பாக்கியாவை இழுத்து சென்ற போலீசார், கண்ணில் சிக்காமல் தப்பித்த கோபி – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. அதனால் போலீஸ் பாக்கியாவை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வருகின்றனர். பின் கோபி மயூராவை அழைத்துக் கொண்டு செல்கிறார். பாக்கியா நன்றாக சமைத்ததாக சொல்ல ஆனால் போலீசார் அதை நம்பவில்லை.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஆசிரமத்தில் குழந்தைகள் உடம்பு சரியில்லாமல் இருப்பதை ராதிகாவும் கோபியும் பார்க்க செல்கின்றனர். அப்போது போலீசார் வர கோபியிடம் நீங்க கொடுத்த உணவை சாப்பிட்டு தான் இப்படி ஆகிவிட்டது என சொல்கின்றனர். அப்போது கோபி குழந்தைகளுக்கு நல்ல உணவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நாங்க இதை செய்தோம். காசு மட்டும் தான் கொடுத்தோம் என சொல்ல எந்த உணவகம் என கேட்கின்றனர். அப்போது ஈஸ்வரி மசாலா என ராதிகா சொல்கிறார். பின் நீங்க தான சாப்பாடு கொடுத்தது உங்களை அப்படி விட முடியாது என போலீசார் சொல்கின்றனர்.
TN Job “FB
Group” Join Now
அப்போது பத்திரிகையாளர்கள் வர கோபி ராதிகா அங்கிருந்து கிளம்பிவிடுகின்றனர். மறுபக்கம் செழியன் வந்து எல்லாரிடமும் நடந்ததை சொல்ல பாக்கியா நான் நன்றாக தான் சமைத்தேன் என சொல்கிறார். பாக்கியா என்ன செய்வது என தெரியாமல் இருக்க போலீசார் வந்து பாக்கியாவை அழைத்து செல்கின்றனர். பாக்கியா நான் எந்த தவறும் செய்யவில்லை என சொல்ல ஆனால் போலீசார் பாக்கியாவை இழுத்துக் கொண்டு வருகிறார். செழியன் வேண்டாம் என தடுத்தும் கூட போலீசார் பாக்கியாவை அழைத்து கொண்டு செல்கின்றனர்.
பின் போலீஸ் ஸ்டேஷனில் கோபி ராதிகா மயூராவுடம் இருக்க நாங்க என்ன தவறு செய்தோம் என கோபி கேட்கிறார். அப்போது போலீசார் நீங்களும் இதில் சம்மந்தப்பட்டு இருக்கீங்க அதனால காத்திருங்கள் அந்த லேடி வந்து கொண்டிருப்பதாக சொல்கிறார். அப்போது கோபி என்னது பாக்கியா இங்கே வருகிறாளா என நினைத்து குழந்தை பயப்படுகிறாள் நாங்க கிளம்ப வேண்டும் என சொல்கிறார். ஆனால் போலீசார் முடியாது என சொல்ல ராதிகாவை விட்டு விட்டு கோபி கிளம்புகிறார். பின் பாக்கியாவை போலீசார் ஆட்டோவில் அழைத்து வருகிறார்.
கடினமான பரிகாரம் செய்யும் முல்லை, பதறி போய் வந்த கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
பாக்கியாவிடம் போலீசார் விசாரணை நடத்த ஆனால் பாக்கியா நான் சரியாக தான் சமைத்தேன் என சொல்கிறார். பின் செழியனும் அம்மா மீது தவறு இருக்காது என சொல்ல நீங்க கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு தான் இப்படி எல்லாம் நடந்திருக்கு ஆனால் நீங்க எதுவும் செய்ய வில்லை என சொன்னால் என்ன அர்த்தம் என கேட்கிறார். ராதிகா அதை எல்லாம் பார்த்து பாக்கியா மீது கோபப்படுகிறார். மறுபக்கம் குடும்பத்தில் அனைவரும் அழுது கொண்டிருக்க எழில் வருகிறார். அம்மாவை போலீஸ் அழைத்து கொண்டு சென்றதை சொல்ல நான் பார்த்துக் கொள்கிறேன் என எழில் கிளம்புகிறார். பின் ஈஸ்வரி கோபிக்கு விவரத்தை சொல்ல சொல்ல ஆனால் கோபி போனை எடுக்கவில்லை ராதிகா பிரச்சனையில் கோபி இருப்பானே என ராமமூர்த்தி நினைக்கிறார். பின் போலீசார் பாக்கியாவை சத்தம் போட ராதிகா எதுவும் பேசாமல் பாக்கியா மீது கோவமாக இருக்கிறார்.