வீட்டு வேலை பார்க்க கஷ்டப்படும் பாக்கியா, சாப்பாடு நல்லா இல்லை என்று குறை சொல்லும் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா ஸ்கூலில் இருந்து வந்ததும் பசிக்கிறது என்று சொல்கிறார். பாக்கியா எந்திரிக்க முடியாமல் இருக்கிறார். பாக்கியா சொல்ல சொல்ல ஜெனி சமைக்கிறார். அனைவரும் சாப்பிட வர நன்றாக இல்லை என்று சொல்கின்றனர்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா காலில் அடிபட்ட காரணத்தால் வேலை செய்ய முடியாமல் இருக்கிறார். இனியா ஸ்கூலில் இருந்து வர பசிக்கிறது என்று சொல்கிறார். பாக்கியா எந்திரிக்க முயற்சி செய்ய முடியாமல் இருக்கிறார். அப்போது ஜெனி பாட்டிக்கு காபி கொண்டு வருகிறார். பாட்டி நன்றாக இல்லை என்று குறை சொல்கிறார். அதன் பின்னர் பாட்டியே காபி போட கிளம்புகிறார்.
பாட்டி சமையல் செய்வேன் ஆனால் என்னால் உடம்பு முடியவில்லை என்று சொல்கிறார். பின்னர் ஜெனி உதவி செய்ய பாக்கியா சப்பாத்தி மாவு தயார் செய்கிறார். அதன் பின்னர் பாக்கியா எப்படி செய்வது என்று சொல்லி தர ஜெனி சமையல் செய்கிறார். பாக்கியா எழுந்து வந்து உதவி செய்கிறார். அதன் பின்னர் அனைவரும் சாப்பிட வருகின்றனர்.
அனைவரும் அமர்ந்து சாப்பிட கோபி இனிமேல் வண்டியை தொட வேண்டாம் என்று சொல்கிறார். பின்னர் சாப்பிட கோபி நன்றாக இல்லை என்று சொல்கிறார். சாப்பாடு நன்றாக இல்லை என்று சொல்லி சாப்பிடாமல் எந்திரிக்கிறார். இனியாவும் சாப்பாடு நன்றாக இல்லை என்று சாப்பிடாமல் எந்திரிக்கிறார். ஜெனி அனைவரும் எந்திரிப்பதை பார்த்து கவலைப்படுகிறார்.
பின்னர் பாக்கியாவிற்கு மருந்து மாத்திரைகளை ஜெனி எடுத்து கொடுக்கிறார். பாக்கியா தனது ரூம் மாடியில் இருப்பதால் எற முடியாது என ஹாலிலேயே தூங்குகிறார். ஜெனி அவருக்கு தேவையான தலைகாணி பெட்ஷீட் கொடுத்துவிட்டு கிளம்புகிறார். லைட் அணைக்காமல் சென்றதால் பாக்கியா கஷ்டப்பட்டு லைட் அமத்துகிறார். இரவெல்லாம் தூங்க முடியாமல் பாக்கியா கஷ்டப்படுகிறார். மாறி மாறி படுத்து கஷ்டப்படுகிறார். காலையில் தூங்க ஈஸ்வரி வந்து எழுப்புகிறார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.