ஜெனி கர்ப்பமாக இருப்பதை அறிந்து சந்தோசப்படும் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
ஜெனி கர்ப்பமாக இருப்பதை அறிந்து சந்தோசப்படும் குடும்பத்தினர் - இன்றைய
ஜெனி கர்ப்பமாக இருப்பதை அறிந்து சந்தோசப்படும் குடும்பத்தினர் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
ஜெனி கர்ப்பமாக இருப்பதை அறிந்து சந்தோசப்படும் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், மருத்துவமனைக்கு சென்று கர்ப்பத்தை உறுதி செய்த பின்னர் பாக்கியா மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார். பின்னர் ஜோசப் மரியம் வந்து தங்களது மகிழ்ச்சியை தெரிவிக்கின்றனர்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவை அழைத்து கொண்டு ஜெனியும் செழியனும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்கின்றனர். அப்போது 60 நாள் கரு உருவாகி இருக்கு என டாக்டர் சொல்லி மருந்து மாத்திரைகளை எழுதி கொடுத்து இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் என சொல்கிறார். பின்னர் வெளியே வந்ததும் செழியனை மருந்து வாங்க சொல்கிறார் பாக்கியா. பாக்கியாவும் ஜெனியும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து சந்தோசத்தை வெளிப்படுத்துகின்றனர்.

அதன் பின்னர் வீட்டிற்கு வந்ததும் இனியா எப்போது பாப்பா பிறக்கும் என கேட்கிறார். இந்த வயசில் நான் அத்தை ஆக போகிறேன் என மகிழ்ச்சியில் இருக்க பாட்டி தாத்தாவை கிண்டல் செய்கிறார். அப்போது ஜெனியின் அம்மா அப்பா வருகின்றனர். அவர்கள் தங்களது சந்தோசத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அப்போது செழியனை வர சொல்லி ஜோசப் பரிசு கொடுக்கிறார். பின்னர் உடலை நன்றாக பார்த்துக்க சொல்கிறார்.

லட்சுமி அம்மா இறப்பை தாங்க முடியாமல் கதறி அழும் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

நீண்ட நாட்களுக்கு பின்னர் அமிர்தா குடும்பத்தில் இருந்து வர, ரொம்ப நாள் பார்க்கலாம் இருக்க ஒரு மாதிரி இருந்தது என சொல்கிறார். அமிர்தா காசு கொண்டுவந்து கொடுக்க, எதற்கு என கேட்கிறார். நீங்க உதவி செய்வது எல்லாம் சரி ஆனால் அதற்காக எல்லாம் நீங்க செய்தால் சரியாக இல்லை என சொல்லி காசு கொடுக்கிறார். அப்போது ஊரில் இருந்து எழிலிற்கு ஸ்னாக்ஸ் வாங்கி வந்து குடும்பத்தில் அனைவருக்கும் கொடுக்க சொல்கிறார்.

பின்னர் கோபி ராதிகா வீட்டிற்கு செல்ல சாப்பிட்டீங்களா என கேட்கிறார். மயூராவிற்கு கோபி லாலிபாப் வாங்கி வருகிறார். எதற்கு கோபி என கேட்க மயூரா ஆசைபட்ட நான் எல்லாம் கண்டிப்பாக வாங்கி தருவேன் என சொல்கிறார். குழந்தை ஆசைப்பட்டால் உடனே வாங்கி தருவது நமது கடமை என கோபி சொல்கிறார். மயூராவை நன்றாக சாப்பிட சொல்லி, உனக்கு என்ன வேண்டும் என்றாலும் என்னிடம் கேளு என சொல்ல, நீங்களும் சாப்பிடுங்க கோபி என சொல்கிறார்.

இரட்டை குழந்தைகள் பற்றி அகிலிடம் கேட்கும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

இந்த வாரம் பீச் போலாமா என கோபி கேட்கிறார். பின்னர் பாக்கியா டாக்டர் சொன்ன மாத்திரைகளை சரியாக சாப்பிடு என சொல்கிறார். இனிமேல் நீ தான் ஜெனியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என செழியனிடம் பாக்கியா சொல்கிறார். எழில் அங்கே வந்து தனது மகிழ்ச்சியை தெரிவிக்கிறார். நீ சித்தப்பா ஆக போகிறாய் என சொல்ல, பாக்கியா நீ பாட்டி ஆக போகிறாய் என சொல்கிறார். குறைந்த வயதில் பாட்டி ஆனது நீங்க தான் என பாக்கியாவை சொல்கிறார்.

வயதெல்லாம் முக்கியம் இல்லை, நல்ல விஷயம் எப்போ நடந்தால் என்ன என்று பாக்கியா சொல்கிறார். பாக்கியா ஜெனியை பத்திரமாக இருக்க சொல்லி தூங்க சொல்கிறார். செழியனை நன்றாக பார்த்துக் கொள்ள சொல்கிறார். ஜெனி மாடிக்கு வந்ததும், என் மேலே கோவமா என கேட்கிறார். உன் மேலே கோவம் இல்லை ஆனால் இது இனிமேல் வேண்டுமா வேணாமா என முடிவு செய்யாமல் வீட்டில் அனைவரிடமும் சொல்லிட்டோம் என சொல்கிறார்.

இனிமேல் இருக்கட்டுமா என நினைக்கிறியா என ஜெனி கேட்க ஆமாம், இது பற்றி இப்போது நினைக்க வேண்டாம், எனக்கு மிகவும் தலை வலியாக உள்ளது என சொல்கிறார். ஜெனி இவன் ஏன் இப்படி இருக்கிறார் என நினைக்கிறார். எழில் அமிர்தா வீட்டில் கொடுத்த ஸ்னாக்ஸ் எடுத்து பாக்கியாவிடம் கொடுக்கிறார். பின்னர் எழில் நடந்ததை எல்லாம் பாக்கியாவிடம் சொல்கிறார். நான் இருந்தால் இதான் சொல்லிருப்பேன் என சொல்ல, செல்விக்கும் ஸ்னாக்ஸ் கொடுக்கிறார். கோபி அங்கே வர, பாக்கியா முக்கியமான விஷயம் என சொல்கிறார். அவரிடம் உடனே பாக்கியா சந்தோஷத்தில் நான் பாட்டியாக போறேன் என சொல்லி, நீங்க தாத்தாவாக போறீங்க என சொல்கிறார். அதாவது நம்ம ஜெனி மாசமாக இருக்கிறார் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!