
சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடு செய்யும் பாக்கியா, விவாகரத்து வாங்க வக்கீலை பார்க்கும் கோபி – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகாவின் அம்மா சீக்கிரமாக திருமணம் செய்து கொண்டால் எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும் என சொல்கிறார். பின் ராதிகாவும் கோபியும் விவாகரத்து வாங்க வக்கீல் அலுவலகத்திற்கு வருகிறார்கள்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா வீட்டிற்கு ராஜேஷ் வந்ததால் ராதிகா மிகவும் பயமாக இருக்கிறார். பின் கோபி அதை நினைத்து கவலைப்படாமல் இரு என சொல்ல, ராதிகாவின் அம்மா இதற்காக தான் திருமணம் செய்து கொள்ள சொன்னேன் என சொல்கிறார். நான் கண்டிப்பாக செய்கிறேன். இப்போது தான் ராதிகாவுக்கு கூட விவாகரத்து கிடைத்திருக்கு அது போல நானும் வாங்கிவிடுவேன் என சொல்ல வக்கீல் தான் பிரச்சனையாக இருந்தால் நம்ம வக்கீலை கூட பார்க்கலாம் என ராதிகா சொல்கிறார் கோபி சரி அப்பாய்மென்ட் வாங்க சொல்கிறார்.
TN Job “FB
Group” Join Now
பின் கோபி அதை நினைத்துக் கொண்டே வீட்டிற்கு வர, முகம் சரி இல்லாமல் இருக்க பாக்கியா என்னாச்சு என கேட்கிறார். ஒன்றுமில்லை அப்பா எப்படி இருக்கிறார் என கோபி கேட்க அவர் நல்லபடியாக இருப்பதாக இப்போது தான் தூங்குவதாக சொல்கிறார். இன்னைக்கு எழில் படப்பிடிப்பு பார்க்க சென்றோம். அதனால் தாத்தா மிகவும் சந்தோசமாக இருந்ததாக சொல்கிறார்கள். பின் கோபி அப்பாவை பார்க்க அவர் தூங்கி கொண்டிருக்கிறார். அந்த நேரம் தாத்தா எழுந்து உன்னை சும்மா விடமாட்டேன் என கோவமாக பேசியது போல கோபி கனவு காண்கிறார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!
அது கனவு என்பதை உணர்ந்து நிம்மதி அடைகிறார். பாக்கியாவிடம் ஈஸ்வரி வந்து வீட்டில் பூஜை வைக்கலாம் என சொல்கிறார். எதற்கு என பாக்கியா கேட்க இன்று நல்ல நாள் சில சுமங்கலிகளை வைத்து பூஜை செய்யலாம் என பாக்கியா சொல்கிறார். பின் பாக்கியா ஜெனி செல்விக்கு வேலை கொடுத்துவிட்டு அவரும் பூஜைக்கு ஏற்பாடு செய்கிறார். மறுபக்கம் கோபி வக்கீல் அலுவலகத்தில் காத்துக் கொண்டிருக்க, பதட்டமாக இருக்கிறார். அதை பார்த்து ராதிகா ஆறுதல் சொல்ல வக்கீல் வந்து என்ன பிரச்சனை என கேட்கிறார். பெரிதாக ஒன்றுமில்லை ஆனால் எனக்கும் என் மனைவிக்கும் சரியாக எதுவும் இல்லை என சொல்ல, வக்கீல் அவங்க சம்மதம் தெரிவித்தால் 6 மாதத்தில் விவாகரத்து கிடைத்து விடும் என சொல்கிறார்.