலையில் அவார்ட் கொடுத்தவர் கோபி மனைவியை பற்றி பேச அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி ப்ரோமோ

பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரத்தில் பெரிய திருப்பம் எல்லாம் நடந்து முடிந்துள்ளது. கோபி ராதிகாவின் திருமணம் எந்த தடையும் இன்றி நடந்து முடிய அதனால் பாக்கியாவின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. மேலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் எபிசோடுகளில் கோபியும் ராதிகாவும் ஹனிமூனிற்கு கொடைக்கானல் சென்று இருக்கின்றனர். அங்கே பாக்கியா குடும்பமும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் வந்திருக்கின்றனர். அவர்கள் உண்மையை தெரிந்து மிகவும் வருத்தப்படுகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ஆனால் பாக்கியா தன்னுடைய வாழ்க்கையில் உறுதியாக இருப்பது தெரிந்து அனைவரும் ஆச்சர்யத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில், கோபியின் நண்பர்கள் அவருக்கு அவார்ட் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்கின்றனர். அதில் கோபிக்கு அவார்ட் வழங்கப்படுகிறது. அவார்ட் நிகழ்ச்சியில் ராதிகாவும், பாக்கியா மற்றும் ராமமூர்த்தியும் வருகின்றனர். கோபி பெயரை அழைத்து அவார்ட் கொடுக்க, அவருடைய வெற்றிக்கு கோபியின் மனைவி தான் காரணம் என பெருமையாக பேசுகின்றனர்.

தலைவர் போட்டியில் தாக்குப்பிடித்து நிற்கும் ஜிபி, ஜனனி – “பிக்பாஸ் சீசன் 6” ப்ரோமோ ரிலீஸ்!

Exams Daily Mobile App Download

பின் கோபி மனைவி மேடைக்கு வர வேண்டும் என சொல்ல, ராதிகா வேகமாக எழுந்திருக்கிறார். ஆனால் அவர் கோபி மனைவி பாக்கியலட்சுமி வாங்க என சொல்ல, பாக்கியா என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். அவர் சொன்னதை கேட்டு ராதிகா கோவப்பட, அவார்ட் கொடுப்பவர் பாக்கியாவை கீழே வந்து மேடைக்கு அழைக்கிறார். அதை பார்த்து ராதிகாவுக்கு பயங்கர கோவம் வருகிறது. இதெல்லாம் மேடையில் இருந்து பார்த்த கோபி என்ன ஆகுமோ என பதட்டத்தில் இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!