பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்கும் ராதிகா, வீட்டிற்கு வர சொல்லும் ராமமூர்த்தி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்கும் ராதிகா, வீட்டிற்கு வர சொல்லும் ராமமூர்த்தி - இன்றைய
பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்கும் ராதிகா, வீட்டிற்கு வர சொல்லும் ராமமூர்த்தி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்கும் ராதிகா, வீட்டிற்கு வர சொல்லும் ராமமூர்த்தி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா ராதிகா துரோகம் செய்ததாக சொல்ல ஆனால் ராதிகா நான் தெரிந்தே எதுவும் செய்யவில்லை என சொல்லி மன்னிப்பு கேட்கிறார். பின் மயூரா மீது சத்தியம் செய்ய பாக்கியா அங்கிருந்து கிளம்புகிறார். பின் ராமமூர்த்தி பாக்கியாவை வீட்டிற்கு வர சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா ராதிகாவிடம் ஏன் எனக்கு துரோகம் செய்ததாக கேட்க, ராதிகா அது உங்க கணவர் என எனக்கு தெரியாது. அவரை சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். அதன் பின் சென்னையில் பார்த்தேன் அவர் நல்ல நண்பராக தான் இருந்தார். உங்க கணவர் என எனக்கு தெரியாது தெரிந்த பின் நான் விலகிவிட்டேன் என ராதிகா சொல்கிறார். இது பற்றி உங்களிடம் தான் சொல்லிருக்கேன் தயவு செய்து என்னை நம்புங்கள் என சொல்கிறார். அவரை பற்றிய உண்மை எல்லாம் தெரிந்த பின் விலகி போக தான் நினைத்தேன் என சொல்கிறார்.

உங்க வாழ்க்கையில் நான் குறுக்கே இருக்கமாட்டேன் ராதிகா என சொல்ல என் வாழ்க்கை எங்கே இருக்கிறது என பாக்கியா கேட்கிறார். இந்த நாள் வர கூடாது என தான் நான் எங்கையாவது போகலாம் என நினைத்தேன் என சொல்ல, போக நினைத்த உங்களை தான் நான் மருத்துவமனையில் பார்த்தேனா என பாக்கியா கேட்க, அது சூழ்நிலை என ராதிகா சொல்கிறார். எல்லாம் செய்துவிட்டு சூழ்நிலை மீது பழி போடலாமா என பாக்கியா கேட்கிறார். பின் பாக்கியா நான் நன்றி சொல்லிவிட்டு போகலாம் என வந்தேன். நான் எவ்வளவு பெரிய ஏமாளி என எனக்கு புரிய வைத்ததற்கு நன்றி என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அவர் குடும்பத்தில் பிரச்சனை என சொன்னார் அது உங்க குடும்பம் என எனக்கு தெரியாது என ராதிகா சொல்ல, செல்வி யார் வந்து பிரச்சனை என சொன்னாலும் நம்பிடுவீங்களா என கேட்கிறார், ராதிகா தயவு செய்து என்னை நம்புங்கள் என்னை தவறாக நினைத்தால் என்னால் தாங்க முடியாது என சொல்ல செல்வி நீங்க இன்னும் போகவே இல்லையே என கேட்கிறார். நீங்க காயப்பட்டு நிற்க நான் தான் காரணம், உங்க கணவருடன் தான் நான் பழகினேன் என தெரிந்த பின் நான் உங்களை கஷ்டப்படுத்தாமல் விலகி போக நினைத்தேன் என சொல்கிறார்.

