எழிலுக்கு ஆதரவாக பேசும் பாக்கியா, பிசினஸிற்காக விளம்பர படம் எடுக்கும் எழில் – ‘பாக்கியலட்சுமி’ இன்றைய எபிசோடு!

0
எழிலுக்கு ஆதரவாக பேசும் பாக்கியா, பிசினஸிற்காக விளம்பர படம் எடுக்கும் எழில் - 'பாக்கியலட்சுமி' இன்றைய எபிசோடு!
எழிலுக்கு ஆதரவாக பேசும் பாக்கியா, பிசினஸிற்காக விளம்பர படம் எடுக்கும் எழில் - 'பாக்கியலட்சுமி' இன்றைய எபிசோடு!
எழிலுக்கு ஆதரவாக பேசும் பாக்கியா, பிசினஸிற்காக விளம்பர படம் எடுக்கும் எழில் – ‘பாக்கியலட்சுமி’ இன்றைய எபிசோடு!

எழிலின் காதலை அமிர்தா நிராகரித்தவுடன் அதை பற்றியே யோசித்து கொண்டிருக்கும் எழிலுக்கு ஆதரவாக பாக்கியா பேச அவருக்குள் புதிய நம்பிக்கை பிறக்கிறது. பிறகு பாக்கியா, தனது பிசினஸுக்கான விளம்பர வேலைகளில் ஈடுபடுகிறார்.

பாக்கியலட்சுமி எபிசோடு

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்போது சமையில் செய்வதற்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி இருக்கும் பாக்கியா, தனது பிசினஸ் அடுத்த கட்டத்திற்கு செல்வதை நினைத்து மகிழ்ச்சியடைகிறார். பிறகு நீயும் இப்படி ஆக வேண்டும் என இனியாவுக்கு அட்வைஸ் செய்கிறார் பாக்கியா. பிறகு அடுத்த நாள் விடிந்ததும் வீட்டுக்கு வரும் எழிலுக்கு காபி போட்டு கொடுக்கும் பாக்கியா, ஷூட்டிங் காரணமாக தான் எழில் இப்படி சோர்வாக இருக்கிறான் என ஈஸ்வரியிடம் சொல்கிறார்.

தொடர்ந்து தீவிரமடைந்து வரும் ஓமைக்ரான் வைரஸ் பரவல் – 21 பேருக்கு உறுதி என்று தகவல்!!

பிறகு, ஈஸ்வரி அங்கிருந்து சென்றதும் உனக்கு எதோ பிரச்சனை இருக்கு, அது என்னவென்று சொல் என எழிலிடம் கேட்கிறார் பாக்கியா. அப்போது, கவிதா அத்தைக்கு வேலையில் இவ்வளவு பிரச்சனை இருக்கு, ஏன் அவர்களுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க கூடாது என எழில், பாக்கியாவிடம் கேட்கிறார். அதற்கு கண்டிப்பாக கவிதாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என யாராவது வந்தால் அவர்களை கையெடுத்து கும்பிடுவேன். ஒரு ஆணுக்கு மனைவி இல்லையென்றால் அவர்களுக்கு அடுத்த திருமணம் குறித்து பேசுகிறார்கள்.

ஆனால் ஒரு பெண்ணுக்கு இப்படி நடந்தால் இதை பற்றி பேச கூட மாட்டார்கள் என பாக்கியா சொல்ல, அமிர்தா விஷயத்தில் பாக்கியா தனக்கு உறுதுணையாக இருப்பார் என எழிலுக்கு நம்பிக்கை பிறக்கிறது. இப்போது, பாக்கியா தனது மசால் பொடி பிசினஸுக்கு 2 பேரை புதிதாக நியமிக்கிறார். பிறகு சமையல் பிஸினஸுக்கான விளம்பரத்தில் பாக்கியா நடிக்க அதனை இயக்குகிறார் எழில். தொடர்ந்து இன்றைய காலத்து பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என ஜெனியிடம் உதவி கேட்கிறார் இனியா.

‘பாரத் கவுரவ்’ சுற்றுலா ரயிலை இயக்க தனியாருக்கு அனுமதி – தெற்கு ரயில்வே அதிரடி!!

ஆனால் தனக்கு தமிழில் எழுத தெரியாது என ஜெனி மறுக்க, தாத்தாவிடம் கேட்க சொல்லி ஈஸ்வரி சொல்கிறார். தாத்தாவுக்கு இதெல்லாம் எழுத வராது என இனியா சொல்ல, பாக்கியா தானே எழுதி தருவதாக சொல்கிறார். அப்போது, பாக்கியா ஒரு பிசினஸ் ஆளாக மாறி விட்டாள் அதனால் அவளே எழுதி தருவாள் என வழக்கம் போல ஈஸ்வரி பாக்கியாவை மட்டம் தட்ட, இந்த கட்டுரை இது என்னை பற்றி இல்லை அத்தை, உங்களை பற்றி, ஜெனியை பற்றி, செல்வியை பற்றி மற்ற பெண்களை பற்றி என பாக்கியா பேச ஆரம்பிப்பதுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here