தாத்தா செலவிற்கு பணம் கொடுக்கும் எழில், கோபிக்கு புது போன் பரிசளிக்கும் ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
தாத்தா செலவிற்கு பணம் கொடுக்கும் எழில், கோபிக்கு புது போன் பரிசளிக்கும் ராதிகா - இன்றைய
தாத்தா செலவிற்கு பணம் கொடுக்கும் எழில், கோபிக்கு புது போன் பரிசளிக்கும் ராதிகா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
தாத்தா செலவிற்கு பணம் கொடுக்கும் எழில், கோபிக்கு புது போன் பரிசளிக்கும் ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிற்கு எழில் பணம் கொடுக்க எழிலை நினைத்து பாக்கியா சந்தோசப்படுகிறார். பின் கோபி பாக்கியா கேட்ட பணத்தை கொடுக்கிறார். ராதிகா வீட்டில் மயூரா கோபிக்கு புது போன் வாங்கி கொடுக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா பணம் இல்லாமல் வருத்தமாக இருக்க எழில் தனக்கு சம்பளம் கொடுத்ததாக சொல்கிறார். பாக்கியா உனக்கு ஏதாவது செலவு இருக்குமே என சொல்ல எனக்கு அதெல்லாம் தேவை இல்லை நீ வைத்துக் கொள் என எழில் சொல்ல, இன்னும் பணம் தேவைப்பட்டால் என்னிடம் கேளு என எழில் சொல்கிறார். அதை கேட்டு பாக்கியாவிற்கு பெருமையாக இருக்கிறது. பின் எழில் தாத்தாவை பார்க்க போக அங்கே ஈஸ்வரி தாத்தாவிற்கு தண்ணீர் ஊட்டிவிடுகிறார். அப்போது எழில் வந்து என்ன செய்கிறீர்கள் என கேட்க தண்ணீர் கேட்டார் அதான் கொடுத்தேன் என ஈஸ்வரி சொல்கிறார்.

புது கடை திறப்பு விழாவிற்கு தயாரான குடும்பத்தினர், தையல் தொடங்கிய முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

எழிலிடம் உன் பட வேலைகள் எப்படி சென்று கொண்டிருக்கிறது என கேட்க, எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது என அவர் எடுத்த வீடியோ ஒன்றை காட்டுகிறார். அதை ஈஸ்வரி தாத்தா பார்த்து சந்தோசப்படுகின்றனர். மறுநாள் ஈஸ்வரி அமர்ந்து இருக்க கோபி வந்து அப்பா பற்றி விசாரிக்கிறார்.அப்போது பாக்கியா சமையல் செய்து கொண்டிருக்க நடப்பதை எல்லாம் பார்க்கிறார். கோபி ஈஸ்வரியிடம் பணத்தை கொடுத்து இதை செழியனிடம் கொடுங்கள் என சொல்கிறார். ஏன் என ஈஸ்வரி கேட்க அவன் மருத்துவமனையில் நிறைய செலவு செய்துவிட்டான் அதனால் தான் இதை கொடுக்க சொல்றேன் என சொல்ல சரி என ஈஸ்வரி வாங்கி கொள்கிறார்.

கண்ணம்மா வீட்டிற்கு சென்ற பாரதி, அப்பாவிற்கு சட்டை வாங்கிய லட்சுமி – இன்றைய எபிசோட்!

செல்வி அதை எல்லாம் பார்த்து சாருக்கு அப்பா மீது எவ்வளவு பாசம் என கேட்கிறார். அப்பா மீது கோவம் இருந்தாலும் அவருக்கு எல்லாம் செய்ய வேண்டும் என நினைப்பதாக சொல்கிறார். அப்போது பாக்கியா எதுவும் பேசாமல் இருக்க எழில் வருகிறார். பாக்கியா எழிலிற்கு சாப்பாடு வைக்கவா என கேட்க சரி என எழில் சொல்கிறார். அப்போது பாக்கியா எழிலிடம் பணத்தை கொடுத்து வாங்கி கொள்ள சொல்கிறார். எழில் வேண்டாம் என சொல்லிவிடுகிறார். பின் பாக்கியா நிறைய பணம் வேண்டும் என சொல்ல நீ ஆர்டர் வேற எடுக்க வேண்டாம் என சொல்லிவிட்டாய் என செல்வி சொல்கிறார். நான் செய்ய முடியாது என நினைத்தேன் என பாக்கியா சொல்கிறார்.

மறுபக்கம் ராதிகா மயூரா டிவி பார்த்துக் கொண்டே இருப்பதாக சொல்ல, மயூரா கோவித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே வருவதாக சொல்கிறார் அந்த நேரம் கோபி வர மயூராவை சமாதானம் செய்ய ராதிகாவிடம் சத்தம் போடுகிறார். பின் மயூரா சந்தோசமாக உள்ளே செல்ல கோபிக்கு பரிசு ஒன்றை எடுத்து வருகிறார். அப்போது கோபி என்ன இது என கேட்க, இது உங்களுக்கு புது போன் என சொல்ல கோபி சந்தோசப்படுகிறார். நானும் அம்மாவும் சென்று உங்களுக்காக வாங்கினோம் என சொல்ல கோபி மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here