பாக்கியாவிடம் வீட்டு செலவு பற்றி சண்டை போட்ட கோபி, நகைகளை கொடுத்த ஈஸ்வரி – இன்றைய எபிசோட்!

0
பாக்கியாவிடம் வீட்டு செலவு பற்றி சண்டை போட்ட கோபி, நகைகளை கொடுத்த ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!
பாக்கியாவிடம் வீட்டு செலவு பற்றி சண்டை போட்ட கோபி, நகைகளை கொடுத்த ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!
பாக்கியாவிடம் வீட்டு செலவு பற்றி சண்டை போட்ட கோபி, நகைகளை கொடுத்த ஈஸ்வரி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” இனியாவிடம் நடந்தது பற்றி கோபி பேச, பின் பாக்கியாவிடம் இனியா பற்றி பேச வருகிறார். அப்போது பாக்கியா வேலைக்கு போவது பற்றி பேச அப்பாவிற்கு செலவானது குறித்து கோபி பாக்கியாவிடம் சத்தம் போடுகிறார். அப்போது ஈஸ்வரி பெரிய முடிவு ஒன்றை எடுக்கிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி இனியாவின் கதவை தட்டி சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க நடந்தது பற்றி கேட்கிறார். அப்போது இனியா அம்மா மேல தான் எனக்கு கோவம் என சொல்கிறார். நான் நடந்தது பற்றி கேட்கிறேன் என கோபி சொல்ல, அந்த டாக்டரிடம் பேசியதற்கு ஜெனி என்னை திட்டியதாக சொல்கிறார். அதை என்ன என கேட்காமல் அம்மா என்னை அடித்தார் என சொல்கிறார். பின் சரி அமைதியாக இரு என சொல்ல, நான் டாக்டர் என்ன செய்கிறார் என பார்க்க தான் பேசினேன், அதற்கு ஜெனி அக்கா ஏன் வழிகிறாய் என கேட்டார் தெரியுமா என சொல்கிறார்.

மூர்த்தி சொல்லியும் காலேஜ் போகாத ஐஸ்வர்யா, குழந்தை பற்றி பேசிய முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அம்மா என்னை நம்பியதே இல்லை என சொல்ல நான் பாக்கியாவிடம் பேசுகிறேன் என கோபி சொல்கிறார். இனிமேல் இப்படி நடக்காது என கோபி சொல்ல, இனியா சமாதானம் ஆகிறார். மறுநாள் கோபி வாக்கிங் சென்றுவிட்டு வர, கோபி பாக்கியாவிடம் இனியா பற்றி பேசுகிறார். அப்போது பாக்கியா அவள் அந்த டாக்டர் வந்ததும் வேற மாதிரி நடத்துகிறாள், வெளி ஆட்கள் வரும் போது இப்படி ஒரு நிலைமை ஏற்பட கூடாது அல்லவா அதனால் தான் ஜெனி கண்டித்தால் என சொல்ல அப்போ நீ எங்கே இருந்தாய் என கோபி கேட்கிறார்.

எனக்கு அப்போது தான் சமையல் வேலை வரும் என சொல்ல, வெளி ஆள் ஒருவர் வீட்டிற்கு வரும் போது வீட்டில் இருக்காமல் ஊர் சுற்ற போவதா என கேட்க, நீ பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டால் இதெல்லாம் நடக்காது என கோபி சொல்கிறார். சமையல் ஆர்டர் நிறையா எடுத்திருக்கேன் இப்பவே நேரம் போதவில்லை என சொல்கிறார். நீ வீட்டில் இருக்க வேண்டும் என கோபி சொல்ல, வீட்டை கவனித்துவிட்டு தான் நீ பிசினஸ் செய்ய வேண்டும் என நான் சொல்லிருக்கேன் அப்போ ஏன் இப்படி செய்கிறாய் என கேட்க, வர பொண்ணு டாக்டர் வர சொல்லி இருக்கேன் என பாக்கியா சொல்ல, இனிமேல் என் அலுவலகத்திற்கு நான் இனியாவை கூட்டி செல்கிறேன் என சொல்கிறார்.

TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வுக்கு தயாராவது எப்படி?

என்ன பிரச்சனை வந்தாலும் சமைப்பதை நிறுத்தமாட்டாய் என கேட்க, நீ சமைத்து கொண்டு வரும் காசில் தான் இந்த வீட்டையே பார்க்கின்ற மாதிரி பேசுகிறாய் என சொல்கிறார். பின் நீ வேலை செய்வதால் இந்த வீட்டில் என்ன பயன் இருக்கிறது என கேட்க, நீ பொழுது போக்கிற்கு சமைப்பதற்கு என் பொண்ணு வாழ்க்கை தான் முக்கியமா என கேட்கிறார். எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை,. நானும் உங்களை மாதிரி தான் வேலை செய்கிறேன் என சொல்ல, என்னை மாதிரியா நீ வேலை செய்வதால் இந்த வீட்டிற்கு பயன் என்ன என கேட்கிறார்.

நான் எதுவும் செய்யவில்லையா என கேட்க, நான் கொடுக்கும் பணத்தை வைத்து தான் இந்த குடும்பம் நடத்தப்படுகிறது என கோபி சொல்ல, அந்த பணம் போதவில்லை என பாக்கியா சொல்கிறார். அப்பாவின் செலவிற்கு லட்சக்கணக்கில் செலவு செய்தேன் நீ அதில் ஒரு ரூபாய் செலவு பண்ணியா என கேட்கிறார். இந்த வீட்டிற்கு நீ என்ன செய்திருக்காய் என சத்தம் போட அதை எல்லாம் ஈஸ்வரி கேட்கிறார். கோபி பேசுவதை பார்த்து ஈஸ்வரிக்கு கோவம் வருகிறது. அப்பாவின் செலவு என சொல்லி என்னிடம் நிறைய பணம் வாங்கி கொண்டு சென்றாய் அதெல்லாம் மறந்துட்டியா என கோபி கேட்கிறார்.

சௌந்தர்யாவை சந்தேகப்படும் பாரதி, கண்ணம்மாவை புரிந்து கொண்ட லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அதை எல்லாம் கேட்ட ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். பாக்கியா அமைதியாக பேசுங்கள் என சொல்ல ஆனால் கோபி எல்லாருக்கும் கேட்கட்டும் என சொல்கிறார். பாக்கியா வரவு செலவு நோட்டை எடுத்து வந்து காட்டி சொல்கிறார். ஆனால் மீண்டும் கோபி கோவமாக இருக்க, பாக்கியா வீட்டிற்கு செய்த செலவு எல்லாத்தையும் சொல்கிறார். நான் ஒன்றும் வெட்டியாக வேலை செய்யவில்லை என சொல்ல, ஈஸ்வரி வேகமாக சென்று தன்னுடைய நகை எல்லாத்தையும் கொண்டு வந்து கொடுக்கிறார். பாக்கியா இந்த வீட்டில் என்ன செலவு இருக்கிறது என எனக்கு தெரியும் என சொல்லி ஈஸ்வரி தனது நகைகளை பாக்கியாவிடம் கொடுக்கிறார். ஐயோ இதெல்லாம் வேண்டாம் என பாக்கியா சொல்ல, நீ படுகிற கஷ்டம் எல்லாம் எனக்கு தெரியும் என ஈஸ்வரி சொல்கிறார். கோபி என்ன அம்மா இதெல்லாம் என கேட்க ஈஸ்வரி எதுவும் பேசாமல் கிளம்புகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here