குழந்தை வேண்டுமா என யோசிக்கும் செழியன், பாக்கியாவிற்கு குவியும் பாராட்டுகள் – இன்றைய எபிசோட்!

0
குழந்தை வேண்டுமா என யோசிக்கும் செழியன், பாக்கியாவிற்கு குவியும் பாராட்டுகள் - இன்றைய எபிசோட்!
குழந்தை வேண்டுமா என யோசிக்கும் செழியன், பாக்கியாவிற்கு குவியும் பாராட்டுகள் - இன்றைய எபிசோட்!
குழந்தை வேண்டுமா என யோசிக்கும் செழியன், பாக்கியாவிற்கு குவியும் பாராட்டுகள் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா என மறுபடியும் யோசித்து பார்க்க சொல்கிறார் செழியன். பின்னர் ஜெனி வேலைக்கு கிளம்புகிறார். கோபி பாக்கியாவிடம் தாத்தா ஆக இருப்பதை நினைத்து கவலைப்படுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி தூங்க சென்று செழியனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது செழியன் இந்த குழந்தை வேண்டுமா என முடிவு செய்வோம் என சொல்கிறார். இன்னும் குழந்தை வேண்டுமா என நினைக்கிறியா என ஜெனி கேட்க, ஆமாம் வீட்டில் எல்லாரும் சந்தோசமாக இருக்கிறார்கள், ஆனால் இது நம்ம பொறுப்பு, அதை இப்பவே செய்ய வேண்டாம் என செழியன் சொல்கிறார். வீட்டில் இருப்பவர்கள் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லிருக்காங்க என ஜெனி சொல்ல, நம்ம தான பெற்றோர் எல்லா பொறுப்பும் நம்ம மேல தான் வரும் என செழியன் சொல்கிறார்.

ஜெனி என்ன சொல்வதென்று தெரியாமல் தூங்குகிறார். பின்னர் காலையில் எழுந்து கீழே வர பாட்டி நன்றாக தூக்கம் வந்ததா, வாந்தி வருகிறது என நினைக்காதே குழந்தை வயிற்றில் இருக்கும் வரை தான் எல்லா கஷ்டமும், அதன் பின்னர் எதுவும் செய்து நாங்க வளர்த்து கொள்கிறோம் என சொல்கிறார். உடனே தாத்தா ஆமாம் இனியாவை அப்படி தான் வளர்த்தேன், என்னுடன் கடைக்கு எல்லாம் வருவாள், ஆனால் இப்போ அதற்குள் 10வது சென்று விட்டாள் அது போல சீக்கிரமாக குழந்தை வளர்ந்துவிடுவாள் என சொல்கிறார்.

கண்ணன் தான் லட்சுமி அம்மா இறப்பிற்கு காரணம் என சொல்லும் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

மேலும் உன் குழந்தையை கடைக்கு கோவிலுக்கு என தூக்கிக் கொண்டு செல்வேன் என தாத்தா சொல்ல, உடனே பாட்டி அப்போ உன் குழந்தையை சர்ச் கூட்டிக் கொண்டு போவியா என கேட்கிறார். தாத்தா இந்த நேரத்தில் இதெல்லாம் எதற்கு என கேட்க, பாக்கியாவும் முதலில் குழந்தை நல்லபடியாக பிறக்கட்டும் அதன் பின்னர் எல்லாம் பேசலாம் என சொல்கிறார். ஜெனிக்கு அதை கேட்டதும் ஒரு மாதிரி ஆகிறது.

பின் கோபி அமர்ந்திருக்க செழியனும் ஜெனியும் அலுவலகம் செல்ல கிளம்புகின்றனர். கோபி எல்லாம் கேள்வி பட்டேன் ரொம்ப சந்தோசம். ஆனால் அதற்காக வேலையை விட கூடாது என சொல்கிறார். பாக்கியா அங்கே வந்து ரொம்ப வாந்தியாக இருக்கு இன்னும் இரண்டு நாள் லீவ் போட்டு பின்னர் செல்லலாம் என சொல்கிறார். அதெல்லாம் இல்லை வேலைக்கு சேர்ந்து சில நாள் தான் ஆகிறது. இப்போ லீவு போட முடியாது என செழியன் சொல்கிறார்.

இரட்டை குழந்தை பற்றி சொல்லி கண்ணம்மாவை பிளாக்மெயில் செய்யும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

பின்னர் ஜெனி நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி கிளம்புகிறார். கோபி பாக்கியாவிடம் எதோ சொல்ல வருகிறார். ஆனால் அவர் சொல்ல முடியாமல் இருக்க என்னாச்சு என பாக்கியா கேட்கிறார். உண்மையாகவே நான் தாத்தா ஆகிவிட்டன என கோபி கேட்க ஆமாம் செழியன் உங்க பையன் தான என சொல்கிறார். இந்த வயதில் நான் தாத்தா என்று சொன்னால் என்ன ஆகும் என கோபி வருத்தப்படுகிறார். எல்லாருக்கும் உங்க வயசு தெரியும் அதுனால எதுவும் சொல்லமாட்டாங்க என பாக்கியா ஆறுதல் சொல்கிறார்.

பாக்கியாவும் செல்வியும் ஒரு பெரிய வீட்டிற்கு சாப்பாடு கொடுக்க செல்கிறார். அப்போது அங்கே சாப்பாடு வாங்க வந்த வேலைக்கார பெண், அம்மா உங்களை பார்க்க வேண்டும் என சொன்னதாக சொல்கிறார். ஒரு வேளை சாப்பாடு நன்றாக இல்லை என சொல்ல இருக்குமோ என பாக்கியாவும் செல்வியும் பதட்டத்தில் இருக்கின்றனர். அப்போது அங்கே வந்த ஒரு பெண் பாக்கியாவை உள்ளே அழைத்து உக்கார வைக்கிறார். சாப்பாடு மிகவும் நன்றாக இருந்ததாக அவர் சொல்கிறார்.

தாயின் முகத்தை இறுதியாக பார்க்க கண்ணன் வருவாரா? ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!

தன்னுடைய கணவர் இதுவரை வெளியே வாங்கி சாப்பிட்டு வயிறு சரி இல்லை என சொல்வார். ஆனால் உங்க சாப்பாடு ஊர் பக்கம் இருக்கும் சாப்பாடு போல உள்ளதாக சொன்னார் என சொல்லி பாராட்டுகிறார். இதை கேட்டு செல்வியும் பாக்கியாவும் சந்தோசப்பட்டு, வேறு என்ன சாப்பிட வேண்டுமோ சொல்லுங்க என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். வெளியே வந்த பாக்கியாவும் செல்வியும் எவ்வளவு நல்ல மனது அவர்களுக்கு என சொல்லி சந்தோசப்படுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!