பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி - ரசிகர்கள் வாழ்த்து மழை!
பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி - ரசிகர்கள் வாழ்த்து மழை!
பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி – ரசிகர்கள் வாழ்த்து மழை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். அவருக்கு 2020 ஆம் ஆண்டு கெளதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.

காஜல் வளைகாப்பு:

தென்னிந்திய திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து சிறந்த நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் இயக்குநர் பேரரசு இயக்கிய பழனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் நடிகர் கார்த்தியுடன் நான் மகான் அல்ல படத்தில் நடித்த அவர். அதன் பின் சூர்யா உடன் மாற்றான் படத்தில் நடித்து இருக்கிறார். 2012ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வருண் – அடுத்த கட்டத்திற்கு நகரும் கதை!

அது மட்டுமில்லாமல் நடிகர் அஜித் உடன் விவேகம் படத்திலும் அவர் நடித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது 36 வயதான அவர் 2020 ஆம் ஆண்டு கெளதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் கர்ப்பமாக இருக்கும் அவர் தன்னுடைய பேபி பம்ப் தெரியும்படி பல புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அதை பார்த்த ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். இந்நிலையில் அவருக்கு ஐந்தாவது மாத வளைகாப்பு கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!

அதில் அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இருக்கும் அவர் தனது கர்பகாலத்தை புகைப்படங்களாக எடுத்து அதை பதிவிட்டு இருக்கிறார். அந்த வகையில் தன்னுடைய வளைகாப்பு புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!