பாக்கியாவிடம் நல்லபடியாக நடந்து கொள்ளும் கோபி, கோபிக்கு ஆதரவாக இருக்கும் ராதிகா அம்மா – இன்றைய எபிசோட்!

0
பாக்கியாவிடம் நல்லபடியாக நடந்து கொள்ளும் கோபி, கோபிக்கு ஆதரவாக இருக்கும் ராதிகா அம்மா - இன்றைய எபிசோட்!
பாக்கியாவிடம் நல்லபடியாக நடந்து கொள்ளும் கோபி, கோபிக்கு ஆதரவாக இருக்கும் ராதிகா அம்மா - இன்றைய எபிசோட்!
பாக்கியாவிடம் நல்லபடியாக நடந்து கொள்ளும் கோபி, கோபிக்கு ஆதரவாக இருக்கும் ராதிகா அம்மா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபியை ஆதாரங்களுடன் பாக்கியா கேள்வி கேட்க அப்போது கோபி மாட்டிக் கொண்டோம் என்பதால் பாக்கியாவை சமாதானம் செய்ய நல்லபடியாக பேசுகிறார். பின் கோபி வீட்டில் இருப்பவர்களிடம் நல்லபடியாக நடந்து கொள்கிறார். மறுபக்கம் ராதிகாவின் அம்மா கோபிக்கு ஆதரவாக பேசுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபியிடம் பாக்கியா பல கேள்விகளை கேட்டு ஆதாரங்களை காட்டுகிறார். பாக்கியாவின் அதிரடி கேள்விகளில் மாட்டிக் கொண்ட கோபி உடனே நல்லவர் போல நடிக்க தொடங்குகிறார். எனக்கு எதோ வேலை டென்ஷன் அதனால் தான் நான் எதோ குடித்துவிட்டு பேசிவிட்டேன் என கோபி பாக்கியாவிற்கு சமாதானம் செய்கிறார். பாக்கியா கோபியை சந்தேகத்துடன் பார்த்து படுக்க செல்கிறார். கோபி இவள் என்ன இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறாள் என கோபிக்கு பயம் வருகிறது.

TN Job “FB  Group” Join Now

மறுநாள் கோபி கிளம்பி வர அப்போது பாக்கியா அடுப்படியில் இருக்கிறார். கோபி பாக்கியாவிற்கு சந்தேகம் வந்துள்ளது. அதனால் கோபி குடும்பத்தில் அனைவரிடமும் சந்தோசமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். ஈஸ்வரி அருகே சென்று கோபி உடம்பு எப்படி இருக்கிறது என கேட்கிறார். கால் வலி இருந்தால் சொல்லுங்கள் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். பின் ராமமூர்த்தியிடம் உடம்பு எப்படி இருக்கிறது என கேட்கிறார். இவன் ஏன் இப்படி எல்லாம் நடிக்கிறான் என தெரியாமல் ராமமூர்த்திக்கு சந்தேகம் வருகிறது.

பின் இனியா வர இனியாவிடம்சந்தோசமாக பேசுகிறார். அப்போது எழில் வர வாங்க ஹீரோ என கோபி சந்தோசமாக பேசுவதை அடுப்படியில் இருந்து பாக்கியா பார்க்கிறார். செல்வி என்ன சார் முகத்தில் பெரிய மாற்றம் இருப்பதாக சொல்ல அப்போது பாக்கியா எனக்கே அதான் தெரியவில்லை என சொல்கிறார். பின் செல்வி நான் கேட்க சொன்னதை கேட்டியா அதற்கு சார் என்ன சொன்னார் என கேட்க வழக்கம் போல தான் உங்களை விட்டால் எனக்கு யார் இருக்கிறார். நான் எதோ டென்ஷனில் பேசிவிட்டேன் என பேசியதாக சொல்கிறார்.

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் தீவிரமடையும் கொரோனா பரவல் – சுகாதாரத் துறை செயலர் எச்சரிக்கை!

மறுபக்கம் ராதிகா வீட்டிற்கு கோபி சொல்ல ராதிகாவின் அம்மா கதவை திறக்கிறார். அப்போது ராதிகா கோபியை பார்த்துவிட்டு கோவமாக பேசுகிறார். உங்களை பார்க்கும் போது எல்லாம் எனக்கு கோவம் தான் வருகிறது வெளியே போங்க என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார். ராதிகாவின் அம்மா இப்படி பொய் சொல்லிருக்கலாமா உண்மையை சொல்லி இருந்தால் இவ்வளவு பிரச்சனை வராது என சொல்ல உடனே ராதிகா வந்து நான் டீச்சருக்கு துரோகம் செய்ய மாட்டேன் என சொல்கிறார்.

ஆனால் கோபி எனக்கு பாக்கியாவுடன் வாழ பிடிக்கவில்லை எனக்கு ராதிகாவும் மயூராவும் தான் முக்கியம் என சொல்கிறார். ராதிகாவை திருமணம் செய்ய வேண்டும் என்பதால் தான் நான் விவாகரத்து வாங்க முடிவு செய்தேன் என சொல்கிறார்.பின் ராதிகா வந்து நீங்க வீட்டை விட்டு வெளியே செல்கிறீர்களா இல்லை நான் போகவா என கேட்கிறார். உடனே கோபி எதுவும் பேச முடியாமல் கிளம்பி செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here