அமிர்தாவிடம் மனம் விட்டு பேசிய எழில், அமிர்தாவிற்கு அறிவுரை சொன்ன தோழி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
அமிர்தாவிடம் மனம் விட்டு பேசிய எழில், அமிர்தாவிற்கு அறிவுரை சொன்ன தோழி - இன்றைய
அமிர்தாவிடம் மனம் விட்டு பேசிய எழில், அமிர்தாவிற்கு அறிவுரை சொன்ன தோழி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
அமிர்தாவிடம் மனம் விட்டு பேசிய எழில், அமிர்தாவிற்கு அறிவுரை சொன்ன தோழி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழிலிடம் பாக்கியா நீ யாரையும் காதலிக்கிறாயா என கேட்கிறார். பின் அமிர்தா நடந்து கொள்வது குறித்து எழில் கேள்வி கேட்க, அமிர்தா நண்பர் அவருக்கு அறிவுரை சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் சோகமாக இருப்பதை பார்த்த பாக்கியா யாரையாவது காதலிக்கிறாயா என கேட்கிறார். அப்போது எழில் ஏன் என்னிடம் இப்படி கேட்கிறாய் என்று கேட்க ஆமாம் இந்த வயசு பசங்களுக்கு இதை விட என்ன பிரச்சனை இருக்க போகுது என கேட்கிறார். நான் காதலித்தால் கல்யாணம் செய்து வைப்பாயா என கேட்க, முடியாது உனக்கு என்ன வயது ஆகிறது இன்னும் 3 ஆண்டு கழித்து தான் திருமணம் செய்து வைப்பேன் என சொல்கிறார். நான் திருமணம் செய்தால் அந்த பெண்ணை சந்தோசமாக வைத்து கொள்வேனா என எழில் கேட்க, நீ என் மகன் என்று சொல்லவில்லை நீ நல்லபையன் என பாக்கியா சொல்கிறார்.

அதை கேட்டதும் எழில் சற்று நிம்மதியாக இருக்கிறார். பின் எழில் அமிர்தா வீட்டிற்கு போக, அங்கே அம்மா அப்பா சந்தோசமாக அவரிடம் பேசுகிறார். அமிர்தா எங்கே என கேட்க, அவர் காலேஜ் போயிருக்கார் என சொல்கிறார். எழில் அமிர்தாவிடம் பேச வேண்டும் என கேட்கிறார். அமிர்தாவின் தோழி ஒருவர் கூட இருக்க, எழில் உங்களிடம் சில கேள்விகளை கேட்க வேண்டும் என பேச தொடங்குகிறார். நீங்க திருமணம் செய்து கொள்ள வேண்டும் அது தான் என் எண்ணம் எனக்கு உங்களை பிடித்திருக்கு. உங்களுக்கு என்னை பிடிக்காமல் இருந்தால் எனக்கு பிரச்சனை இல்லை.

மூர்த்தியை எதிர்த்து கண்ணனை வீட்டிற்குள் அழைத்து வரும் தனம், அதிர்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

ஆனால் நீங்க வேற யாரையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும். என்னை திருமணம் செய்ய பிடிக்காமல் இருந்தால் நான் உங்களிடம் நண்பனாக இருந்துகொள்கிறேன். உங்களிடம் திரும்ப நான் ப்ரொபோஸ் பண்ண மாட்டேன் என எழில் சொல்கிறார். நீங்க இப்படி நடந்து கொள்வது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. நான் வராமல் இருந்தால் அம்மா அப்பா கஸ்டப்படுவாங்க என சொல்கிறார். நான் உங்க வீட்டிற்கு வந்தால் ஒரு ஹாய் சொல்லுங்க அது போதும் ஆனால் நீங்க ஏன் இப்படி இருக்கீங்க என கேட்கிறார்.

அமிர்தா ஒன்றும் பேசாமல் கிளம்ப எழில் வருத்தப்படுகிறார். பின் அமிர்தாவின் தோழி அமிர்தாவிடம் எழில் சொல்வது சரி தான, நீ ஒருநாள் திருமணம் செய்ய தான போற, நீ செய்யாமல் இருந்தாலும் உன் அம்மா உனக்கு செய்ய தான் போறாங்க என சொல்கிறார். நீ யாரையோ திருமணம் செய்வதற்கு எழிலை திருமணம் செய்து கொள் என சொல்கிறார். நீ ஏன் எழிலை வேண்டாம் என சொல்ற என காரணம் கேட்கிறார். எனக்கு கணேஷ் அம்மா அப்பா இருக்காங்க குழந்தை இருக்கிறது அவர்களை விட்டுவிட்டு என்னால் வரமுடியாது என சொல்கிறார்.

குழந்தைத்தனமாக கண்ணம்மாவிடம் சண்டையிடம் பாரதி, சாப்பாடு கொண்டு வரும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

உன்னை அவர் வரச்சொல்லவே இல்லையே என சொல்ல, எழிலிற்கு ஒரு குடும்பம் இருக்கிறது அவங்க அவருக்கு நல்ல பொண்ணு பார்க்க வேண்டும் என நினைப்பார்கள் ஆனால் இந்த முடிவு சரியாக வராது என சொல்கிறார். பின் எழில் உன்னை பிடித்திருக்கு என சொல்லி இருக்கிறார். அதற்கு உன் முடிவு என்ன எழில் நல்ல தேர்வு அவரை நம்பி நீ இறங்கலாம் என சொல்கிறார். எழில் திரும்ப திரும்ப வந்து உன்னிடம் பேசமாட்டார் நீ எழில் இல்லாமல் இருப்ப என சொல்கிறார். கோபி ராதிகா வீட்டு வாசல் வரை சென்று உள்ளே போகலாமா என நினைக்கிறார். ஆனால் ராதிகா அம்மா பேசியதை நினைத்து பார்த்து போகாமல் நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here