விவாகரத்து பத்திரத்தை மறைத்து வைக்கும் கோபி, தாத்தாவை பாசத்துடன் கவனிக்கும் எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
விவாகரத்து பத்திரத்தை மறைத்து வைக்கும் கோபி, தாத்தாவை பாசத்துடன் கவனிக்கும் எழில் - இன்றைய
விவாகரத்து பத்திரத்தை மறைத்து வைக்கும் கோபி, தாத்தாவை பாசத்துடன் கவனிக்கும் எழில் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
விவாகரத்து பத்திரத்தை மறைத்து வைக்கும் கோபி, தாத்தாவை பாசத்துடன் கவனிக்கும் எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியை பாக்கியாவின் தாலிக்கு குங்குமம் வைக்க சொல்ல, கோபி விவாகரத்து வாங்கும் நேரத்தில் இப்படி ஒரு நிலைமையா என நினைத்து வருத்தப்படுகிறார். பின் கோபி அந்த பத்திரத்தை பாக்கியாவிடம் இருந்து மறைகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபியை பாக்கியாவின் தாலிக்கு குங்குமம் வைக்க சொல்ல கோபி விவாகரத்து பத்திரத்துடன் எப்படி இதை செய்வது என நினைத்து வருத்தப்படுகிறார். பின் குங்குமம் வைக்க தாத்தா பாட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றனர். அந்த பூஜைக்கு வந்த அனைவரும் பாட்டியையும் பாக்கியாவையும் வாழ்த்திவிட்டு செல்ல கோபிக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. பின் கோபி அந்த பத்திரத்தை மறைத்துவிட்டு ரூமிற்கு வருகிறார். அங்கே விவகாரத்தை நினைத்து ராதிகா எவ்வளவு சந்தோஷப்பட்டார் என நினைத்து பார்க்கிறார்.

கடையை சீல் வைக்க காரணத்தை சொன்ன அலுவலர், தர்ணாவில் அமர்ந்த மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அப்போது பாக்கியா அங்கே வர விவாகரத்து பத்திரத்தை மறைத்து வைக்கிறார். பாக்கியாவிடம் அப்பா சாப்பிட்டாரா தூங்கிட்டாரா அம்மா சாப்பிடங்களா என கேட்க, எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். கோபி பதட்டமாக இருக்க பாக்கியா மாமாவை நினைத்து வருத்தப்படாதீங்க அவரை நாம பார்த்துக் கொள்வோம், நீங்க வருத்தப்படாமல் இருந்தால் தான் குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடியும் நீங்க நல்ல தூங்கி ரெஸ்ட் எடுங்க என சொல்கிறார்.

கோபி பாக்கியா சொன்னதையும், ராதிகா சொன்னதையும் நினைத்து வருத்தப்படுகிறார். மறுபக்கம் செழியன் தூங்கி எழுந்து ஜெனியை தேட ஜெனி கீழே இருந்து வருகிறார். அப்போது என்னிடம் நீ சரியாக நேரம் ஒதுக்கவே மாட்டேங்குற என சொல்ல தாத்தாவிற்கு முடியாமல் போனதால் தான் ஆண்டிக்கு நான் உதவி செய்கிறேன் என ஜெனி சொல்கிறார். பின் நாம தனியாக போயிடுவோம் என சொல்ல ஜெனி கோவமாக கிளம்புகிறார். எழில் தாத்தாவிடம் நன்றாக பேச, தாத்தாவை குளிக்க வைக்கலாமா என கேட்கிறார். தாத்தா சரி என சொல்ல, தாத்தாவை எழில் குளிக்க வைக்கிறார்.

பாரதிக்கு போன் செய்த கண்ணம்மா, மாயாண்டியை மாட்டிவிட நினைக்கும் வெண்பா – இன்றைய எபிசோட்!

அப்போது எழில் பாசத்தை பார்த்து தாத்தா அழுகிறார். அதை பார்த்து எழில் அழ தொடங்குகிறார். பின் தாத்தாவிற்கு மேக்கப் போட்டு எழில் அழகாக கிளப்புகிறார். பின் தாத்தாவை வெளியே அழைத்துக் கொண்டு வர தாத்தா அழகாக தயாராகி இருப்பதை பார்த்து பாக்கியா ஜெனி சந்தோசப்படுகிறார்கள். பின் எழில் தாத்தாவை போட்டோ எடுத்து காட்ட, தாத்தா எனக்கு இதை எல்லாம் பார்க்கும் சக்தி இல்லை சீக்கிரமாக என்னை குணப்படுத்த வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here