பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்கும் இனியா, வேலைக்கு செல்ல உள்ளதாக சொல்லும் ஜெனி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்கும் இனியா, வேலைக்கு செல்ல உள்ளதாக சொல்லும் ஜெனி - இன்றைய
பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்கும் இனியா, வேலைக்கு செல்ல உள்ளதாக சொல்லும் ஜெனி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்கும் இனியா, வேலைக்கு செல்ல உள்ளதாக சொல்லும் ஜெனி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவின் வலியை புரிந்துக் கொண்டு இனியா மன்னிப்பு கேட்கிறார். பின்னர் ஜெனிக்கு வேலை கிடைத்துவிட்டது என செழியன் சொல்கிறார். நான் வேலைக்கு போக காரணமே நீங்க தான் என ஜெனி சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா சாப்பாடு செய்யவில்லை என ஆர்டர் கொடுத்தவர்கள் போன் செய்து சத்தம் போடுகின்றனர். பின்னர் பாக்கியா நிச்சயம் சாப்பாடு கொண்டுவருவதாக போன்னில் சொல்கிறார். இந்த கால்லை வைத்துக் கொண்டு எப்படி சாப்பாடு கொடுக்க போவ என்று கேட்க நான் நிச்சயம் போவேன் என பிடிவாதமாக இருக்கிறார்.

பின்னர் எழில் அமிர்தா பாடிய பாடல் அவரிடம் பேசியது, குடும்பத்தினர் பற்றி நினைத்து பார்க்கிறார். சரியாக அப்போது அமிர்தா போன் செய்கிறார். ஊருக்கு போய்ட்டு ஒரு போன் கூட செய்யவில்லை என எழில் கேட்கிறார். கொஞ்சம் வேலை இருந்தது என அமிர்தா சொல்ல, உங்க அம்மாவிற்கு உடம்பு சரி இல்லை என மெசேஜ் பண்ணிருந்தீங்க இப்போ சரியாகிவிட்டதா என கேட்க, அவங்க ரெஸ்ட் எடுத்த தான சரி ஆகும். என்று சொல்கிறார். கவலைப்படாதீங்க சீக்கிரம் சரியாகிவிடும் என சொல்லி போனை வைக்கிறார்.

மூர்த்திக்கு தெரியாமல் மளிகை பொருள்களை கண்ணனிற்கு அனுப்பும் ஜீவா, கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

பின்னர் பாக்கியா கால் வலியால் தூங்க முடியாமல் இரவு அழுது கொண்டிருக்கிறார். அதை பார்த்து இனியா என்னாச்சு என்று கேட்க கால் வலி என சொல்கிறார். நீ தான் மாத்திரை சாப்பிடுற ஆனாலும் வலிக்கிது என்றால் நீ தான் ரெஸ்ட் எடுக்கவே இல்லையே என இனியா சொல்கிறார். சாரி அம்மா நானும் உன்னை வேலை வாங்கிவிட்டேன் என இனியா வருத்தப்படுகிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்லி பாக்கியா படுத்துக் கொள்கிறார்.

ஜெனியை செழியன் அழைக்கிறார். நீ என்னிடம் கேட்டது கிடைத்துவிட்டது என சொல்கிறார். ஜெனி புரியாமல் இருக்க உனக்கு வேலை கிடைத்துவிட்டது என சொல்கிறார். ஜெனி சந்தோஷத்தில் பாக்கியாவிடம் வேலைக்கு போக உள்ளதாக தெரிவிக்கிறார். பாக்கியா அதை கேட்டு சந்தோசப்படுகிறார். ஜெனி நான் வேலைக்கு போக நீங்க தான் காரணம் என சொல்கிறார். பாக்கியா அதை கேட்டு சந்தோசப்படுகிறார். பின்னர் பாக்கியா ஆர்டர் வந்த சாப்பாடுகளை எடுத்து வைக்கிறார்.

இரட்டை குழந்தைகள் பிறந்த உண்மையை அறிந்த கண்ணம்மா, உண்மையை சொல்வாரா சௌந்தர்யா? – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

எழில் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் பாக்கியா பிடிவாதமாக இருக்கிறார். கோபி ஆபிஸ்க்கு வந்ததும் ராதிகா போன் செய்கிறார். கோபி பேசிவிட்டு எங்கே இருக்கீங்க என்று கேட்கிறார். ஆபிஸ்ஸில் தான் இருக்கிறேன் அதுவும் உங்க ஆபிஸ் என சொல்கிறார் ராதிகா. பின்னர் கோபிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!