சமையல் ஆர்டர் செய்ய இருப்பதால் பாக்கியாவை கண்டபடி திட்டும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
சமையல் ஆர்டர் செய்ய இருப்பதால் பாக்கியாவை கண்டபடி திட்டும் கோபி - இன்றைய
சமையல் ஆர்டர் செய்ய இருப்பதால் பாக்கியாவை கண்டபடி திட்டும் கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
சமையல் ஆர்டர் செய்ய இருப்பதால் பாக்கியாவை கண்டபடி திட்டும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், அக்கம் பக்கத்தினரை அழைத்து பாக்கியா பெரிய சமையல் ஆர்டர் செய்ய சொல்கிறார். சிலர் சரி என சொல்லி பெயர் கொடுக்கிறார். உடனே பாக்கியா சந்தோஷத்தில் இருக்க, கோபி பயங்கர கோவத்தில் இருக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா அக்கம் பக்கத்தினரை அழைத்து பேசுகிறார். எப்படி சமைக்க போகிறோம் என விளக்கி சொல்கிறார். அப்போது கோபி அங்கே வந்து கோபத்தில் நிற்கிறார். பாக்கியா சொன்னதும் சிலர் முடியாது என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அப்போது பலர் செய்ய ஒப்புக் கொண்டனர். அதை பார்த்ததும் பாக்கியாவிற்கு சந்தோசமாக இருக்கிறது. சமையல் செய்ய ஒப்புக் கொண்டவர்களிடம் அமிர்தா போன் நம்பர் வாங்கி வைத்து கொள்கிறார்.

பாக்கியா கோபிக்கு ஜூஸ் கொண்டுவந்து கொடுக்க, கோபி எதற்கு எத்தனை பேர் வீட்டு வாசலில் நிற்கின்றனர் என கேள்வி கேட்கிறார். அப்போது பாக்கியா சமையல் செய்ய ஆர்டர் வாங்கி இருக்கிறேன் அதற்கு தான் நிற்கிறார்கள் என சொல்கிறார். உடனே கோபி இந்த ஆர்டரை செய்ய முடியாது என எத்தனை முறை சொல்வது என சத்தம் போட, என்னால் முடியும் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது என பாக்கியா சொல்கிறார். ஏற்கனவே என் நண்பர் வீட்டில் சமைத்து நீ செய்தது எல்லாம் போதும் என சொல்கிறார்.

அத்தை கனவில் வந்ததை சொல்லி வருத்தப்படும் தனம், கடையை திறக்க செல்லும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

அப்போது எல்லாரும் என்னை நம்பி வந்துவிட்டார்கள் இப்போது என்னால் முடியாது என சொல்ல முடியாது என சொல்கிறார். உடனே கோபி உனக்கு தலைக்கனம் அதிகம் ஆகிவிட்டது அம்மா அப்பாவை தனியாக விட்டுவிட்டு எதற்கு இதெல்லாம் செய்கிறாய். நான் தான் மாசம் மாசம் காசு கொடுக்கிறேன் அப்பறம் என்ன உனக்கு என சொல்லி சத்தம் போடுகிறார். நீ செய்வது எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. இந்த ஆர்டரில் நீ மாட்டிக் கொண்டு பிரச்சனை செய்ய போகிறாய் என சத்தம் போடுகிறார்.

உடனே பாக்கியா வருத்தத்துடன் வெளியே செல்கிறார். பின் எழில் நிற்க அமிர்தா அங்கே வருகிறார். நீங்க ஆபிஸ் போங்க நான் வருகிறேன் என சொல்கிறார். வீட்டில் இருந்து தான வரீங்க என கேட்க ஆமாம் உங்க வீட்டில் இருந்து தான் வருகிறேன் என சொல்கிறார். எதாவது நல்லதாக நடந்ததா என கேட்க, உங்க அம்மா செய்வது எல்லாமே அருமையாக இருக்கிறது என சொல்லி பெருமையாக சொல்கிறார் அமிர்தா. உடனே எழில் நீங்களும் எங்க வீட்டிற்கு வந்து விடுங்க என சொல்ல அப்போ என் அம்மா அப்பாவை யார் பார்ப்ப என சொல்கிறார்.

