செழியன் பற்றி பெற்றோர்களிடம் சொல்லும் ஜெனி, பிக்னிக் போக தடை போடும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
செழியன் பற்றி பெற்றோர்களிடம் சொல்லும் ஜெனி, பிக்னிக் போக தடை போடும் கோபி - இன்றைய
செழியன் பற்றி பெற்றோர்களிடம் சொல்லும் ஜெனி, பிக்னிக் போக தடை போடும் கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
செழியன் பற்றி பெற்றோர்களிடம் சொல்லும் ஜெனி, பிக்னிக் போக தடை போடும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி செழியன் குழந்தை விஷயத்தில் நடந்து கொள்வது பற்றி தனது அம்மா அப்பாவிடம் சொல்கிறார். பின் இனியா ராதிகாவுடன் பிக்னிக் செல்ல வேண்டாம் என கோபி சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் படத்தில் நடிக்க ஒரு நடிகர் வரவில்லை என சொல்லி மீட்டிங்கில் பேசுகிறார். அப்போது அமிர்தா ஒரு திட்டம் சொல்ல அது போல செய்து அவரிடம் எழில் சம்மதம் வாங்குகிறார். மறுபக்கம் மயூரா ராதிகா மீது கோவமாக இருக்க, அந்த நேரம் பார்த்து கோபி வருகிறார். உடனே என்ன பிரச்சனை என கேட்க, அம்மா என்னை கடைக்கு கூட்டிக் கொண்டு போகமாட்டேன் என சொல்லிவிட்டார் என கோவமாக சொல்கிறார். உடனே கோபி என்னாச்சு என கேட்க, நாளைக்கு பிக்னிக் போக போறோம் அதுனால் இப்போது முடியாது என ராதிகா சொல்கிறார்.

உடனே மயூரா நாங்க பிக்னிக் போக தேவையான பொருள் வாங்க தான் சொல்றேன் என சொன்னதும் கோபி அவளை அழைத்து கொண்டு கடைக்கு சென்றுவிட்டு வருகிறார். உடனே மயூரா ரொம்ப சந்தோசமாக இருக்க குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்கிறீங்க என கேட்கிறார். உடனே கோபி மயூராவை பார்த்ததும் என் மகள் ஞாபகம் தான் வருகிறது என சொல்கிறார். பின் மயூ ஒரு உதவி கேட்க கோபி வேகமாக சென்று செய்கிறார். மறுபக்கம் ஜெனி அவர் அம்மாவிடம் சந்தோசமாக பேசிக் கொண்டிருக்க அவர் அப்பா வருகிறார்.

குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வரும் தனம், வாசலில் குழந்தை முகத்தை பார்த்த கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அப்போது செழியன் போன் செய்ய ஜெனியின் அப்பா எடுத்து கொடுக்கிறார். ஆனால் ஜெனி பேசாமல் போனை வைத்துவிடுகிறார். நான் அப்பறமாக பேசுகிறேன் என சொல்ல, அவரை வீட்டிற்கு வர சொல்லு என ஜெனியின் அம்மா சொல்கிறார். ஆனால் அவன் அங்கையே இருக்கட்டும் என ஜெனி சொல்கிறார். மீண்டும் செழியன் போன் செய்ய ஜெனி பேசாமல் இருக்கிறார். பின் ஜெனியின் அம்மா இருவருக்கும் எதாவது பிரச்சனையா என கேட்க, ஜெனி அவர் அப்பா மீது சாய்ந்து அழுகிறார்.

ஜெனி அம்மா என்ன நடந்தது என கேட்க, ஜெனி நான் மாசமாக இருந்ததை நினைத்து வீட்டில் அனைவரும் சந்தோசமாக இருந்தார்கள். ஆனால் நான் சந்தோசமாக இருக்கவே இல்லை செழியன் என்னை இருக்கவிடவில்லை என சொல்லி அனைத்து உண்மையையும் சொல்கிறார். குழந்தையை கலைக்க அவர் திட்டமிட்டதை சொல்லி அழுகிறார். உடனே ஜெனி அப்பா கோவப்பட்டு இருக்க ஜெனி அம்மா அமைதியாக இருக்க சொல்கிறார்.

ஹேமாவிடம் உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா, தடுக்க வரும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

பாக்கியா வீட்டில் இனியா சந்தோசமாக இருக்க, கோபி இனியாவிற்கு சாக்லேட் வாங்கி கொடுக்கிறார். பாக்கியா இவ்வளவு சாக்லேட் வேண்டாம் என சொல்ல, சும்மா இரு என பாட்டி அமைதியாக இருக்கிறார்கள். நாளைக்கு நான் பிக்னிக் போறேன் என இனியா சொல்ல ஸ்கூலில் இருந்தா என கோபி கேட்கிறார். ஆனால் இனியா அம்மா நண்பருடன் என சொல்ல, கோபி பாக்கியாவிடம் பாதுகாப்பு தான என கேட்கிறார். உடனே பாக்கியா எதுவும் பிரச்சனை இல்லை என சொல்ல, கோபி போக சொல்கிறார். உடனே பாக்கியா வேற யாரும் இல்லை ராதிகா கூட தான் போகிறாள் என சொல்கிறார்.

உடனே கோபி வேண்டாம் என சொல்ல, இனியா நான் போவேன் என அழுகிறார். உடனே கோபி நான் கூட்டிக் கொண்டு செல்கிறேன் அவர்களுடன் போக வேண்டாம் என சொல்கிறார். உடனே இனியா பிடிவாதமாக இருக்க பாட்டி அவள் போயிட்டு வரட்டும் என பேசுகிறார். இந்த வீட்டில் ஒரே பிரச்சனை அவள் சந்தோசமாக இருக்கட்டும் என சொல்ல. கோபி சரி போகட்டும் என சொல்கிறார். பின் பாக்கியாவை அழைத்து கோபி இனியாவை தனியாக அனுப்பியது சரியாக வராது என சொல்கிறார்.

தனியாக இல்லை ராதிகா உடன் தான போகிறாள் என சொல்ல, பாக்கியா அதெல்லாம் பிரச்சனை இல்லை என சொல்ல கோபி என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறார். அவங்க கூப்பிட்டதும் சரி என இனியா சொல்லிவிட்டாள் நானும் உடன் போயிட்டு வரவா என பாக்கியா கேட்க, கோபி பிரச்சனை என்று வந்தால் அதை இரண்டாக ஆகிவிடுகிறாய் என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here