பாக்கியாவை வீட்டிற்கு அழைக்கும் ஈஸ்வரி, கோபியை காரணம் சொல்லும் இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
பாக்கியாவை வீட்டிற்கு அழைக்கும் ஈஸ்வரி, கோபியை காரணம் சொல்லும் இனியா - இன்றைய
பாக்கியாவை வீட்டிற்கு அழைக்கும் ஈஸ்வரி, கோபியை காரணம் சொல்லும் இனியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
பாக்கியாவை வீட்டிற்கு அழைக்கும் ஈஸ்வரி, கோபியை காரணம் சொல்லும் இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஈஸ்வரி பாக்கியாவை சந்திக்க அவருடைய அலுவலகத்திற்கு செல்கிறார். மறுபக்கம் இனியா அம்மா வராமல் அழுது கொண்டிருக்க கோபி சமாதானம் செய்ய வருகிறார். அப்போது நீங்க தான் காரணம் என இனியா கோபியை குறை சொல்கிறார்

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் செழியன் அம்மா செய்தது தவறு என சொல்ல, ஜெனி நான் இப்படி செய்துவிட்டு சாரி கேட்டால் ஒப்புக் கொள்வாயா என கேட்கிறார். செழியன் என்ன பேசுகிறாய் நீ என கேட்க உடனே தாத்தா எல்லாரும் பாக்கியாவிற்கு தான் துணையாக இருக்க வேண்டும் கோபி செய்தது தவறு என சொல்ல, உடனே ஈஸ்வரி கோபி செய்தது தவறு தான் ஆனால் அங்கே இருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா என கேட்டு நான் சென்று பார்த்துவிட்டு வருகிறேன் என சொல்கிறார். அப்போது செழியன் நான் வரேன் என சொல்ல ஜெனி வேண்டாம் என சொல்கிறார்.

ஈஸ்வரி எழில் உடன் கிளம்புகிறார். மறுபக்கம் மயூரா கோபி நியாபகமாக இருக்கிறார். அப்போது ராதிகாவுக்கு தெரியாமல் மயூரா கோபிக்கு போன் செய்து பேசுகிறார். நாங்க ரொம்ப தூரம் போக போகிறோம் என சொல்ல அங்கிள் நீ எங்கே இருந்தாலும் வருவேன் என சொல்கிறார் கோபி, நான் மம்மியிடம் எவ்வளவோ பேச முயற்சி செய்தேன் ஆனால் அவள் பிடிவாதமாக இருக்கிறாள் என கோபி சொல்கிறார். நான் எல்லாருக்கும் பாய் சொல்லிட்டேன் உங்களுக்கு சொல்ல தான் மம்மிக்கு தெரியாமல் போன் செய்தேன் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இனிமேல் நீங்க ஆபிஸ் போறதுக்கு முன்னாடி வந்து பார்க்க முடியாதே என சொல்ல, நீங்க எங்கே இருந்தாலும் நான் பார்க்க வருவேன் என கோபி சொல்கிறார். ஒரு நாள் உன் மம்மி கோவம் சரியாகிவிடும் என கோபி சொல்கிறார். அப்போது ராதிகா வர மயூரா போனை வைக்கிறார். ராதிகா வந்து ஏன் அமைதியாக இருக்கிறாய் என கேட்க அப்போது மயூராவிற்கு காய்ச்சல் அடிக்கிறது. மறுபக்கம் இனியா அழுது கொண்டிருக்கும் சத்தம் வெளியே கேட்கிறது. கோபி அந்த பக்கமாக வர இனியா அழுது கொண்டிருப்பதை பார்த்து உள்ளே வருகிறார்.