அப்போது மயூரா வர பாக்கியாவிடம் எனக்கு காய்ச்சல் தொட்டு பாருங்கள் என சொல்கிறாள். பாக்கியா கையை வைத்து பார்த்துவிட்டு உண்மையாகவே காய்ச்சல் இருப்பதை தெரிந்து கொள்கிறார். பின் ராதிகா என்னை நம்புங்கள் என சொல்லி மயூரா தலையில் கை வைத்து சத்தியம் செய்கிறார். எனக்கும் என் பொண்ணுக்கும் சாபம் கொடுக்காதீங்க என சொல்ல, பாக்கியா மயூரா தலையில் கை வைத்து நீ நல்லா இருக்க வேண்டும் என சொல்கிறார். பெரியவர்கள் செய்த தவறுக்கு நீ கஷ்டப்பட கூடாது என பாக்கியா சொல்கிறார்.

ராதிகா பாக்கியாவின் நல்ல குணத்தை நினைத்து நெகிழ்ச்சி அடைகிறார். பின் பாக்கியா அங்கிருந்து கிளம்பி செல்கிறார். பின் கோபி வீட்டில் இருக்க வக்கீல் போன் செய்கிறார். நீங்களும் உங்க மனைவியும் நாளைக்கு கோர்ட் வந்தால் விவாகரத்து கிடைத்துவிடும் என வக்கீல் சொல்ல கோபி போனை வைக்கிறார். மறுபக்கம் தாத்தா பாக்கியாவை பார்க்க வருகிறார். பாக்கியா இந்த நேரத்தில் எதற்கு வந்தீங்க என கேட்க தாத்தா நீ அங்கே இல்லையே அதான் நான் வந்தேன் என சொல்கிறார,

உடனே பாக்கியா அத்தை கூப்பிட்டும் என்னால் வர முடியவில்லை மன்னித்துவிடுங்கள் என சொல்ல, உன் நிலைமை எனக்கு புரிகிறது என ராமமூர்த்தி தாத்தா சொல்கிறார். ஆனால் இதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும் என சொல்கிறார். முன்னாடி கோபிக்கு உன்னை பிடிக்காமல் இருந்தாலும் அவன் கட்டுப்பாடுடன் இருந்தான் ஆனால் இப்போது எவ்வளவு பெரிய துரோகம் செய்துவிட்டான் என சொல்லி வருத்தப்படுகிறார். உடனே எழில் அவர் தவறு செய்துவிட்டு நம்மை அழ வைத்துவிட்டார் என சொல்ல, பாக்கியா இப்படி கஷ்டப்பட வேண்டிய பொண்ணா என தாத்தா கேட்கிறார்.

தமிழகத்தில் தொடர்ந்து 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

பின்பாக்கியாவை தாத்தா வீட்டிற்கு வர சொல்கிறார். நான் எப்படி இனி அங்கே வருவது என பாக்கியா கேட்க, உன் கோவம் எல்லாம் நியாயம் தான் ஆனால் அந்த வீட்டில் நானும் காசு கொடுத்து இருக்கிறேன். அதனால் உனக்கு அங்கே வர எல்லா உரிமையும் இருக்கிறது என சொல்கிறார். தப்பு செய்தது அவன் அவனை வீட்டை விட்டு அனுப்பாமல் நீ வெளியே வந்தது தவறு என சொல்கிறார். ஆனால் பாக்கியா நான் வரமாட்டேன் என சொல்ல, எத்தனை நாள் இப்படியே இருக்க முடியும் அத்தை பற்றி யோசி பிள்ளைகளை பற்றி யோசி என சொல்கிறார்.

ஆனால் பாக்கியா தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருக்கிறார். எனக்கு இப்படி எல்லாரும் கேட்டு நான் வரவில்லை என சொல்வது கஷ்டமாக இருப்பதாக சொல்கிறார். நான் கண்டிப்பாக இனி அங்கே வரமாட்டேன் என பாக்கியா சொல்ல தாத்தா நீ இங்கே இருப்பது எங்களுக்கு கஷ்டமாக இருப்பதாக சொல்கிறார். பின் பாக்கியா உங்க மகளாக இருந்தால் இப்படி அங்கே போய் இருக்க சொல்வீர்களா என கேட்கிறார். ராமமூர்த்தி எதுவும் பேசாமல் இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!