நெஞ்சுவலியால் துடிக்கும் வேணு , கண்ணம்மாவை வர வைக்க திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

உங்க அம்மா ஆபிஸ் வந்து உங்களிடம் சொன்னாங்க பார்த்திங்களா அப்பவே நான் அவங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டேன் என சொல்கிறார். எழில் அமிர்தாவை பார்ப்பதை பார்த்து அவரது நண்பன் எதோ சரி இல்லையே அந்தப் பொண்ணை காதலிக்கிறியா என கேட்கிறார். அதற்கு எழில் சிரிக்கிறார் கொஞ்சம் கொஞ்சமாக அமிர்தாவை எனக்கு பிடித்துள்ளது என சொல்கிறார். அவங்க ரொம்ப நல்லவங்க என சொல்லி பெருமையாக பேசுகிறார்.

அவங்க என்னிடம் பேசினால் நான் சந்தோசமாக இருக்கிறேன். அவங்க ஊருக்கு சென்ற அன்னைக்கு நான் மிகவும் வருத்தப்பட்டேன் என சொல்கிறார். அதுனால என்ன என எழில் கேட்க, அவங்க வீட்டில் என்னை நம்புறாங்க அதுனால என்னால எதுவும் பண்ணமுடியால, அமிர்தா அப்பா அம்மாவை என்னுடைய அப்பா அம்மா போல நினைக்கிறன். ஆனால் அமிர்தா மீது எனக்கு மிகவும் காதல் இருக்கிறது. ஆனால் அதற்காக நான் வந்திருக்கேன் என அமிர்தா அப்பா அம்மா நினைத்துவிட்டால் என்ன செய்வது என சொல்கிறார்.

பின் பாக்கியா கோபி திட்டியதை நினைத்து பார்க்கிறார். எல்லாருக்கும் என்ன பிரச்சனை என கேட்க எல்லாருக்கும் பணம் தான் பிரச்சனை என ஜெனி சொல்கிறார். அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என எழில் சொல்ல, வேலை செய்வதற்கு தேவையான எல்லா பொருள்களும் கேட்கிறார்கள் என சொல்ல, முதலில் என்ன பொருள் வாங்க வேண்டும் என எழுதுவோம். மளிகை பொருள்கள் வாங்க அட்வான்ஸ் பத்தாது என சொல்ல, நான் எவ்வளவு பணம் தேவை என முடிவு செய்து பின் தான் அவங்களிடம் பேசியிருக்க வேண்டும் எனக்கு எதுவும் தெரியவில்லை என சொல்கிறார்.

தமிழகத்தில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று மட்டும் 1,657 பேருக்கு தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

பணம் தான வேண்டும் நான் ஏற்பாடு செய்கிறேன் என எழில் கேட்க, தாத்தா நானும் செய்கிறேன் என சொல்கிறார். ஜெனி நான் தருகிறேன் என சொல்கிறார். அதெல்லாம் வேண்டாம் அவருக்கு தெரிந்தால் என்ன ஆகும் பணம் எல்லாம் வேண்டாம் எனக்கு நீங்க ஆதரவாக இருந்தால் மட்டும் போதும் என சொல்கிறார். எழில் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு கடன் கேட்போம் என சொல்லி திட்டமிடுகிறார். உடனே தாத்தா எல்லாத்தையும் தூக்கி போடு என சொல்கிறார்.

ஜெனி வேலைபார்த்து கொண்டிருக்க ஒரே எரிச்சலாக வருது, என்னால் வேலை செய்யவே முடியவில்லை. இப்படி தான் எப்பவும் இருக்கு என சொல்கிறார். நான் இப்போ தான் வேலையில் சேர்ந்திருக்கேன் ஆனால் நான் இப்படி இருந்தால் என்ன ஆகும் என கேட்கிறார். உடனே செழியன் நான் வெளிநாட்டிற்கு போக வாய்ப்பு வந்திருக்கு என சொல்கிறார். உடனே ஜெனி சந்தோசப்படுகிறார். நீயும் என்னுடன் வந்துவிடு என செழியன் சொல்ல ஜெனி அதிர்ச்சி அடைகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!