ராதிகாவுடன் கோபி போன் பேசுவதை பார்த்த பாக்கியா, பொய் சொல்லி சமாளிக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ராதிகாவுடன் கோபி போன் பேசுவதை பார்த்த பாக்கியா, பொய் சொல்லி சமாளிக்கும் கோபி - இன்றைய
ராதிகாவுடன் கோபி போன் பேசுவதை பார்த்த பாக்கியா, பொய் சொல்லி சமாளிக்கும் கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ராதிகாவுடன் கோபி போன் பேசுவதை பார்த்த பாக்கியா, பொய் சொல்லி சமாளிக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், குடும்பத்துடன் பொங்கல் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்துக்கின்றனர். அதில் கோபி உறியடி போட்டியில் ஜெய்த்துவிடுகிறார். பின் கோபி போன் பேசிக் கொண்டிருப்பதை பாக்கியா கேட்டுவிடுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், சொந்தக்காரர்கள் சாப்பிட, கோபி எங்கே என கேட்கிறார்கள். அவனுக்கு இங்கே வந்தும் அலுவலக வேலை என சொல்ல, சாப்பிடாமல் அப்படி என்ன வேலை இருக்கிறது என சொந்தக்காரர் கூப்பிடுகிறார். அவர் பாக்கியாவை அனுப்பி கோபியை அழைத்து வர சொல்ல, கோபியை பாக்கியா கூப்பிட செல்கிறார். கோபி சென்னையில் தான் என்னை நிம்மதியாக இருக்கவிடவில்லை. இங்கே வந்தும் என் நிம்மதியை கெடுகிறாய் என சொல்ல, அதெல்லாம் இருக்கட்டும் சாப்பிட வாருங்கள் என சொல்கிறார்.

பின் கோபி சாப்பிட வர, அனைவரும் சாப்பாடு நன்றாக இருப்பதாக சொல்லி சாப்பிடுகின்றனர். பின் அனைவரும் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டிருக்க, வெற்றிலை சிவந்தா புருஷனுக்கு நம்ம மீது பாசம் என சொல்கிறார். அமிர்தா மீது எழில் பாசமாக இருப்பதாக ஈஸ்வரி சொல்ல, ஈஸ்வரி எழில் அமிர்தாவை தங்கை போல நினைப்பதாக சொல்கிறார். அமிர்தாவும் எழிலும் என்ன பேசுவது என தெரியாமல் இருக்க, அமிர்தா எதுவும் சொல்ல கூடாது என பயந்து கொண்டே எழில் இருக்கிறார்.

பின் உறியடி விளையாட்டு விளையாடுகின்றனர். அதில் எழில், செழியன், அமிர்தா என அனைவரும் தோற்றுவிட கோபி களமிறங்கி உறியடிக்கிறார். பின் அமிர்தாவை அழைத்து எழிலிற்கு பொண்ணு பார்த்துவிட்டோம் என பொய் சொல்கிறார். குடும்பத்தினர் அனைவரும் பொங்கலை சிறப்பாக கொண்டாடிவிட்டு ஊருக்கு கிளம்புகின்றனர். எல்லாரும் வீட்டிற்கு வர அமிர்தா நான் எங்க வீட்டிற்கு கிளம்புகிறேன் என சொல்கிறார். பாக்கியா எழிலை கொண்டு சென்று விட சொல்ல, 4 நாட்கள் மிகவும் சந்தோசமாக இருந்தேன் என அமிர்தா சொல்கிறார்.

அமிர்தாவை எழில் அழைத்துக் கொண்டு செல்ல, கோபி வந்ததுமே ஆபிஸ் போக வேண்டும் என கிளம்ப பாக்கியா இப்போது தான வந்தீங்க அதற்குள் ஏன் கிளம்புறீங்க என கேட்கிறார். ஆபிஸில் நிறைய வேலை இருக்கிறது என கோபி சொல்லி கிளம்புகிறார். பாக்கியா கிளம்பி விட்டதாக நினைத்து கோபி ராதிகாவுக்கு போன் செய்கிறார். அப்போது பாக்கியா கோபி ரூமிற்கு வர அவர் ராதிகாவிடம் அன்பாக பேசுவதை கேட்டு விடுகிறார். கோபி நான் உன்னை மிஸ் செய்கிறேன் 4 நாட்களாக உன்னை பார்க்காமல் என்னமோ மாதிரி இருந்தது,மறுபடியும் உன்னை எப்போது பார்ப்பேன் என்பது போல இருக்கிறது என கேட்க, பாக்கியா எல்லாத்தையும் பார்த்துவிடுகிறார்.

முல்லையை மருத்துவமனைக்கு போக சொல்லும் தனம், மூர்த்தியிடம் வேலை கேட்கும் ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பின்னால் பாக்கியா நிற்பதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார். என்னாச்சு பாக்கியா என கேட்க, பேக் வைக்க வந்தேன் என சொல்கிறார். நான் பேசுவதை கேட்டியா என கேட்க ஆமாம் என பாக்கியா சொல்கிறார். என்னுடைய சிறு வயது நண்பன் நாங்க இப்படி தான் விளையாட்டாக பேசிக் கொள்வோம் நீ எதுவும் நினைக்காதே என கோபி சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here