சாதனையை சிறப்பாக செய்து முடித்த பாக்கியா, திரும்ப தொடங்கிய தொழில் – “பாக்கியலட்சுமி” சீரியல் இன்றைய எபிசோட்!

0
சாதனையை சிறப்பாக செய்து முடித்த பாக்கியா, திருப்ப தொடங்கிய தொழில் -
சாதனையை சிறப்பாக செய்து முடித்த பாக்கியா, திருப்ப தொடங்கிய தொழில் - "பாக்கியலட்சுமி" சீரியல் இன்றைய எபிசோட்!
சாதனையை சிறப்பாக செய்து முடித்த பாக்கியா, திரும்ப தொடங்கிய தொழில் – “பாக்கியலட்சுமி” சீரியல் இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா 1 மணி நேரத்தில் 100 உணவுகளை சமைத்து சாதனை செய்துவிட்டார். அதனால் பாத்திரையாளர்களிடம் பேட்டி கொடுத்து தனது மீது தவறு இல்லை என நிரூபித்துவிடுகிறார். பின் தனது தொழிலை புது பொலிவுடன் தொடங்குகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா 1 மணி நேரத்தில் 100 உணவுகளை சமைக்க இருப்பதாக தொடங்கிய டாஸ்கில் விறுவிறுப்பாக சமைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது எழில் செல்வி ஜெனி அவருக்கு உற்சாகப்படுத்தும் படி பேசுகிறார்கள். பின் நேரம் முடிந்துவிட பாக்கியா 98 உணவுகளை சமைத்து வைக்கிறார். பின் பத்திரிகையாளர் என்ன 98 தான் இருக்கிறது என கேட்க ஜெனி வேகமாக சென்று ஒரு பாத்திரத்தை கொண்டு வந்து வைக்கிறார். அப்போதும் 99 தான் இருக்கிறது ஆனால் அது சாதனை தான் இருந்தாலும் நீங்க 100 உணவுகளை சமைப்பதாக சொன்னீர்கள் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது பாக்கியா சென்று ஊறுகாய் கொண்டு வந்து வைக்கிறார். அதை பார்த்து எல்லாரும் பாராட்டுகின்றனர். பின் பத்திரிகையாளர்கள் இப்படி ஒரு சாதனை செய்ய யார் காரணம் என கேட்க நீங்க தான் காரணம் என் மீது தவறு என எழுதிய நீங்க அது என்னால் வந்தது இல்லை என தெரிந்து நீதிமன்றமே என்னை வெளியே விட்டுவிட்டது. ஆனால் அதை நீங்க எழுதவில்லை. உங்களால் தான் என்னுடைய வாடிக்கையாளர்கள் சென்றுவிட்டார்கள் என்னிடம் வேலை செய்தவர்கள் விலகிவிட்டார்கள் எல்லாம் நீங்க எழுதியதால் தான் என சொல்கிறார். பின் அவர்கள் மன்னிப்பு கேட்டு பாக்கியாவை பாராட்டுகிறார்கள்.

மறுபக்கம் கோபி ராதிகாவிடம் உனக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் ஆனால் அந்த டீச்சர் மீது என்ன அக்கறை என கேட்கின்றனர். அப்போது டீச்சர் எல்லாரிடமும் அன்பாக இருப்பார் உங்களை திருமணம் செய்வது பற்றி டீச்சரிடம் சொல்லலாம் அவர்கள் நமக்கு போதும் என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். பின் கோபி என்னைக்காவது உண்மை தெரிந்தால் என்ன ஆகும் என கேட்கிறார். பின் ராமமூர்த்தி ஈஸ்வரி பாக்கியாவை நினைத்து சந்தோசமாக இருக்கிறார்கள். அப்போது பாக்கியா வர டிவியில் பார்த்தோம் நன்றாக செய்தாய் என சொல்கிறார். எல்லாரும் பாக்கியாவை பார்த்து பெருமைப்படுகிறார்கள். இனியா ஸ்கூலில் பாக்கியா செய்த சாதனை பற்றி பேசியதாக சொல்கிறார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மத்திய அரசு அறிவிப்பு!

பின் பாக்கியா அலுவலகத்திற்கு செல்ல மீண்டும் வந்ததை நினைத்து சந்தோசமாக இருக்கிறார். பின் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வருகிறார்கள். நீங்க சமைத்து சாதனை செய்ததை டிவியில் பார்த்தேன் ரொம்ப சந்தோசம் அதற்கு அப்பறம் நீங்க பேசியதை பார்த்து எனக்கு வருத்தமாக இருந்தது நாங்க மீண்டும் வேலைக்கு வரவா என கேட்க சரி என பாக்கியா சொல்கிறார். பின் எழில் அமிர்தா வீட்டிற்கு வர ஜானு பிறந்தநாளுக்கு போவோம் என சொல்கிறார் நிலாவை கூட்டிட்டு போவோம் என எழில் சொல்ல ஆனால் அமிர்தா வேண்டாம் என சொல்கிறார். எழில் நீங்க என்றால் நிலாவும் சேர்ந்து தான் என சொல்ல அமிர்தா எழிலை நினைத்து பெருமைப்படுகிறார்.

மறுபக்கம் பாக்கியா அலுவலகத்தில் வேலை பார்க்க அப்போது வாடிக்கையாளர்கள் போன் செய்து மீண்டும் போன் செய்து நாளை முதல் சாப்பாடு கொண்டு வாருங்கள் என சொல்கிறார். டிவியில் உங்களது சாதனையை பார்த்தோம் உங்களை தவறாக நினைத்துவிட்டோம் என பேசுகின்றனர். அதை நினைத்து பாக்கியா சந்தோசப்படுகிறார். பின் அலுவலகத்திற்கு ராதிகா வருகிறார். அப்போது பாக்கியாவை நினைத்து பெருமையாக இருப்பதாக சொல்கிறார். பாக்கியா ராதிகாவுக்கு நன்றி சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here