ஈஸ்வரியை வெளியே போக சொன்ன ராதிகா, விஷயம் தெரிந்து வந்த ஜெனி அம்மா – இன்றைய எபிசோட்!

0
ஈஸ்வரியை வெளியே போக சொன்ன ராதிகா, விஷயம் தெரிந்து வந்த ஜெனி அம்மா - இன்றைய எபிசோட்!
ஈஸ்வரியை வெளியே போக சொன்ன ராதிகா, விஷயம் தெரிந்து வந்த ஜெனி அம்மா - இன்றைய எபிசோட்!
ஈஸ்வரியை வெளியே போக சொன்ன ராதிகா, விஷயம் தெரிந்து வந்த ஜெனி அம்மா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா வீட்டிற்கு சென்று கோபி இப்படி செய்ததற்கு நீ தான் காரணம் என ஈஸ்வரி சத்தம் போடுகிறார். உடனே கோவப்பட்ட ராதிகா வெளியே போங்க என சொல்கிறார். மறுபக்கம் ஜெனியின் அம்மா பாக்கியா கோபி விவகாரத்தை தெரிந்து கொண்டு வீட்டிற்கு வருகிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஈஸ்வரி ராதிகா வீட்டிற்கு சென்று கோபி எங்கே? என கேட்டு சண்டை போடுகிறார். கோபியை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் என கேட்டு எல்லா ரூமிற்கும் சென்று தேடுகிறார். அப்போது ராதிகாவின் அம்மா இங்கே இல்லை என சொல்ல ஈஸ்வரி நான் சும்மா சொல்லவில்லை பாதிக்கப்பட்டதால் தான் பேசுறேன் என சொல்கிறார். கோபி அங்கே சண்டை போட்டு இங்கே வந்ததை என் வீட்டு பெரிய மனுஷன் பார்த்ததாக சொல்ல, எல்லாரும் தேவை இல்லாமல் பேசாதீங்க என்று சந்துரு சொல்கிறார். மாடியில் குழந்தை தூங்கி கொண்டு இருக்கிறாள் வருவதற்குள் கிளம்புங்கள் என சொல்கிறார்.

உடனே ராதிகாவின் அம்மா உங்க மகனிற்கு எதுவும் தெரியாதது போல பேசாதீங்க எல்லாத்துக்கும் காரணம் அவர் தான் என சொல்ல, ஈஸ்வரி என் மகனிற்கு எதுவும் தெரியாது இவளை பார்ப்பதற்கு முன்னர் வரை அவன் ஒழுங்காக தான் இருந்தான் என சொல்கிறார். பின் ஈஸ்வரி என் குடும்பத்தை கெடுத்து உங்க மகளை வாழ வைக்கலாம் என நினைக்க வேண்டாம் நீங்க எல்லாரும் நல்லா இருக்க மாட்டிங்க என சொல்ல,ராதிகா நிறுத்துங்க என சொல்கிறார். பின் தேவை இல்லாமல் எல்லாரும் வந்து எங்களை பேசாதீங்க, முதலில் வெளியே போங்க என சொல்கிறார்.

மறுபக்கம் எழில் அலுவலகத்தில் இருக்க அமிர்தா வேலை விஷயமாக பேசுகிறார். பின் அமிர்தா உங்க மனதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் அதை பற்றியே நினைத்தால் எப்படி என சொல்கிறார். இத்தனை நாள் அப்பாவின் வருமானத்தில் குடும்பம் நடந்தது ஆனால் இனி அம்மாவால் எல்லாம் செய்ய முடியாது ஏதாவது செய்து அம்மாவின் சுமையை குறைக்க வேண்டும் என எழில் சொல்கிறார். பின் ப்ரொடியூசர் வந்து எழிலை கூப்பிட அமிர்தாவுடம் எழில் உடன் செல்கிறார். ப்ரொடியூசர் எழிலிடம் கதையில் மாற்றம் செய்ய சொல்லி சொல்ல ஆனால் எழில் அதை மாற்றினால் கதையே மாறிவிடும் என சொல்கிறார்.

உடனே ப்ரொடியூசர் நான் தான் பணம் கொடுக்கிறேன், அதனால் நீங்க செய்ய தான் வேண்டும் என சொல்ல, ஒரு இயக்குனராக நான் சொல்கிறேன் என எழில் சொல்கிறார். உனக்கு வாய்ப்பு கொடுத்து இயக்குனர் ஆக்கியது நான். அதனால் நான் சொல்வதை நீ கேளு என ப்ரொடியூசர் சொல்கிறார். பின் எழில் வெளியே வந்து அவர் சொல்வதை எல்லாம் செய்தால் கதை மாறிவிடும் அதனால் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். பின் ஈஸ்வரி வீட்டிற்கு வர எல்லாம் போய்விட்டது என சொல்கிறார்.

