அமிர்தா காதலை சொன்னதால் சந்தோஷத்தில் எழில், புது முயற்சியை தொடங்கிய பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
அமிர்தா காதலை சொன்னதால் சந்தோஷத்தில் எழில், புது முயற்சியை தொடங்கிய பாக்கியா - இன்றைய
அமிர்தா காதலை சொன்னதால் சந்தோஷத்தில் எழில், புது முயற்சியை தொடங்கிய பாக்கியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
அமிர்தா காதலை சொன்னதால் சந்தோஷத்தில் எழில், புது முயற்சியை தொடங்கிய பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அமிர்தா பூ வைத்துவிட்டு வீட்டிற்கு வர தயக்கமாக இருக்க ஆனால் எழில் நான் இருக்கிறேன் என சொல்கிறார். பின் அமிர்தாவின் அம்மா அப்பா எழிலிடம் இதெல்லாம் நல்லபடியாக நடக்குமா என கேட்கிறார். எழில் அவர்களுக்கு உறுதி அளிக்கிறார். பின் பாக்கியா புது முயற்சியை எல்லாருடைய ஆதரவுடன் தொடங்குகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், அமிர்தா பூ வைத்து வீட்டிற்கு போக தயங்குகிறார். அப்போது அமிர்தாவின் அம்மா ஒரு மாதிரி பார்க்க நான் வேண்டாம் என தான் சொன்னேன் ஆனால் எழில் தான் வைக்க சொன்னதாக சொல்கிறார். பின் அமிர்தாவின் அம்மா அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை, நம்ம ஊரில் தான் எதாவது சொல்வார்கள் இங்கே யாரும் இல்லை சின்ன பெண் தான் நீ என சொல்கிறார். பின் அமிர்தாவின் அப்பா எழிலிடம் நான் ஒன்று கேட்க வேண்டும் இதெல்லாம் சரியாக வருமா என கேட்கிறார். அப்போது அமிர்தாவின் அம்மா உன் மீது நம்பிக்கை இல்லாமல் சொல்லவில்லை ஆனால் உனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அதெல்லாம் நான் யோசித்தேன் பிரச்சனை வரும் என எனக்கு தெரியும் ஆனால் நான் உறுதியாக இருப்பேன் என எழில் சொல்கிறார். உன்னுடைய பாட்டி தாத்தா எல்லாரும் ஒப்புக் கொள்ளமாட்டார் என சொல்ல என்னுடைய அம்மா எப்போதும் எனக்கு துணையாக இருப்பார் என எழில் சொல்கிறார். அதனால் அமிர்தா அப்பா அம்மாவிற்கு நம்பிக்கை வருகிறது. அமிர்தா காதலுக்கு சம்மதம் சொன்னதை நினைத்து எழில் நடனம் ஆடிக் கொண்டே வருகிறார். இனியா, பாக்கியா என அனைவரையும் பிடித்து எழில் நடனம் ஆடுகிறார். என்ன ஆச்சு என பாக்கியா கேட்க எழில் நான் மிகவும் சந்தோசமாக இருப்பதாக சொல்கிறார்.

என்ன விஷயம் என கேட்க ஆனால் எழில் எதுவும் சொல்லவில்லை. பின் பாக்கியா சமைக்க கிளம்ப எல்லாரிடமும் சொல்லிவிட்டு கிளம்புகிறார். கோபியிடம் சொல்ல உன்னுடைய இஷ்டம் என கோபி சொல்கிறார். பின் இனியா ஆல் தி பெஸ்ட் சொல்ல செழியன் முடியாவிட்டால் இப்போதே நிறுத்திக்கொள் என சொல்ல ஆனால் பாக்கியா என்னால் முடியும் என சொல்கிறார். பாக்கியா உடன் ஜெனி கிளம்ப ஆனால் செழியன் உன் அம்மா கேட்டால் என்ன பதில் சொல்வது என கேட்கிறார். பின் அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என ஜெனி சொல்கிறார்.

வெண்பா பாரதியை மறக்க ஷர்மிளா சொன்ன கண்டிஷன், சௌந்தர்யா பாரதிக்கு சொன்ன அறிவுரை – இன்றைய எபிசோட்!

பின் பாக்கியா சமையலுக்கு தேவையான வேலையை செய்கிறார். பாக்கியா பதட்டமாக இருக்க எழில் எல்லாம் சரியாக முடிந்துவிடும் என சொல்கிறார். பின் பத்திரிகையாளர்கள் வர பாக்கியா எல்லாத்தையும் எடுத்து வைக்கிறார். பின் ஜெனி இங்கே சாதனை நடக்க இருப்பதாக பேட்டி கொடுக்கிறார். ஏற்கனவே சமைத்த பொருளை கொண்டு வரவில்லையே என சொல்ல, இல்லை என ஜெனி சொல்கிறார். பாக்கியா கடவுளை வேண்டி கொண்டிருக்கிறார். ராதிகாவும் போனில் பாக்கியாவை பார்த்து சந்தோசப்பட கோபியிடம் சொல்ல அவர் கோபப்படுகிறார்.

பாக்கியா ஒன்றாக சமைக்க தொடங்க அப்போது பத்திரிகையாளர்கள் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றனர். ஜெனி எழில் செல்வி அமிர்தா பாக்கியாவை உற்சாகப்படுத்த 30 நிமிடம் ஆகிவிட்டது ஆனால் பாக்கியா பாதி கூட முடிக்காமல் இருக்கின்றனர். பின் பத்திரிகையாளர்கள் நம்பிக்கை இல்லாமல் இருக்க பாக்கியா வேகமாக சமைக்கிறார். பின் நேரம் முடிந்துவிட பாக்கியா எல்லாத்தையும் நல்லபடியாக செய்து முடிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here