கோபியால் மாடியில் இருந்து விழுந்து பேச முடியாமல் போன தாத்தா, வருத்தத்தில் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோபியால் மாடியில் இருந்து விழுந்து பேச முடியாமல் போன தாத்தா, வருத்தத்தில் குடும்பத்தினர் - இன்றைய
கோபியால் மாடியில் இருந்து விழுந்து பேச முடியாமல் போன தாத்தா, வருத்தத்தில் குடும்பத்தினர் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோபியால் மாடியில் இருந்து விழுந்து பேச முடியாமல் போன தாத்தா, வருத்தத்தில் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராமமூர்த்தி கோபியிடம் வந்து எத்தனை முறை சொன்னாலும் கேட்கமால் ராதிகாவை திருமணம் செய்ய போகிறாயா என கேட்கிறார். பின் தாத்தா மாடி படியில் இருந்து கிழே விழுந்துவிடுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இரவு அனைவரும் தூங்கிவிட ராமமூர்த்தி எழுந்து கோபி ரூமிற்கு செல்கிறார். அப்போது பாக்கியா கிட்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க, ராமமூர்த்தி மாடிக்கு செல்கிறார். அப்போது கோபி ரூமில் போன் பேசிக் கொண்டிருக்க, கோபி என சத்தம் போடுகிறார். அன்னைக்கு ராதிகாவிடம் பேச மாட்டேன் பழகமாட்டேன் என சத்தியம் செய்தாய் ஆனால் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்க, நான் என்ன சின்ன பையனா என்னிடம் வந்து அடிக்கடி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என கோபி கோவமாக சொல்கிறார்.

நீ தான சத்தியம் செய்து கொடுத்தாய் என கேட்க, ஆமாம் நான் சத்தியம் செய்து கொடுத்தேன் ஆனால் நான் பேசுவதில்லை என பொய் சொல்கிறார். இன்னைக்கு மதியம் மயூரா வந்தாள் என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். அவள் என் அம்மாவிற்கும் கோபி அங்கிள்க்கும் திருமணம் என சொன்னதை கேட்க எனக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது தெரியுமா, மகனுக்கு கல்யாணம் முடிந்த பின் அப்பனுக்கு கல்யாணம் என சொல்ல கோபி கோபப்படுகிறார் . அந்த குழந்தை பொய் சொல்வதாக சொல்ல, குழந்தை பொய் சொல்லாது என ராமமூர்த்தி சொல்கிறார்.

இப்போ என்ன மீண்டும் ராதிகா வீட்டிற்கு சென்று சண்டை போட போகிறீர்களா என கேட்டதற்கு அதெல்லாம் இல்லை நீ நல்லவன் என இந்த குடும்பமும் அந்த குடும்பமும் நம்பிக் கொண்டிருக்கிறது. இனிமேல் அது உண்மை இல்லை என சொல்ல போகிறேன் என சொல்கிறார். கோபி போய் எல்லா உண்மையும் சொல்லுங்கள் என சொல்ல, தாத்தா கோவமாக கிளம்புகிறார். அப்போது படியில் தாத்தா தவறி விழ அவருக்கு தலையில் அடிபடுகிறது. ஈஸ்வரி ஈஸ்வரி என கத்திக் கொண்டே தாத்தா விழுகிறார். பின் எழில் செழியன் பாக்கியா ஈஸ்வரி எல்லாரும் ஓடி வந்து தாத்தாவை தூக்குகின்றனர்.

கடை திறப்பு விழாவிற்கு திட்டமிடும் குடும்பத்தினர், ஜீவாவிற்கு வந்த போன் கால் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

கோபி மருத்துவமனைக்கு அழைத்து செல்வோம் என சொல்ல, தாத்தாவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கே தீவிர பரிசோதனை நடைபெறுகிறது. அப்போது வீட்டில் அனைவரும் பயத்துடன் இருப்பார்கள் என்பதால் கோபி வீட்டிற்கு செல்கிறார். ஈஸ்வரி அப்பா காலையில் இருந்து சரி இல்லாமல் இருந்ததாக சொல்ல, ஈஸ்வரியை மடியில் படுக்க வைத்து கோபி ஆறுதல் சொல்கிறார். பின் மறுநாள் மருத்துவமனைக்கு செல்ல, டாக்டர் தாத்தாவிற்கு பக்கவாதம் இனிமேல் அவரால் பேச முடியாது இந்த பக்கம் கை கால் வராது என சொல்கின்றனர். அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here