கோபியை வெளியே துரத்திய ராதிகா, ஆறுதல் சொல்ல வந்த பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோபியை வெளியே துரத்திய ராதிகா, ஆறுதல் சொல்ல வந்த பாக்கியா - இன்றைய
கோபியை வெளியே துரத்திய ராதிகா, ஆறுதல் சொல்ல வந்த பாக்கியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோபியை வெளியே துரத்திய ராதிகா, ஆறுதல் சொல்ல வந்த பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா வீட்டிற்கு கோபி செல்ல மயூரா கோபியிடம் பேச கூடாது என சொல்கிறார். ஆனால் மயூரா கேட்காமல் இருக்க ராதிகா மயூராவை அடித்துவிடுகிறார். பின் கோபியை இனிமேல் வர வேண்டாம் என சொல்லி வெளியே தள்ளி கதவை மூடுகிறார். பின் பாக்கியா வீட்டிற்கு வந்து ராதிகாவுக்கு ஆறுதல் சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி எதுவும் சொன்ன நியாபகம் இல்லாமல் ராதிகா வீட்டிற்கு வருகிறார். அப்போது மயூரா மட்டும் இருக்க அம்மாவுடன் ஏன் சண்டை போட்டீங்க என கேட்கிறார். அப்போது ராதிகா வர உங்களுக்கு வெட்கமாக இல்லையா இங்கே வந்துருக்கீங்க என கேட்கிறார். அப்போது மயூரா கோபி அருகே நிற்க மயூராவை உள்ளே போக சொல்கிறார். ஆனால் மயூரா உள்ளே போகமாட்டேன் என சொல்ல அப்போது ராதிகா பயங்கர கோவமாக பேசுகிறார். பின் மயூரா எனக்கு பயமாக இருப்பதாக சொல்ல ராதிகா மயூராவை அடித்துவிடுகிறார்.

TN Job “FB  Group” Join Now

உள்ளே போ என சொல்ல மயூரா அழுது கொண்டே உள்ளே செல்கிறார். அப்போது கோபி நேற்று எதோ குடித்துவிட்டு வந்து விட்டேன் அதற்காக என் மீது இவ்வளவு கோவமா என கேட்கிறார். அப்போது ராதிகா என்னை பார்த்தால் துணை வேண்டும் என அலைவது போல இருக்கிறதா என கேட்கிறார். ஏன் இப்படி எல்லாம் பேசுகிறாய் என கோபி கேட்க, அப்போது ராதிகா என்னுடைய பிரண்ட் பாக்கியாவின் கணவர் என தெரிந்தும் உங்களுடன் பழகுவேன் என எப்படி நீங்க நினைக்கலாம் என கேட்கிறார். அப்போது கோபி எல்லா உண்மையையும் சொன்னதை நினைத்து பார்க்கிறார்.

பின் ராதிகா கோபி இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் என் மீதும் மயூரா மீது எவ்வளவு அக்கறையாக இருக்கிறார்கள் என ராதிகா பேசுகிறார். நீயும் மயூராவும் எனக்கு முக்கியம் என கோபி சொல்ல ராதிகா கோவப்பட்டு கோபியை வெளியே போக சொல்கிறார். கோபியை வெளியே தள்ளி கதவை மூடுகிறார். கோபிக்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது. மறுபக்கம் கோபியை நினைத்துக் கொண்டே பாக்கியா வேலை செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு – ஜூலையில் வருமா? முழு விவரம்!

அப்போது செல்வி சார் பற்றி நினைத்துக் கொண்டே வேலை சரியாக செய்யாமல் இருக்காதே என சொல்கிறார். பின் பாக்கியா என்னை பல தடவை பிடிக்கவில்லை என சொன்னதை நினைத்து தான் வருத்தமாக இருக்கிறது என சொல்கிறார். நான் ராதிகா வீட்டிற்கு சென்று பேசிவிட்டு வருகிறேன் அப்போது தான் எனக்கு மன நிம்மதியாக இருக்கும் என பாக்கியா கிளம்புகிறார். ராதிகா வீட்டில் கதவை தட்ட மயூரா தான் கதவை திறக்கிறார். அப்போது பாக்கியா ஏன் சோகமாக இருக்கீங்க என கேட்க அம்மா அங்கிள் கூட பேச கூடாது என சொல்லி அடித்ததாக சொல்கிறார்.

அம்மாவிற்கு எதாவது கோவம் இருந்துருக்கும் நீ கவலைப்படாதே என சொல்லி விளையாடிக் கொண்டே மயூராவை பாக்கியா சந்தோசப்படுத்துகிறார். அப்போது ராதிகா வர பாக்கியா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பாக்கியா ராதிகாவிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என கேட்க ராதிகா பதட்டம் அடைகிறார். மயூராவை ஏன் அடித்தீர்கள் என கேட்க ராதிகா ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார். உங்களுக்கும் உங்களை திருமணம் செய்ய இருப்பவருக்கும் எதாவது பிரச்சனையா என கேட்க ஆமாம் அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அவருடைய குடும்பத்தை பற்றி சொன்னது எல்லாம் பொய் என சொல்ல, பாக்கியா நீங்க திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக இருக்க வேண்டும் என ஆறுதல் சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!