கோபியை அடித்த ராமமூர்த்தி, வீட்டிற்கு வந்த பாக்கியலட்சுமி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோபியை அடித்த ராமமூர்த்தி, வீட்டிற்கு வந்த பாக்கியலட்சுமி - இன்றைய
கோபியை அடித்த ராமமூர்த்தி, வீட்டிற்கு வந்த பாக்கியலட்சுமி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோபியை அடித்த ராமமூர்த்தி, வீட்டிற்கு வந்த பாக்கியலட்சுமி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி காலையில் வீட்டிற்கு வர பாக்கியாக்கு என்ன ஆனது என தெரியாமல் பேசுகிறார். அதனால் கோவப்பட்ட ராமமூர்த்தி கோபியை அடித்துவிடுகிறார். பின் பாக்கியா ஜெயிலில் இருந்து வர அனைவரும் பார்த்து சந்தோசப்படுகின்றனர்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், குடும்பத்தில் பாக்கியாவை நினைத்து வருத்தத்தில் இருக்க அப்போது செழியன் ஜெனிக்கு போன் செய்து பாக்கியா வெளியே வந்த விஷயத்தை சொல்கிறார். அதை கேட்டு குடும்பத்தில் அனைவரும் சந்தோசப்படுகின்றனர். அப்போது இனியா அப்பா வண்டி சத்தம் கேட்பதாக சொல்ல கோபி எதுவும் தெரியாதது போல வருகிறார். என்ன ஆச்சு பாக்கியா எங்கே என கேட்க உடனே ஈஸ்வரி இரவெல்லாம் எங்கையோ இருந்துவிட்டு இப்போ என்ன கேட்கிறாய் என சத்தம் போடுகிறார். எனக்கு முக்கியமான மீட்டிங் அதனால் தான் கிளம்பி போய்ட்டேன் என சொல்ல அம்மா சொன்னதும் தான் விஷயம் தெரிய வந்துள்ளது என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பாக்கியா எங்கே என கேட்க நீ சொல்வது எல்லாம் நன்றாக இருக்கிறது என ஈஸ்வரி கோவமாக பேசுகிறார். நீ செய்வது பெரிய தவறு என சொல்கிறார். அவளை போலீஸ் புடித்துவிட்டது என்ன செய்வது என தெரியாமல் நாங்க இருந்தோம் என பேச ராமமூர்த்தி எழுந்து கோபியை அடித்துவிடுகிறார். அனைவரும் தடுக்க கோபியை அடித்து நொறுக்குகிறார். கோவப்படாதீங்க உடம்பு சரி இல்லாமல் போக போகுது என சொல்ல ஆனால் தாத்தா கேட்கவில்லை. பின் அனைவரும் சமாதானம் செய்ய தாத்தா கோபி மீது கோவமாக பேசுகிறார். அவன் செய்தது தவறு தான் அதற்காக இப்படி அடிக்கலாமா என ஈஸ்வரி கேட்க அப்போது பாக்கியா வீட்டிற்கு வருகிறார்

எல்லாரும் பாக்கியாவை பார்த்த சந்தோசத்தில் இருக்கின்றனர். இனிமேல் போக வேண்டாமே என கோபி கேட்க, செழியன் நாம மீது தவறு இல்லை என சொல்லி தான் வெளியே வந்துள்ளதாக சொல்கிறார். கோபி சாரி பாக்கியா எனக்கு விஷயம் தெரியாது என சொல்ல எழில் தெரிந்தால் மட்டும் என்ன செய்ய போறீங்க என கேட்கிறார். இனியா நான் எத்தனை முறை போன் செய்தேன் என கேட்க ஆனால் கோபி என்னை மன்னித்துவிடுங்கள் என சொல்கிறார். பாக்கியாவிடம் பல முறை சாரி கேட்க ஈஸ்வரி தாத்தா அடித்ததை சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா வருத்தப்படுகிறார். பின் பாக்கியா பேப்பரில் பெயர் வந்ததை பார்த்துக் கொண்டிருக்க அதை விட சொல்கிறார். நாளை பேப்பரில் ஆன்டி மீது தவறு இல்லை என வந்துவிடும் என சொல்கிறார்.

TNPSC கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் பணிக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!

பாக்கியா உங்களுக்கு அவர் மீது என்ன கோவம் என கேட்க ஈஸ்வரி அவன் செய்ததது தவறு தான், ஆனால் எல்லாம் சரியாகிவிட்டது அவ்வளவு தான் என சொல்கிறார். பின் செல்வி நம்மளிடம் வேலை செய்பவர் வந்து நீ அவங்களை மாட்டி விட்டுவிடுவாய் என பயந்தார்கள் எனஸ் ஆள்கிறார். பின் பாக்கியா ராதிகா கூட என்னை தவறாக நினைத்துவிட்டார் என்னிடம் வருத்தப்பட்டு பேசினார். நான் வேண்டும் என செய்தது போல பேசியதாக சொல்கிறார். ஈஸ்வரி எல்லாருக்கும் வருத்தம் இருக்கும் அதனால் பேசி இருப்பார் என சொல்கிறார். பின் கோபி வந்து பேச ஈஸ்வரி இனிமேல் எங்கே போனாலும் சொல்லிவிட்டு போக வேண்டும் என சொல்கிறார். இனிமேல் போன் செய்தால் போனை எடு என சொல்கிறார். இத்தனை நாள் பாக்கியா போனை தான் எடுக்காமல் இருந்தாய் ஆனால் இப்போது எங்க எல்லாருடைய போனையும் எடுக்கமல் இருப்பதாக சொல்கிறார். எனக்கு பிசினஸில் நிறைய பிரச்சனை இருக்கிறது. இந்த நேரத்தில் ஏன் இந்த சமையல் வேலை செல்லம் செய்கிறாய் என கோபி பாக்கியாவை கேட்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!