மயூரா பேசியதை நினைத்து வருத்தப்படும் ராதிகா, தூங்க முடியாமல் கஷ்டபடும் கோபி – இன்றைய எபிசோட்!

0
மயூரா பேசியதை நினைத்து வருத்தப்படும் ராதிகா, தூங்க முடியாமல் கஷ்டபடும் கோபி - இன்றைய எபிசோட்!
மயூரா பேசியதை நினைத்து வருத்தப்படும் ராதிகா, தூங்க முடியாமல் கஷ்டபடும் கோபி - இன்றைய எபிசோட்!
மயூரா பேசியதை நினைத்து வருத்தப்படும் ராதிகா, தூங்க முடியாமல் கஷ்டபடும் கோபி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் மயூரா கோபி என்னை பார்க்க ஸ்கூலிற்கு வந்ததாக சொல்ல அப்போது ராதிகா மயூராவை இனிமேல் கோபியிடம் பேச கூடாது என சொல்ல ஆனால் மயூரா கேட்கவில்லை. உடனே ராதிகா மயூராவை அடித்துவிடுகிறார். மறுபக்கம் செழியன் அமிர்தாவிடம் எழில் பேசுவதை பாட்டியிடம் மாட்டிவிடுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் , ராதிகாவிடம் மயூரா கோபி அங்கிள் என்னை பார்க்க வந்ததாக சொல்ல ராதிகா அதை கேட்டு கோவப்படுகிறார், நம்மை நிம்மதியாகவே வாழ விடக் கூடாது என்பதால் தான் இப்படி செய்கிறார் போல என நினைத்து ராதிகா சத்தம் போட ராதிகாவின் அம்மா நீ செய்த தவறுக்கு குழந்தை என்ன செய்வாள் நீ இப்படி சத்தம் போடுவதால் குழந்தை பயப்படுகிறாள் என சொல்கிறார். அப்போது மயூரா கோபி அங்கிள் மிகவும் நல்லவர் அதனால் தான் நம்மை விட்டு கொடுக்க முடியாமல் இருக்கிறார் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் ராதிகா நான் சொல்வதை நீ கேட்க மாட்டியா என சொல்லி மயூராவை அடித்துவிடுகிறார். பின் ராதிகாவின் அம்மா ஏன் குழந்தையை அடிக்கிறாய் அவள் இப்போது ராஜேஷ் கொடுமையில் இருந்து மீண்டு வந்திருக்கிறாள் அவள் கோபியின் பாசத்தில் இருக்கிறாள் என சொல்கிறார். பின் ராதிகா மயூராவை அடித்ததை நினைத்து வருத்தப்படுகிறார். பின் கோபி சாப்பிட வர இனியா தன்னுடைய மார்க் சீட் கொண்டு வந்து காட்டுகிறார். கோபி அதை பார்த்து இனியாவை பாராட்டுகிறார்.

இனியா கோபி அன்பாக பேசியதை நினைத்து சந்தோசப்படுகிறார். கோபி மயூராவை நினைத்து வருத்தப்படுகிறார். பின் எழில் வெளியே நின்று அமிர்தா உடன் பேசிக் கொண்டிருக்கிறார். எல்லாரும் எப்படி இருக்கிறார்கள் என கேட்க அப்போது அமிர்தா எல்லாரும் தூங்கிவிட்டார்கள் நான் தான் உங்களுடைய போன் வரும் என காத்திருக்கிறேன் என சொல்கிறார். பின் செழியன் அப்போது வர எழில் போனை வைக்காமல் அமிர்தாவுடன் பேசுகிறார். அப்போது செழியன் பாட்டியிடம் எழிலை மாட்டிவிடுகிறார்.

1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 15 முதல் பள்ளிகள் திறப்பு!

எழிலிடம் பாட்டி யாரிடம் பேசுகிறாய் என கேட்க அமிர்தாவிடம் பேசுவதாக எழில் சொல்கிறார். அந்த பெண்ணிடம் பார்த்து பழக வேண்டும் என நான் சொல்லிருக்கேன் அல்லவா என பாட்டி சொல்ல சரி நீங்க சொல்வது போலவே நான் நடந்து கொள்கிறேன் என எழில் சொல்கிறார். பாட்டி சென்றதும் ஏன்இப்படி பாட்டியிடம் மாட்டி விடுகிறாய் என எழில் கேட்க உனக்கு காதலிக்கும் போது எவ்வளவு உதவி செய்திருக்கேன் என எழில் சொல்கிறார். அப்போது ஜெனி வர என்ன ஆச்சு என கேட்கிறார். நான் அமிர்தாவிடம் பேசியதை பாட்டிக்கு பிடிக்காது என தெரிந்து இவன் சொல்லிவிட்டான் என சொல்ல ஜெனி ஏன் இப்படி செய்தாய் என கேட்கிறார்.

பாட்டிக்கு பிடிக்காததை இவன் ஏன் செய்கிறான் என கேட்க என்னிடம் பேசியதும் தான் பாட்டிக்கு பிடிக்காது நீ ஏன் செய்தாய் என ஜெனி கேட்கிறார். எழில் இவனுக்கு இப்படி தான் பேச வேண்டும் என சொல்ல மீண்டும் அமிர்தாவிடம் எழில் பேசுகிறார். மறுபக்கம் ராதிகாவை நினைத்து கோபி தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறார். அப்போது பாக்கியா என்ன ஆனது என கேட்க கோபி ஒன்றுமில்லை என சொல்கிறார். ஆனால் கோபியால் தூங்க முடியாமல் இருக்க பாக்கியா ஏன் இப்படி இருக்கீங்க என கேட்கிறார். ஆனால் கோபி ஒன்றுமில்லை என சொல்லி சமாளிக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here