எழிலை வீட்டிற்கு அழைத்து போக சொல்லும் பாக்கியா, ஜெனிக்கு போன் செய்த ராதிகா – இன்றைய எபிசோட்!

0
எழிலை வீட்டிற்கு அழைத்து போக சொல்லும் பாக்கியா, ஜெனிக்கு போன் செய்த ராதிகா - இன்றைய எபிசோட்!
எழிலை வீட்டிற்கு அழைத்து போக சொல்லும் பாக்கியா, ஜெனிக்கு போன் செய்த ராதிகா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு போவோம் என எழிலிடம் சொல்கிறார். பின் இனியா, அம்மாவை நினைத்து அழுது கொண்டே இருக்க, கோபி இனிமேல் அம்மா வரவே மாட்டாள் என சொல்கிறார். மறுபக்கம் ஜெனிக்கு ராதிகா போன் செய்ய ஆனால் ஜெனி கோவமாக பேசிவிட்டு போனை வைக்கிறார்

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருக்க எழிலிடம் இப்படி ஹோட்டலிற்கு வந்து கேட்பது எல்லாத்தையும் செய்து கொடுக்க ஒருவர் இருப்பது எவ்வளவு நன்றாக இருக்கிறது என சொல்கிறார். பின் சில வீடுகளில் கணவர் டீ கூட போட்டு கொடுத்தது இல்லை என சொல்வாங்களே அதற்கு என்ன காரணம் 3 வேளையும் அடுப்படியில் இருப்பவர்களுக்கு டீ போட முடியாதா யாராவது ஒருத்தர் அக்கறையுடன் சமைத்து கொடுத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என பாக்கியா சொல்கிறார். பின் எழில் இன்னைக்கு என்ன நடந்திருக்கு? நீ என்ன பேசுகிறாய்? பேசாமல் இன்னைக்கு மட்டும் அலுவலகத்தில் தங்கி கொள்வோம் நாளைக்கு நான் வேற வீடு பார்க்கிறேன் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

ஆனால் பாக்கியா அதற்கு பதில் சொல்லாமல் சாப்பிட சொல்கிறார். பின் இனியாவிற்கு பிடித்த சிக்கனை எடுத்து பார்த்து இது போல செய்ய சொல்லி இனியா சொல்வாள் ஆனால் நான் இந்த சுவையில் செய்ததே இல்லை என சொல்கிறார். மறுபக்கம் அம்மாவை நினைத்து இனியா அழுது கொண்டே இருக்கிறார். ஈஸ்வரி அழாதே என சொல்ல ஏன் பாட்டி அம்மா இப்படி செய்தார்கள் மொத்தமாக வேண்டாம் என சென்றுவிட்டார்கள் இனிமேல் என்னை பார்க்க கூட வரமாட்டாங்களா என கேட்க, கோபி “இனியா இனிமேல் உன் அம்மா எப்பவும் வரவேமாட்டார்” என சொல்கிறார்.

நம்மை எல்லாம் வேண்டாம் என போனவள் இனிமேல் இங்கே வரவே கூடாது என சொல்ல, ஜெனி சின்ன பெண்ணிடம் என்ன பேசுறீங்க என கேட்கிறார். பின் கோபி உண்மையை சொல்லி தான் ஆக வேண்டும். இனியா என் பொண்ணு நான் சொல்வதை புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறது என சொல்ல, ஈஸ்வரி அவள் நேற்றில் இருந்து சாப்பிடவில்லை, தூங்கவில்லை, இவளுக்கு என்ன சொல்ல போகிறாய்? என கேட்கிறார். ஜெனி, நான் எழிலிற்கு போன் செய்கிறேன் என சொல்ல வேண்டாம் என கோபி சொல்கிறார். இனி பாக்கியாவாக இந்த வீட்டிற்கு வந்தாலும் நான் உள்ளே விடமாட்டேன் என சொல்கிறார்.

