பாக்கியாவின் நிலைமையை பார்த்து வருத்தப்படும் எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
பாக்கியாவின் நிலைமையை பார்த்து வருத்தப்படும் எழில் - இன்றைய
பாக்கியாவின் நிலைமையை பார்த்து வருத்தப்படும் எழில் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
பாக்கியாவின் நிலைமையை பார்த்து வருத்தப்படும் எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் ஊரில் இருந்து வந்து பாக்கியாவின் நிலைமையை பார்த்து கவலைப்படுகிறார். வீட்டின் நிலைமையை புரிந்துக் கொண்டு எல்லா வீட்டு வேலைகளையும் எழில் செய்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஹோட்டலில் வாங்கிய சாப்பாடு நன்றாக இல்லை என்று பாட்டியும் தாத்தாவும் சாப்பிடாமல் இருக்கிறார். ஜெனியிடம் தாத்தா சுடுதண்ணி கேட்கிறார். பாக்கியா எதற்கு என்று கேட்க சாப்பிட்டது சேமிக்காமல் இருக்கிறது அதான் சுடுதண்ணி குடிக்கிறேன் என்று தாத்தா சொல்கிறார். அதை கேட்டதும் பாக்கியா வருத்தப்படுகிறார்.

தனது கால்வலியை பார்க்காமல் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பாக்கியா சமைக்கிறார். ஜெனி பாக்கியாவை பற்றி கவலைப்பட பாக்கியா எந்த கவலையும் இல்லாமல் சந்தோசமாக இருக்கிறார். அனைவரும் அமர்ந்து சாப்பிட பாக்கியா சாப்பாடு பரிமாறுகிறார். அப்போது கால் தவறி சாப்பாடு கீழே சிந்த, கோபி சாதாரண கால் வலி தான் எதுவும் செய்யாது என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை!

பின்னர் ஊரில் இருந்து எழில் வர, பாக்கியாவின் நிலையை பார்த்து வருத்தப்படுகிறார். என்னாச்சு என்று கேட்க ஜெனி நடந்ததை சொல்கிறார். டாக்டர் 3 வாரம் ரெஸ்ட் எடுக்க சொன்னார்கள் ஆனால் வீட்டில் யாரும் புரிந்துக் கொள்ளாமல் ஆண்டிக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர் என்று எழிலிடம் சொல்கிறார். ஆன்டி மாடிக்கு செல்ல முடியாமல் சோபாவில் தூங்கி காலையில் எல்லா வேலையும் செய்கிறார் என்று ஜெனி சொல்கிறார்.

அதை கேட்ட எழில் சோபாவில் எப்படி தூங்குவ வா நான் உன்னை மாடிக்கு தூக்கிக் கொண்டு போறேன் என்று சொல்ல, எழில் தனது அம்மாவை தூக்கிக் கொண்டு மாடிக்கு செல்கிறார். காலிற்கு தலைகாணி வைத்துவிடுகிறார். ஜெனி எழிலிடம் சொன்னதை கேட்டு பாட்டி ஜெனியை கண்டபடி திட்டுகிறார். ஜெனி அதை காதில் வாங்காமல் மாடிக்கு சென்று எழிலிடம் நடந்ததை சொல்கிறார். இன்னைக்கு முழுவதும் நீ ரெஸ்ட் எடு எதையும் நினைக்காதே என்று சொல்கிறார்.

சின்னத்திரை தொகுப்பாளர் “ஆனந்த கண்ணன்” திடீர் மரணம் – திரையுலகினர் இரங்கல்!!

எழில் இன்று சமைக்க வேண்டாம் நல்ல ஹோட்டலில் சாப்பாடு வாங்குவோம் என்று சொல்ல, ஜெனி நேற்று ஹோட்டலில் வாங்கி யாருமே சாப்பிடவில்லை என்று சொல்கிறார். பாக்கியா எல்லாம் சமைத்துவிட்டேன் இனி சமைக்க தேவையில்லை என்று சொல்கிறார். ஆனால் வீட்டில் துணி துவைக்க வேண்டும், வீடு துடைக்க வேண்டும் என சொல்ல, நீ ரெஸ்ட் எடு எல்லாம் அதுவே நடக்கும் என எழில் சொல்லுகிறார்.

பாக்கியா எழிலை நினைத்து ஜெனியிடம் மகிழ்ச்சி அடைகிறார். இவன் ஒருத்தன் எனக்கு போதும், நீயும் எனக்கு நல்ல மருமகள் தான் என ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். எழில் துணிகளை மெஷினில் போட்டுவிட்டு எப்படி காய வைப்பது என தெரியாமல் இருக்கிறார். அங்கேயும் பாட்டி வந்து ஜெனியை குறை சொல்லுகிறார். இப்போ எனக்கு எல்லாமே பண்ண தெரியும் என ஜெனி சிரித்துக் கொண்டே சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!