திருமணம் குறித்து கனவு காணும் ராதிகா, கோபி வீட்டிற்கு வரும் விவாகரத்து போஸ்ட் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
திருமணம் குறித்து கனவு காணும் ராதிகா, கோபி வீட்டிற்கு வரும் விவாகரத்து போஸ்ட் - இன்றைய
திருமணம் குறித்து கனவு காணும் ராதிகா, கோபி வீட்டிற்கு வரும் விவாகரத்து போஸ்ட் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
திருமணம் குறித்து கனவு காணும் ராதிகா, கோபி வீட்டிற்கு வரும் விவாகரத்து போஸ்ட் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ஈஸ்வரி நகையை கொடுக்க, கோபி மீண்டும் பாக்கியா மீது கோபப்படுகிறார். பின் பாக்கியாவிடம் நகையை வைத்துக் கொள்ள சொல்லி ஈஸ்வரி சொல்கிறார். பின் ராதிகா கோபி திருமணம் குறித்து பேசிக் கொண்டிருக்க, வீட்டிற்கு கோர்ட்டில் இருந்து லெட்டர் ஒன்று வந்துள்ளது. அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஈஸ்வரி பாக்கியா கோபி சண்டையை பார்த்துவிட்டு நகையை கொண்டு வந்து பாக்கியாவிடம் கொடுக்கிறார். அப்போது கோபி பாக்கியா மீது கோவப்பட்டு,இதற்கு தான ஆசை பட்டாய் இந்த வீட்டில் யாரையும் நிம்மதியாக இருக்க விடமாட்டாய் என கேட்கிறார். பின் கோபி ஈஸ்வரியிடம் பேச வர, ஆனால் ஈஸ்வரி பேசாமல் இருக்கிறார். பின் பாக்கியா வந்து நகைகள் வேண்டாம் என சொல்ல ஈஸ்வரி வேண்டாம் என சொல்கிறார்.

வீட்டு வேலைகளையும், கடை வேலைகளையும் இழுத்து போட்டு செய்த ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

என் மீது சத்தியமாக இதை நீ வைத்துக் கொள்ள வேண்டும் என ஈஸ்வரி சொல்ல பாக்கியாவால் என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறார். பின் ராதிகா உடன் கோபி இருக்க கோபிக்கு ராதிகா சமைத்து கொடுக்கிறார். நீ இனிமேல் சமைக்க வேண்டாம் என கோபி சொல்ல, டீச்சரிடமும் சாப்பாடு வாங்க வேண்டாம் என சொல்லிடீங்க என சொல்கிறார். நாம எப்படி திருமணம் செய்ய போகிறோம் என ராதிகா கேட்க, எளிமையாக திருமணம் செய்து ஒரு பார்ட்டி வைக்கலாம் என சொல்கிறார்.

கோபி அதை கேட்டதும் பதட்டம் அடைய சரி என சொல்கிறார். பின் விவாகரத்திற்கு எப்படி உங்களது அம்மா அப்பா ஒப்புக் கொண்டார்கள் என கேட்க என் மனைவிக்கே பிரச்சனை இல்லை அப்பறம் என்ன எல்லாருக்கும் வருத்தம் தான் ஆனால் என்ன செய்வது என கோபி கேட்கிறார். நாம திருமணம் செய்து உங்க வீட்டில் இருப்போமா இல்லை என் வீட்டிலா என கேட்க, தனியாக வீடு பார்த்து சென்றுவிடுவோம் என சொல்கிறார். கோபி எல்லாம் உன்னுடைய இஷ்டம் என சொல்ல, ராதிகா ஆசையாக இருப்பதாக சொல்கிறார்.

பாரதிக்கு இன்னொரு திருமணம் செய்ய நினைக்கும் ஹேமா, அப்பாவை கண்டுபிடிக்க போகும் லட்சுமி – இன்றைய எபிசோட்!

மறுபக்கம் பாக்கியா வீட்டிற்கு போஸ்ட் ஒன்று வந்துள்ளது அதை செல்வி வாங்க வர கோர்ட்டில் இருந்து வந்துள்ளதாக சொல்கிறார். கோர்ட்டில் இருந்து என்ன வந்துருக்கும் என நினைக்க அப்போது ஜெனி வருகிறார். ஜெனி அதை வாங்கி என்ன என பார்க்க ஈஸ்வரி வந்து யாரு கூப்பிட்ட என கேட்கிறார். பின் பாக்கியா பெயரும் அதில் இருப்பதாக சொல்ல, அதை பிரித்து படிக்க சொல்கிறார். பாக்கியா அப்போது வர கோர்ட்டில் இருந்து ஆர்டர் வந்துள்ளது அதில் உன் பெயர் இருக்கிறதாம் என சொல்கிறார்கள் அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here