பாக்கியாவிற்கு துணையாக இருக்கும் செல்வி, கோபியிடம் ராதிகா பற்றி பேசும் சந்துரு – இன்றைய எபிசோட்!

0
பாக்கியாவிற்கு துணையாக இருக்கும் செல்வி, கோபியிடம் ராதிகா பற்றி பேசும் சந்துரு - இன்றைய எபிசோட்!
பாக்கியாவிற்கு துணையாக இருக்கும் செல்வி, கோபியிடம் ராதிகா பற்றி பேசும் சந்துரு - இன்றைய எபிசோட்!
பாக்கியாவிற்கு துணையாக இருக்கும் செல்வி, கோபியிடம் ராதிகா பற்றி பேசும் சந்துரு – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், செல்வி பாக்கியாவிற்கு தேவையான எல்லாவற்றையும் செய்து பார்த்துக் கொள்கிறார். மறுபக்கம் கோபிக்கு சந்துரு போன் செய்து ராதிகா உங்க மீது அக்கறையாக இருப்பதாக சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா இருட்டில் அமர்ந்து நடந்ததை எல்லாம் நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது செல்வி வீட்டில் இருந்து துணி சாப்பாடு எல்லாம் கொண்டு வருகிறார். இப்படியே எப்படி உட்கார்ந்து இருப்பாய் உங்க வீட்டில் இருந்து தான் வருகிறேன். குளித்துவிட்டு துணியை மாற்றிக் கொள் என செல்வி சொல்கிறார். வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க என கேட்க அந்த வீட்டில் சந்தோசமே இல்லை துக்கம் நடந்த வீட்டில் இருப்பது போல இருக்கின்றனர் என சொல்கிறார்.

எழில் இப்படியே நீ இருக்க முடியுமா நீ என்ன முடிவெடுத்தாலும் நான் துணையாக இருக்கேன் என சொல்ல, அதெல்லாம் வேண்டாம் என பாக்கியா சொல்கிறார். செல்வி என்ன பண்ண முடியும் போலீஸ் ஸ்டேஷன் சென்று கம்பளைண்ட் கொடுத்துவிடுவோம் என சொல்ல கொடுத்தால் என்ன ஆகும் என பாக்கியா கேட்கிறார். கொடுத்து நாலு அடி அடித்தால் தான் ஆறுதலாக இருக்கும் என சொல்ல ஆனால் பாக்கியா இதில் எப்படி ஆறுதல் தேட முடியும் என கேட்கிறார்.பின் செல்வி இங்கையே தங்க போறீயா என கேட்க வேற எங்கே நான் போவது என பாக்கியா கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அது உன் வீடு நீ சென்று அங்கே சந்தோசமாக இரு என சொல்ல, எழில் அதெல்லாம் வேண்டாம் அம்மா கொஞ்சம் அமைதியாக இருக்கட்டும் என சொல்கிறார்.பின் பாக்கியா இனியா பாவம் அவளுக்கு ஒன்றும் தெரியாது அழுது கொண்டே இருப்பாள் அவளுடன் நீ இரு என சொல்ல செல்வி அங்கே இருப்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என சொல்கிறார். பின் செல்வி பாக்கியாவை குளிக்க போக சொல்ல பாக்கியா சென்று குளிக்க செல்கிறார். பின் செல்வி சாப்பாடு கொடுக்க பாக்கியாவை சாப்பிட சொல்கிறார்

வீட்டில் அத்தை மாமா ஜெனி செழியன் இனியா எல்லாரும் சாப்பிட்டார்களா என கேட்க அவங்க சாப்பிட்டு இருப்பார்கள் என செல்வி சொல்கிறார். மறுபக்கம் சந்துரு கோபிக்கு போன் செய்கிறார். கோபியிடம் அடிபட்டதாக ராதிகா சொன்னார் இப்போது எப்படி இருக்கிறது என கேட்க நன்றாக இருப்பதாக கோபி சொல்கிறார். பின் கோபி ராதிகா மயூரா எப்படி இருக்காங்க என கேட்க, நன்றாக இருப்பதாக சொல்கிறார். உங்களுக்கு உடம்பு சரி இல்லை என நினைத்து வருத்தப்பட்டதாக சொல்கிறார். அவங்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என கோபி சொல்ல, நாளைக்கு மயூராவை அழைத்து கொண்டு பம்பாய் செல்ல போகிறார் என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.

ராதிகா புது இடத்திற்கு சென்று குழந்தையை வைத்து கொண்டு கஷ்டப்பட போகிறாள் என சொல்ல, கோபி எப்படியாவது அவளை தடுத்து நிறுத்துங்கள் என சொல்கிறார். ஆனால் சந்துரு அவள் கேட்கவில்லை என சொல்கிறார்.பின் ராதிகா வந்து யாரிடம் பேசுனீங்க என கேட்க கோபி தான் என சொல்கிறார். அவர் நன்றாக இருக்கிறாரா என கேட்க வீட்டில் தான் இருப்பதாக சொன்னதாக சொல்கிறார். சந்துரு ஒரு முறை யோசிக்க சொல்ல ராதிகா அதை விட்டுவிட சொல்கிறார். மறுபக்கம் தாத்தாவிற்கு தூக்கம் வராமல் கஷ்டப்பட ஈஸ்வரி அவருக்கு துணையாக இருக்கிறார்.

பின் ஈஸ்வரி தூங்கவில்லையா என கேட்க இங்கே இவ்வளவு பிரச்சனை இருக்கிறது அப்பறம் எப்படி தூக்கம் வரும் என கேட்கிறார். நம்ம வீட்டில் இப்படி எல்லாம் நடக்கும் என நான் நினைத்ததே இல்லை என சொல்ல, இவன் எதுவும் செய்திருக்கமாட்டான் அந்த ராதிகா தான் இவனை கெடுத்திருப்பா என சொல்ல உன் மகன் நல்லவன் இல்லை என சொல்கிறார். பின் ஈஸ்வரி நீங்க கவலைப்படாதீங்க என சொல்ல, நான் போய் சேர்ந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார்.

TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

உன் மகனிற்கு புத்தி எங்கே போனது என கேட்க பெற்ற பசங்க முன்னிலையில் அசிங்கப்படுத்தியதால் அவனுக்கு எதாவது அவமானம் ஆகி தற்கொலை செய்து கொண்டால் என்ன செய்வது என ஈஸ்வரி வருத்தப்பட உன் மகன் அப்படி எல்லாம் செய்யமாட்டான் என சொல்கிறார். பின் செல்வி பாக்கியாவை கொஞ்ச நேரம் தூங்க சொல்லி பாய் விரித்து கொடுக்கிறார். பாக்கியா செல்வியை வீட்டிற்கு போக சொல்கிறார். ஆனால் செல்வி வீட்டிற்கு போகமாட்டேன் என சொல்கிறார். பின் பாக்கியா படுத்து தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறார். பின் அனைவரும் படுக்க எழில் தாத்தாவிற்கு போன் செய்து பேசுகிறார். பாக்கியா எப்படி இருக்கிறாள் என கேட்க அம்மா தூங்குவதாக சொல்கிறார் எழில். இப்படி கோபி சோதனை கொடுத்துவிட்டான் என நினைத்து தாத்தா அழுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here