ராதிகா அம்மாவிடம் சத்தம் போட்ட ராமமூர்த்தி, கோபியை வெளியே போக சொன்ன அம்மா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ராதிகா அம்மாவிடம் சத்தம் போட்ட ராமமூர்த்தி, கோபியை வெளியே போக சொன்ன அம்மா - இன்றைய
ராதிகா அம்மாவிடம் சத்தம் போட்ட ராமமூர்த்தி, கோபியை வெளியே போக சொன்ன அம்மா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ராதிகா அம்மாவிடம் சத்தம் போட்ட ராமமூர்த்தி, கோபியை வெளியே போக சொன்ன அம்மா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா வீட்டிற்கு போன ராமமூர்த்தி ராதிகா அம்மாவிடம் இனிமேல் உங்க பொண்ணை என் பையனுடன் பழக விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என எச்சரிக்கிறார். பின் ராதிகா அம்மா கோபி இனிமேல் இங்கே வர கூடாது என சொல்கிறார்

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா அம்மாவை பார்த்த ராமமூர்த்தி நீங்க யார் என எனக்கு தெரியாது ஆனால் நான் இப்படி பேசுவதை நினைத்து வருத்தப்படாதீங்க என கேட்கிறார். நீங்க யாரு என ராதிகா அம்மா கேட்க, தினமும் வந்துவிட்டு போறானே கோபி அவனுடைய அப்பா என சொல்கிறார். பின் என் பையனுக்கு மூன்று பசங்க இருக்காங்க, குடும்பம் இருக்கிறது. உங்க பொண்ணு எதற்கு என் பையனுடன் ஊர் சுற்றுகிறார் என கேட்கிறார். என் பையனிடம் பல தவடை சொல்லி கேட்கவேமாட்டேங்குறான்.

கண்ணனை பார்த்து கதறி அழும் ஐஸ்வர்யா, அடிபட்டது தெரிந்து வந்த தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

ராதிகா இப்போது வீட்டில் இருப்பாள் வந்து எல்லாம் சொல்லிவிடுவேன் என நினைத்தேன். ஆனால் இது முடியவே இல்லை. இப்ப கூட இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்துவிட்டு தான் வருகிறேன் என சொல்கிறார். உங்க பொண்ணை பார்த்து பழக சொல்லுங்க கல்யாணம் முடிந்த பையனுடன் என்ன பழக்கம் என் கேட்கிறார். பின் அவர் கோவமாக வீட்டிற்கு வர ஈஸ்வரி என்ன நடந்தது என கேட்கிறார். ஒன்றுமில்லை என சொல்ல, உடம்பு எல்லாம் நன்றாக தான இருக்கிறது என கேட்கிறார்.

மருத்துவரிடம் வரியா சோதனை செய்து பாப்போம் என் உடம்பிற்கு ஒன்றுமில்லை என சொல்கிறார். ஏன் இப்போது எல்லாம் ஒரு மாதிரி இருக்கீங்க என கேட்க, ஒன்றுமில்லை உனக்கு தெரியாதது வரை நல்லது என சொல்லி சாப்பிட செல்கிறார். பின் ராதிகா வர நேரமாக மயூராவை சாப்பிட சொல்கிறார். அம்மா வரட்டும் என மயூரா சொல்ல, ராமமூர்த்தி பேசியது எல்லாத்தையும் ராதிகாவின் அம்மா நினைத்து பார்க்கிறார். பின் ராதிகா கோபி வர ராதிகா அவரது அம்மாவிடம் பேசுகிறார். ஆனால் அவர் பதில் சொல்லாமல் இருக்க, காலில் அடிபட்டுவிட்டது அதனால் தான் நேரமாகவிட்டது என ராதிகா சொல்கிறார்.

பழைய நினைவுகளை நினைத்து பார்க்கும் பாரதி, சௌந்தர்யாவிடம் சொல்லி வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

ஆனால் கேட்காமல் ராதிகா அம்மா இவருடன் சேராதே என எத்தனை தடவை சொன்னேன் ஆனால் கேட்காமல் அவருடன் பழகினாய் இப்போ என்ன நடந்திருக்கு என பாரு என சத்தம் போடுகிறார். என்ன நடந்தது என கேட்க, இவர் அப்பா இங்கே வந்திருந்தார். என் பையனுடன் உங்க பெண்ணிற்கு என்ன பழக்கம் என கேட்கிறார். எத்தனை முறை நான் சொன்னேன் இவருடன் சேராதே என இப்போது உன்னை இவர் அப்பா அப்படி அசிங்கமாக பேசுகிறார். கோபி அவருக்கு பதில் பேச வர இனிமேல் இந்த வீட்டில் நீங்க இருக்காதீங்க கிளம்புங்க என சொல்கிறார்.

கோபி வெளியே வந்து கோவமாக இருக்க, ராதிகா தனக்கு நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு அழுது கொண்டிருக்கிறார். பின் ராதிகா அம்மா உனக்கு நீ தான் துணை உன்னை பற்றி எனக்கு தெரியும் உனக்கு இதெல்லாம் தேவையா என கேட்கிறார்.கோபி கோவமாக வீட்டிற்கு செல்ல, அங்கே ராமமூர்த்தி இனியாவிற்கு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என அறிவுரை சொல்லிக் கொண்டு இருக்கிறார். கோபி கோவத்தின் உச்சியில் இருந்து முறைத்து கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here