TNUSRB SI தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு – நாளை உடல்தகுதி தேர்வு!

என்னாச்சு என பாக்கியா கேட்க, ஈஸ்வரி வீட்டில் நடக்கும் பிரச்சனையை நான் சரி செய்யலாம் என நினைத்தேன். ஆனால் பாக்கியா செய்த காரியத்தால் எல்லாம் இப்படி ஆகிவிட்டது என ஈஸ்வரி சொல்கிறார். பின் தாத்தா உன் மகன் செய்த பிரச்சனைக்கு பாக்கியாவை ஏன் காரணம் சொல்கிறாய் என கேட்க, அவன் தவறு செய்தால் அவனை வீட்டில் வைத்து பார்க்க வேண்டும். ஆனால் இப்படி செய்து அவன் அங்கே சென்று விட்டான் என ஈஸ்வரி சொல்கிறார். செழியன் எழிலை விட இனியா சிறு பெண் அவளுடைய வாழ்க்கைக்கு இது எவ்வளவு பெரிய பிரச்சனையாகும் என ஈஸ்வரி கேட்கிறார்.

அப்போது ஜெனி அம்மா வீட்டிற்கு வருகிறார். அவர் எல்லாரும் எப்படி இருக்கீங்க என கேட்க, எல்லாரும் எதுவும் சொல்லாமல் மறைக்க நினைக்கின்றனர். கோபி எங்கே என கேட்க, அவர் வெளியே போயிருப்பதாக ஈஸ்வரி சொல்கிறார். அப்போது ஜெனி அம்மா நான் கேள்விப்பட்டது எல்லாம் உண்மையா என கேட்க ஒருத்தவங்க சொன்னாங்க என்னால் நம்ப முடியவில்லை, ஜெனியிடம் கேட்கலாம் என்றால் அவளும் போனை எடுக்கவில்லை. ஆனால் உண்மை என எல்லாரும் சொல்வதாக சொல்ல, இந்த வயதில் எதற்கு செய்ய வேண்டும் என ஜெனி அம்மா கேட்கிறார்.

செழியன் என்ன விஷயம் என கேட்க, அதான் உங்க அம்மாவும் அப்பாவும் என ஜெனி அம்மா சொல்ல வருகிறார். ஆனால் ஜெனி சொல்ல விடாமல் தடுத்து அவரை அழைத்து செல்கிறார். என்னாச்சு ஜெனி என அம்மா கேட்க, அங்கே இதை பற்றி பேச வேண்டாம் என ஜெனி சொல்கிறார். இதெல்லாம் நிஜம் தான உன் மாமியார் மாமனாருக்கு விவாகரத்து ஆகிவிட்டதா என கேட்க, ஆமாம் என ஜெனி சொல்கிறார். நீ இதை பற்றி என்னிடம் சொல்ல வேண்டும் என சொல்ல, இங்கே எல்லாரும் மன வருத்தத்தில் இருக்கிறார்கள் இந்த விஷயத்தை பற்றி பேசாதீங்க என சொல்ல, என்ன நடந்தது என ஜெனி அம்மா கேட்கிறார்.

ஆனால் ஜெனி என் வாழ்க்கை நன்றாக இருக்கிறதா என்று மட்டும் பாருங்க என சொல்கிறார். எல்லாருக்கும் இது தெரிந்து விட்டது என ஜெனி அம்மா சொல்ல, இதை இப்படி கேட்டால் தாத்தா பாட்டி எப்படி வருத்தப்படுகிறார்கள் என ஜெனி சொல்கிறார். அப்போது ஜெனி அம்மா சம்மந்தம் செய்த இடத்தில் பிரச்சனை என்பதால் தான் வந்தேன் என சொல்கிறார். செழியன் பாக்கியாவிடம் இப்போது சந்தோசமா என கேட்கிறார். இனி எல்லா சொந்தக்காரர்களும் வந்து கேட்பார்கள் என செழியன் சொல்கிறார். அவங்க என் மாமியார் என்னை பற்றி கேட்டால் கூட பரவாயில்லை உன்னை பற்றி கேட்டால் எனக்கு எப்படி இருக்கும் என செழியன் கேட்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!