நான் ஒரு தவறை செய்தால் அவள் 10 தவறை செய்வாளா அதற்கெல்லாம் நான் இடம் கொடுக்க முடியாது. நான் நம்ம குடும்பத்தை நடுத்தெருவில் விடவில்லை ரத்தம் சுண்ட உழைத்தேன் இனியும் உழைப்பேன் என சொல்கிறார். பின் என்னை மீறி இந்த வீட்டில் அவளிடம் பேசினாலோ சமாதானம் செய்தாலோ எனக்கு பிடிக்காது என சொல்லிவிட்டு, இனியாவிடம் உன் அம்மா நாம யாரும் வேண்டாம் என சென்றுவிட்டாள், கேட்க கஷ்டமாக இருந்தாலும் அதுதான் உண்மை இனி உனக்கு அம்மா தேவை இல்லை உனக்கு நான் இருக்கேன் என சொல்கிறார்.

ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் முகவரியை மாற்றும் வழிமுறைகள் இதோ!

டாடி எப்போதும் உன்னுடன் இருப்பேன் என சொல்ல அம்மா ஏன் என்னை பற்றி யோசிக்கவில்லை என இனியா அழுகிறார். மறுபக்கம் பாக்கியா ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு போகலாம் என சொல்கிறார். எழில் நம்ம வீட்டிற்கா? என கேட்க ஆமாம் என பாக்கியா சொல்கிறார். அதனால் எழில் எதுவும் பேசாமல் கிளம்புகிறார். எழில் தனியாக வீடு பார்க்கலாம் என சொல்ல, ஆனால் பாக்கியா அதெல்லாம் வேண்டாம் வீட்டிற்கு வா என சொல்கிறார். மறுபக்கம் ஜெனி மற்றும் செழியன் இருவரும் வீட்டில் நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். ஜெனி ஆண்டிக்கு போன் செய்து பார்க்கவா என கேட்க செழியன் அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார்.

பாக்கியா மீது செழியன் பயங்கர கோவத்தில் இருக்க, எல்லாத்துக்கும் எழில் தான் காரணம் என்பது போல பேசுகிறார். பின் ஜெனி அங்கிள் கொஞ்சம் இறங்கி போயிருந்தால் ஆன்டி இந்த அளவிற்கு சென்றிருக்கமாட்டார் என சொல்கிறார். அந்த நேரம் பார்த்து ஜெனிக்கு ராதிகா போன் செய்கிறார். என்ன வேண்டும் என ஜெனி கேட்க சும்மா தான் போன் செய்தேன் டீச்சர் எங்கே என கேட்கிறார். உண்மையாகவே டீச்சர் விவாகரத்து வாங்கிட்டாங்களா என கேட்க ஆமாம் எல்லாம் உங்களால் தான் இந்த குடும்பத்தில் அனைவரும் சிதறி கிடக்கிறோம் எல்லாம் தெரிந்து கொண்டு இப்போது ஒன்றும் நடக்காதது போல போன் செய்து பேசுறீங்க என கேட்கிறார்.

ஆன்டி அவங்களே விவாகரத்து வாங்கும் அளவிற்கு நீங்க செய்து இருக்கீங்க இங்கே குடும்பமே மனம் உடைந்து இருக்கிறோம். ஒரு கூட்டு குடும்பத்தை பிரித்தால் அதனால் எவ்வளவு வேதனை இருக்கும் என்பது உங்களுக்கு எப்படி தெரியும் என சொல்ல, செழியன் போனை வாங்கி இனிமேல் இப்படி எல்லாம் போன் செய்யாதீர்கள் என சொல்கிறார். எதாவது கெட்டவார்த்தை பேசுவதற்குள் போனை வைத்துவிடுங்கள் என சொல்ல, ராதிகா அதை நினைத்து மன வேதனையில் இருக்கிறார். அப்போது சந்துரு வந்து ஏன் அழுகிறாய் என கேட்க எல்லாத்துக்கும் என்னை காரணம் சொல்வதாக சொல்கிறார்கள் என சொல்கிறார். சந்துரு நீ உனக்கு மட்டும் நல்லவளாக இருந்தால் போதும் என ராதிகாவிடம் சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here