
ராதிகாவுடன் பழகமாட்டேன் என கோபியிடம் சத்தியம் வாங்கும் ராமமூர்த்தி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் வீட்டிற்கு வந்த கோபி அவர் அப்பா மீது பயங்கர கோவமாக இருக்கிறார். பின் ராதிகா உடன் சேர கூடாது என சொல்லி சத்தியம் கேட்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி கோவமாக வீட்டிற்கு வர ராமமூர்த்தி எதுவும் நினைக்காதது போல விசில் அடித்துக் கொண்டிருக்கிறார். என்ன ஆச்சு என ஈஸ்வரி கேட்க, ஆபிசில் கோவம் என கோபி சொல்கிறார். உன் மகனுக்கு எப்போது தான் கோவம் என அவர் சொல்கிறார். இருவரும் நடந்து கொள்வதை பார்த்து பாக்கியா சந்தேகப்படுகிறார். இருவருக்கும் இடையே எதோ பிரச்சனை இருக்கிறது என நினைக்கிறார். எழில் பாக்கியா சாப்பாடு செய்து கொடுக்க, எல்லாரும் சாப்பிட்டாச்சா என கேட்கிறார்.
சாப்பிட்டாச்சு உன் அப்பா தான் சரியாக சாப்பிடவில்லை என பாக்கியா சொல்கிறார். தாத்தாவிற்கு அப்பாவிற்கும் எதோ பிரச்சனை என நான் நினைக்கிறன் என்று பாக்கியா சொல்ல, எழில் தாத்தா உயில் எழுதியதால் அப்பா கோவமாக இருக்கிறார் என சொல்லி சமாளிக்கிறார். கோபி ராமமூர்த்தியை பார்க்க வர, என்ன யோசித்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்கிறார். இந்த குடும்பத்தின் சந்தோசத்தை மட்டுமே நான் நினைப்பேன் என சொல்ல, ராதிகா வீட்டிற்கு சென்று அவரது அம்மாவிடம் ஏன் அவளை தப்பாக பேசி கஷ்டப்படுத்தி இருக்கீங்க என கேட்கிறார்.
நான் அவளை எதுவும் பேசவில்லை என் பையன் எதற்கு இங்கே வருகிறான் என்று தான் கேட்டேன். அவளுடைய வாழ்க்கையில் சும்மாவே நிறைய பிரச்சனை இருக்கிறது. இதற்கு மேல் அவளை ஏன் கஷ்டப்படுத்துறீங்க, பாக்கியாவிடம் சொல்லி கஷ்டப்படுத்துங்க, உங்களுக்கு உங்க குடும்பம் தான் முக்கியம் என கேட்கிறார். ராதிகா யாரோ தான அதான் இப்படி செய்றீங்க என சொல்ல ஆமாம் அப்படி தான் எனக்கு இந்த குடும்பத்தின் சந்தோசம் தான் முக்கியம் என சொல்கிறார்.
ராதிகா வீட்டிற்கு இனிமேல் நீ போக கூடாது என சொல்லி சத்தியம் கேட்க, என் வாழ்க்கையை ஏன் இப்படி கெடுக்கிறீங்க என்று கோபி சொல்கிறார். உன் வயசு என்ன ஆகுது 3புள்ளைக்கு அப்பா உனக்கு என்ன வாழ்க்கை நீ தான் எல்லாருடைய வாழ்க்கையையும் கெடுகிறாய் சத்தியம் செய்து கொடுக்கவில்லை என்றால் நான் நாளை ராதிகாவிடம் பாக்கியா தான் உன்னுடைய மனைவி என சொல்வேன் அப்பறம் உன்னை அவளே வீட்டை விட்டு துரத்தி விடுவார் என சொல்கிறார்.
பின் சத்தியம் பண்ணு உன் குழந்தைகள் மீது சத்தியம் பண்ணு உன் அம்மா மீது சத்தியம் பண்ணு இப்போது நீ சத்தியம் செய்யாமல் இருந்தால் அப்பறம் இப்பவே சென்று வீட்டில் எல்லாரிடமும் உன்னை பற்றி சொல்லிவிடுவேன் என சொல்கிறார். அதை கேட்டு கோபி கோவப்பட, அவர் வேறு வழி இல்லாமல் சத்தியம் செய்து கொடுக்கிறார். இனிமேல் நீ ஒழுக்கமாக வாழ வேண்டும் என கோபி அப்பா சொல்லிவிட்டு செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்