குடித்துவிட்டு ராதிகா வீட்டில் கலாட்டா செய்யும் கோபி, கோவப்பட்ட ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
குடித்துவிட்டு ராதிகா வீட்டில் கலாட்டா செய்யும் கோபி, கோவப்பட்ட ராதிகா - இன்றைய
குடித்துவிட்டு ராதிகா வீட்டில் கலாட்டா செய்யும் கோபி, கோவப்பட்ட ராதிகா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
குடித்துவிட்டு ராதிகா வீட்டில் கலாட்டா செய்யும் கோபி, கோவப்பட்ட ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி திட்டியதால் இனியா வருத்தப்படுவார் என்பதால் பாக்கியா அவரை அழைத்து கொண்டு வீட்டிற்கு வருகிறார். பின் கோபி குடித்துவிட்டு ராதிகா வீட்டிற்கு செல்ல கோபி ஏமாற்றியதாக ராதிகா நினைக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில்,பாக்கியா இனியாவை அழைத்து கொண்டு வீட்டிற்கு வருகிறார். அப்போது ஜெனி இனியாவை பார்த்துவிட்டு ஆன்டி உன்னை கூட்டி கொண்டு தான் வருவார் என நினைத்தேன் என சொல்கிறார். அப்போது இனியா அப்பா போகிற வழி எல்லாம் என்னிடம் சாரி கேட்டதாக சொல்கிறார். ஜெனி கோபியின் நடவடிக்கைகள் எதுவும் சரி இல்லை என்பதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காட்டுவோம் என சொல்கிறார். ஈஸ்வரி கொஞ்ச நாள் பார்த்துவிட்டு பின் செல்வோம் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

மறுபக்கம் கோபி ராதிகா பேசியதை தாங்க முடியாமல் தண்ணீர் அடித்து கொண்டிருக்கிறார். தனது நண்பரிடம் யாரோ ஒருவன் சொன்னதற்காக என்னை சந்தேகப்படுகிறாள் என சொல்லி புலம்புகிறார். பின் ராதிகா மூர்த்தி சொன்னதை நினைத்து பார்க்கிறார். அவர் நல்லவர் இல்லை என மூர்த்தி சொன்னதையும் அதற்கு கோபி யாரோ சொன்னதை நம்புவதாக கோவப்பட்டதையும் நினைத்து பார்க்கிறார். மயூரா ஹோம்ஒர்க் சொல்லி கொடுக்க வர சொல்ல ஆனால் ராதிகா கோபியை நினைத்து யோசித்து கொண்டிருக்கிறார்.

பின் கோபியின் நண்பர் உனக்கு ராதிகா உடன் வாழ கொடுத்து வைக்கவில்லை நீ வேற வேலையை பாரு என சொல்ல நான் சொல்வது ஏன் உனக்கு புரியவில்லை, நான் ராதிகாவை பிரிய வேண்டும் பாக்கியா உடன் நடை பிணமாக நான் எப்படி வாழ்வது, ராதிகாவையும், மயூராவையும் பார்க்காமல் எப்படி நான் வாழ முடியும் என கோபி சொல்கிறார். பின் மயூரா மீண்டும் வந்து ராதிகாவை கூப்பிட ராதிகா நான் வருகிறேன் என சொல்கிறார். பின் ஜூஸ் வேண்டும் என கேட்டு ராதிகாவுக்கு மயூரா கொண்டு வருகிறார். ஏன் சோகமாக இருக்கீங்க என மயூரா கேட்க உங்களை பார்த்தால் பாவமாக இருப்பதாக சொல்கிறார்.

தனத்தின் பிறந்தநாளை கொண்டாடிய குடும்பத்தினர், பரிசு கொடுத்த முல்லை மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

ராதிகா கோபிக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பி வைக்கிறார். அதில் நாம இருவரும் ஒன்றாக இருக்க போகிறோம் என சொன்னீங்க ஆனால் இப்போது ராஜேஷ் உனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என சொல்கிறார். உங்களைநம்பி மயூராவை பழக வைத்தேன் பாரு என மெசேஜ் அனுப்புகிறார். பின் கோபியின் நண்பர் ராதிகா புத்திசாலி கண்டுபிடித்துவிடுவாள் என நான் சொன்னேனே என சொல்ல கோபி நான் ராதிகாவை பயன்படுத்த பழகவில்லை என சொல்கிறார். நானும் மயூராவை என்னுடைய மகள் போல பார்க்கிறேன் என சொல்கிறார்.

பின் கோபி குடித்துவிட்டு ராதிகா வீட்டிற்கு வருகிறார். அப்போது மயூரா வந்து கதவை திறக்க கோபி மீது வாடை வருவதாக சொல்கிறார். அப்போது அப்பா மீது அடிக்கும் அதே வாடை வருவதாக சொல்ல, ராதிகா குடித்திருக்கிங்களா என கேட்கிறார். ஆமாம் என கோபி சொல்ல நீ ஏன் என்னை நம்பாமல் இருக்கிறாய் என கேட்கிறார். அப்போது ராதிகா உங்க குடும்பத்தை காட்ட சொன்னேன் அதை செய்யாமல் இருக்கீங்க அப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here