இனியா கோபியிடம் அம்மா இனிமேல் இங்கே வரவே மாட்டேன் என சொன்னதாக சொல்கிறார். சில நாள் கழித்து வருவேன் என சொல்லவில்லை. இனிமேல் வந்தால் நன்றாக இருக்காது என சொன்னார்கள் என சொல்ல கோவத்தில் பேசி இருப்பாள் என கோபி சொல்கிறார். நான் கூப்பிடும் வரவில்லை என சொல்ல என்னால் அதை இன்னும் நம்ப முடியவில்லை. அம்மா இனிமேல் இங்கே வரவே மாட்டார்கள் என சொல்ல எல்லாம் உங்களால் தான் ஏன் இப்படி செய்தீர்கள் என இனியா அழுகிறார். கோபி அம்மா வந்துருவாள் என சொல்ல, அம்மாவிடம் சண்டை போட்டு இருக்கேன் ஆனால் அம்மா இல்லாமல் இங்கே எப்படி இருப்பது என இனியா கேட்கிறார்.

நீங்க ஒழுங்கா இருந்திருந்தால் அம்மா இருந்திருப்பார்கள் நீங்க ஏன் இப்படி செய்தீர்கள் என கேட்க, எல்லாம் சரியாகிவிடும் என கோபி சொல்கிறார். தாத்தா பாட்டி எல்லாம் பயத்தில் இருக்காங்க அம்மா எதாவது செய்து கொள்வார்களோ என பயமாக இருக்கிறது என இனியா அழுகிறாள். எல்லாம் உங்களால் தான் இனிமேல் என்னிடம் பேசாதீங்க இங்கே இருந்து போங்க என இனியா சொல்கிறார். மறுபக்கம் ஈஸ்வரி பாக்கியாவை பார்க்க வருகிறார். பாக்கியா படுத்துக் கொண்டிருக்க ஈஸ்வரியை பார்த்து வருத்தப்படுகிறார்.

TNPSC Group 4 & VAO தேர்வர்களுக்கான முழு மாதிரி தேர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

என்ன பாக்கியா வீட்டிற்கு வரவில்லை என ஈஸ்வரி கேட்கிறார். என்னால் நடந்தது எல்லாம் நம்ப முடியவில்லை என ஈஸ்வரி சொல்கிறார். இது ஒரு சினிமா போல மறைந்து போக கூடாதா என ஈஸ்வரி சொல்கிறார். நீ எங்களை எல்லாம் விட்டு வந்துவிட்டாய் என கேட்டு வருத்தப்படுகிறார். பாக்கியா ஈஸ்வரியை கட்டி அணைத்து அழுகிறார். கோபி செய்தது தவறு தான் நான் உன் பக்கத்தில் இருந்து தான் பேசுகிறேன். நான் அவனை மன்னிக்கவே மாட்டேன். இதெல்லாம் ஏன் நடந்தது என என்னால் யோசிக்க கூட முடியவில்லை என ஈஸ்வரி சொல்கிறார்.

உனக்கு இப்படி எல்லாம் நடந்திருக்கவே கூடாது என ஈஸ்வரி சொல்ல எல்லாம் நடந்து முடிந்துவிட்டதே அத்தை, மருத்துவமனையில் அவங்க மனைவி என சொல்ல , அவங்க கையை பிடித்துக் கொண்டு பேச என் உயிரே போய்விட்டது என பாக்கியா சொல்லி அழுகிறார். இப்படி இருப்பான் என நான் நினைக்கவே இல்லை என ஈஸ்வரி சொல்ல, எல்லார் வீட்டிலும் அப்படி தான் இருக்கும் ஆம்பளைங்க அப்படி தான் இருப்பாங்க அதை சகித்து கொண்டு வாழ வேண்டும் என ஈஸ்வரி சொல்கிறார். அதற்காக நீ கோபியை சகித்து கொள்ள வேண்டாம் ஆனால் இப்போது இப்படி ஆகிவிட்டான் என ஈஸ்வரி சொல்கிறார். அங்கே நீ இல்லாமல் நன்றாக இல்லை. மாமா மாத்திரை சாப்பிட மாட்டேங்கிறார் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!