ராதிகா புதிய கார் வாங்க உதவி செய்யும் கோபி,ஜெனியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
ராதிகா புதிய கார் வாங்க உதவி செய்யும் கோபி,ஜெனியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பாக்கியா - இன்றைய
ராதிகா புதிய கார் வாங்க உதவி செய்யும் கோபி,ஜெனியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பாக்கியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
ராதிகா புதிய கார் வாங்க உதவி செய்யும் கோபி,ஜெனியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்டு பாக்கியா அவரை கவனமாக பார்த்துக் கொள்கிறார். செழியனுக்கும் ஜெனிக்கும் இடையே இருக்கும் பிரச்சனை பற்றி பாக்கியாவிடம் ஜெனி சொல்கிறார். செழியன் பாக்கியா ஜெனி மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி மாசமாக இருப்பதை தெரிந்துக் கொண்ட பாக்கியா அவரை நன்றாக பார்த்து கொள்கிறார். செல்வி அங்கே வர எனக்கு அப்பவே தெரியும் ஜெனி மூஞ்சியில் ஒரு கலை இருந்தது. நான் அப்பவே சொன்னேன்ல என செல்வி சொல்கிறார். ஆனால் ஜெனி சோகத்தில் இருக்க என்னாச்சு என செல்வி கேட்கிறார். அப்போது பாக்கியா ஜெனிக்கு வாந்தி வந்ததால் பயந்துவிட்டால் என சொல்கிறார். பின்னர் ஜெனிக்கு இன்னும் 5 மாதங்களுக்கு வாந்தி வரும் என செல்வி சொல்கிறார்.

உடனே பாக்கியா அவளை பயமுறுத்தாத, அவளுக்கு எல்லாம் சரியாகி விடும் நீ ஜூஸ் குடி என சொல்கிறார். பின்னர் கோபியும் மயூராவும் விளையாடி கொண்டிருக்க, ராதிகா போனில் பேசிக் கொண்டிருக்கிறார். என்னாச்சு என கோபி கேட்க புதிதாக கார் வாங்க போறேன் என சொல்கிறார். அதுக்காக லோன் வாங்க இருப்பதாக சொல்கிறார். கோபி என்னிடம் காசு இருக்கிறது என சொல்ல அதெல்லாம் வேண்டாம் என ராதிகா சொல்கிறார். மயூரா லாலிபாப் சமைத்து தர சொல்ல, ராதிகா இப்போ செய்ய முடியாது என சொல்கிறார்.

திருச்சிக்கு செல்லும் கண்ணன், லட்சுமி அம்மா இறந்துவிட்டதாக சொன்ன டாக்டர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

அப்போ நான் பாக்கியா ஆண்டியிடம் கேட்கிறேன் என சொல்கிறார். நான் இப்போ வீட்டில் சமைப்பது இல்லை அதனால் ரொம்ப சோம்பேறி ஆயிட்டேன் என ராதிகா சொல்கிறார். நான் உதவி செய்கிறேன் என சொன்னேன் ஆனால் நீ கேட்பதாக இல்லை என கோபி சொல்கிறார். அதன் பின்னர் ஜெனி சோகமாக அமர்ந்திருக்க பாக்கியா என்ன நடந்தது என கேட்கிறார். ஒன்றுமில்லை ஆன்டி என ஜெனி சமாளிக்க, எதுவும் பிரச்சனையா இருவரும் சந்தோஷமாகவே இல்லை என பாக்கியா கேட்கிறார்.

ஜெனி செழியன் இப்போ குழந்தை எதிர்பார்க்காததால் குழப்பத்தில் இருப்பதாக சொல்கிறார். எத்தனை பேர் குழந்தை இல்லாமல் இருக்கின்றனர். உங்களுக்கு கிடைத்ததை நினைத்து சந்தோசப்பட வேண்டும் என பாக்கியா சொல்கிறார். இல்லை செட்டில் ஆன பின்னர் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என செழியன் சொல்வதாக ஜெனி சொல்கிறார். நீங்க குழந்தையை பெற்று என்னிடம் கொடுத்துவிட்டு இருவரும் வேலைக்கு போங்க என பாக்கியா சொல்லி சமாதானம் செய்கிறார்.

லட்சுமிக்கு ட்ரெஸ் கொடுக்க செல்லும் ஹேமா, இரட்டை குழந்தைகள் குழப்பத்தில் இருக்கும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

செழியன் பாக்கியா ஜெனி மருத்துவமனைக்கு செல்ல நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர். செழியன் ஜெனியிடம் அம்மாவை விட்டுவிட்டு வந்திருக்கலாம் என சொல்ல, அவங்க கிளம்பிட்டாங்க என ஜெனி சொல்கிறார். பின்னர் டெஸ்ட் செய்தாலும் குழந்தை இல்லாமல் போக வாய்ப்புள்ளதா என செழியன் கேட்க, பாக்கியா அந்த கிட்டில் இரண்டு கொடு வந்துவிட்டால் கட்டாயம் குழந்தை இருக்கும் நீ பயப்படாத என சொல்கிறார். டாக்டரை பார்க்க செல்ல, ஜெனியை அழைத்து சென்று செக் செய்கிறார். டாக்டர் வெளியே வந்து 60 நாள் குழந்தை உள்ளது என சொல்கிறார். பாக்கியாவும் ஜெனியும் சந்தோசப்பட, செழியன் கோபத்துடன் ஜெனியை பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது .

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!