டாக்டரிடம் பேசுவதால் இனியாவை கண்டித்த ஜெனி, பதிலுக்கு அவமானப்படுத்திய இனியா – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோட்!

0
டாக்டரிடம் பேசுவதால் இனியாவை கண்டித்த ஜெனி, பதிலுக்கு அவமானப்படுத்திய இனியா - இன்றைய 'பாக்கியலட்சுமி' எபிசோட்!
டாக்டரிடம் பேசுவதால் இனியாவை கண்டித்த ஜெனி, பதிலுக்கு அவமானப்படுத்திய இனியா - இன்றைய 'பாக்கியலட்சுமி' எபிசோட்!
டாக்டரிடம் பேசுவதால் இனியாவை கண்டித்த ஜெனி, பதிலுக்கு அவமானப்படுத்திய இனியா – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா விவரம் இல்லாமல் இருப்பதை பார்த்து ஜெனி அவளை கண்டிக்கிறார். அப்போது இனியா செழியனிடம் சென்று ஜெனியை பற்றி புகார் செய்கிறார். பின் ஜெனியை கஷ்டப்படும் படி பேசுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஈஸ்வரி ராமமூர்த்திக்கு பிடித்த பாடலை போட்டு, இது தான் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் என சொல்கிறார். ஆமாம் என ராமமூர்த்தி சொல்ல உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா என கேட்கிறார். இருப்பதாக சொல்ல, அப்போது பாக்கியா வருகிறார். தாத்தாவிற்கு சாப்பாடு கொடுக்க, நான் அலுவலகத்திற்கு சென்று விட்டு வருகிறேன் என பாக்கியா சொல்கிறார். பின் நீ தான் மிகவும் கஷ்டப்படுகிறாய் என ஈஸ்வரி சொல்ல, மாமா நீங்க தான என்னை பெரிய தொழில் அதிபராக வர வேண்டும் என்று சொன்னீர்கள் அதுனால தான் நான் இப்படி உழைக்கிறேன் என சொல்கிறார்.

மீனா தனத்திடம் குடித்துவிட்டு ரகளை செய்த ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பின் பாக்கியா வெளியே வர டாக்டர் வர நேரமாகிவிட்டது. இனியா வெளியே கிளம்புவது போல மேக்கப்பில் இருக்க பாக்கியா என்ன இப்படி கிளம்பி இருக்கிறாய் என கேட்கிறார், நீ முதலில் வெளியே கிளம்பு என இனியா சொல்ல, உன் நடவடிக்கை எதுவும் சரி இல்லை என சொல்கிறார். ஜெனியிடம் இவளை பார்த்துக் கொள் யாரிடமும் போன் பேசுகிறாளா என பாரு என்று பாக்கியா ஜெனியிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார். பின் டாக்டர் வர, இனியா அவர் மீது ஆர்வமாக இருக்கிறார். பின் ஜெனி என்ன செய்கிறாய் என கேட்க, டாக்டர் இனியாவிற்கு எதுவும் தெரியாது என சொல்கிறார்.

ஜெனி இனியாவை இதெல்லாம் செய்ய வேண்டாம் என சொல்லி சத்தம் போடுகிறார். தாத்தாவிற்கு மருத்துவம் பார்க்க, இனியா டாக்டருக்கு காபி கொடுக்க வேண்டும் என சொல்கிறார். ஆனால் ஜெனி அவர் கிளம்பும் போது கொடுக்கலாம் என சொல்ல, அவர் எல்லாம் முடித்துவிட்டு கிளம்புகிறார். இனியா டாக்டரிடம் நெருங்கி பேச ஜெனி அதை தடுக்கிறார். ஜெனி இனியாவை தனியாக அழைத்து இப்படி எல்லாம் டாக்டரிடம் நடந்து கொள்ள முடியாது என சொல்கிறார். என்ன என்னை தப்பாக பேசுறீங்க என இனியா அழ தொடங்குகிறார்.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மரணத்தை சந்திக்கும் ராமமூர்த்தி – ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

இனியா அழுது கொண்டே செல்ல செழியன் ஏன் அழுகிறாய் என கேட்கிறார். ஜெனி அக்கா என்னை தேவையே இல்லாமல் திட்டியதாக சொல்ல, இனியா நடந்ததை சொல்கிறார். பின் செழியன் சரி நீ அழாதே என சொல்லி நான் கேட்பதாக சொல்கிறார். ஜெனியை செழியன் அழைக்க, ஜெனி மேலே வர இனியா அழுது கொண்டே இருக்க, ஜெனியிடம் ஏன் திட்டினாய் என கேட்கிறார். நான் தாத்தாவை பார்க்க தான் செய்தேன் ஆனால் நான் டாக்டரை பார்க்க நிற்பதாக சொல்கிறார். அப்போது, இனியா அழுது கொண்டே இருக்க, செழியன் சத்தம் போடுகிறார்.

என் தங்கச்சியை யாரும் திட்ட கூடாது நீயும் திட்டக்கூடாது என செழியன் சொல்ல, ஜெனியை அழைத்து அவள் சின்ன பொண்ணு என சொல்கிறார். பின் அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது இனியா நான் அடுத்து என்ன படிக்க என கேட்கிறார். பிசினஸ் மேத்ஸ் எடு என ஜெனி சொல்ல, இனியா நீங்க எதுவும் பேசாதீங்க என சொல்கிறார். அதனால் ஜெனிக்கு அவமானப்படுத்துவது போல இருக்கிறது. நீ கலெக்டர் படி என சொல்கிறார். பின் கோபியிடம் இவர் கலெக்டர் ஆக என்ன படிக்க வேண்டும் என கேட்கிறார். செழியன் கம்ப்யூட்டர் எடுக்க சொல்ல பேஷன் டிசைனர் படிக்க போவதாக சொல்கிறார்.

பின் ஜெனி மீண்டும் பேச இனியா அதை காதில் வாங்காமல் இருக்கிறார். பாக்கியா என்னாச்சு என கேட்க நான் அப்பாவிடம் பேசும் போது இவங்க எதற்கு குறுக்கே பேசுறாங்க என இனியா கேட்கிறார். பின் பாக்கியா ஜெனியிடம் என்ன நடந்தது என கேட்க, செழியன் ஜெனி திட்டியதாக சொல்கிறார். பாக்கியா அப்போ இனியா தான் எதாவது தவறு செய்திருப்பார் என சொல்கிறார். பின் தாத்தா வந்து இருக்க கோபி வருவதை பார்த்து தாத்தா முறைக்கிறார். அப்போது எழில் எதோ தவறாக இருப்பதாக நினைக்கிறார். ஈஸ்வரி ஏன் அவனை பார்த்தால் கடுப்பாக இருக்கீங்க என கேட்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here