ஈஸ்வரி பேசியதை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, ஜெனி சொன்ன நல்ல செய்தி – இன்றைய எபிசோட்!

0
ஈஸ்வரி பேசியதை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, ஜெனி சொன்ன நல்ல செய்தி - இன்றைய எபிசோட்!
ஈஸ்வரி பேசியதை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, ஜெனி சொன்ன நல்ல செய்தி - இன்றைய எபிசோட்!
ஈஸ்வரி பேசியதை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, ஜெனி சொன்ன நல்ல செய்தி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியாவை கோபி அழைத்து வர பாக்கியா உன்னை காணாமல் நான் எப்படி எல்லாம் தேடினேன் என கேட்கிறார். பின் ஜெனி கோபிக்கு தோன்றவில்லையா என கேட்க செழியன் மற்றும் ஈஸ்வரிக்கு உண்மை தெரியும் என தெரிய வருகிறது. பின் பாக்கியாவிற்கு சமையல் ஆர்டர் குறித்து நல்ல செய்தி வருகிறது

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா கோபியிடம் நான் மிகவும் சந்தோசமாக இருந்தேன் என சொல்லிவிட்டு வருகிறார். பின் பாக்கியா இனியாவிடம் பதில் சொல்லு என கேட்டு பின்னாடி வர கோபி எரிச்சலுடன் கிளம்புகிறார். பாக்கியா கூப்பிடுவது கேட்காமல் இனியா உள்ளே செல்ல நில்லு என பாக்கியா சொல்கிறார். இப்போ எதற்கு கத்துகிறாய் என இனியா கேட்க, எதுக்கு கத்துறேனா உன்னை காணாமல் நான் எப்படி எல்லாம் தவித்து போனேன் என பாக்கியா கேட்கிறார். பின் தாத்தா இனியா எங்கே போனாய் என கேட்க, எப்போதும் ஸ்கூல் பஸில் தான நீ வருவாய் என கேட்கிறார். பின் இனியா இப்போ நான் என்ன செய்தேன் டாடி கூப்பிட்டார் நான் போனேன் என சொல்ல, ஜெனி நீ பேசுவது ரொம்ப தவறு உன்னை காணாமல் ஆன்டி எல்லா இடமும் அலைந்து திரிந்தார் என சொல்கிறார்

தாத்தா உன் அம்மா உன்னால் எவ்வளவு கஷ்டப்பட்டால் என கேட்க, நான் என்ன செய்வது டாடி கூப்பிட்டதும் எனக்கு எதுவும் தோன்றவில்லை என சொல்கிறார். உடனே ஜெனி இனியா தான் சின்ன பொண்ணு அன்கிளிற்கு விவரம் தெரியும்ல அவர் கால் செய்து ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் என்ன என கேட்க செழியன் அப்பா எனக்கு போன் செய்து சொல்லிவிட்டு தான் சென்றார் என சொல்கிறார். உடனே ஜெனி அங்கிள் உனக்கு கால் செய்தாரா ஏன் அதை ஆண்டியிடம் சொல்லவில்லை என்னிடம் சொல்லிருக்கலாமே என கேட்க, உடனே தாத்தா கோவப்பட்டு வீட்டில் இனியாவை காணவில்லை என்றால் நாங்க பதறி போய் தேடமாட்டோமா என கேட்கிறார். உடனே செழியன் நான் அப்பா கால் செய்ததை பாட்டியிடம் சொன்னேன் என சொல்கிறார்

உடனே செல்வி ஏன் அம்மா சொல்லவில்லை நாங்க எங்கே எல்லாம் அலைந்தோம் தெரியுமா என கேட்க, பாக்கியாவும் ஏன் அத்தை என்னிடம் சொல்லவில்லை என கேட்கிறார். உடனே ஈஸ்வரி நான் மறந்துவிட்டேன் என சொல்கிறார். உடனே தாத்தா இதெல்லாம் என்ன புத்தி என கேட்க, நான் என்ன செய்வது புள்ளைங்களே அப்பாவுடன் போவதை அம்மாவிற்கு தெரிய வேண்டாம் என நினைத்தால் நான் என்ன செய்வது. கோபியை வெளியே அனுப்பாமல் இருந்தால் அவங்க ஒழுங்காக இருந்து இருப்பார்கள். எல்லா பிரச்சனைக்கும் காரணமாக இருந்துவிட்டு இப்போ கஷ்டமாக இருந்தால் என்ன செய்வது. உனக்கு தான் புருஷன் தேவை இல்லை அதற்காக பிள்ளைகளுக்கு அப்பா வேண்டாமா என கேட்கிறார். உடனே தாத்தா என்ன நடக்கிறது என்ன பேசுகிறாய் என கேட்கிறார்.

கொரோனா வைரஸை எதிர்க்கும் “SP1-77” ஆண்டிபாடி கண்டுபிடிப்பு – விரைவில் நடைமுறை!

உடனே செழியன் பாட்டி சொல்வதில் தவறு இல்லை என சொல்கிறார். இனியாவை அப்பா தான கூட்டி கொண்டு சென்று இருக்கிறார். இவங்க தான் தேவை இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்வதாக சொல்ல , கொஞ்ச நேரம் காத்திருக்கலாம் என சொல்கிறார். உடனே பாக்கியா என்னடா சொன்ன காத்திருக்க வேண்டுமா, அத்தை கேட்டடீங்களா நீங்க தான் கொஞ்ச நேரத்திற்கு முன்னாள் நாடு கெட்டு கிடக்கிறது என சொன்னீங்களே என சொல்கிறார். பின் இனியா நீ ஏன் இதை பெரிய பிரச்சனையாக ஆக்குகிறாய் வர வர உன்னை பார்த்தால் எனக்கு பிடிக்கவில்லை. பேசாமல் நான் டாடி உடன் போக போகிறேன். எல்லாம் உன்னால் தான் டாடியை பார்க்க முடியாமல் இருக்கேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்

பின் ஈஸ்வரி இப்போவாவது குழந்தைகள் மனசில் என்ன இருக்கு என தெரிந்து கொள் என சொல்லிவிட்டு கிளம்ப பாக்கியா ஈஸ்வரி பேசியதை நினைத்து வருத்தப்படுகிறார். பின் செல்வி பாக்கியா சோகமாக இருப்பதை பார்த்து சாப்பிட வர சொல்ல, ஜெனி இதெல்லாம் வீட்டில் தினமும் நடக்கிறது தான் என சொல்கிறார். எல்லா அம்மா போல தான் நானும் நினைத்தேன் என சொல்ல, எல்லாம் சரியாகிவிடும் என செல்வி சொல்கிறார். பின் பாக்கியா எழில் வந்ததும் சாப்பிடுகிறேன் என சொல்ல, சரியான நேரத்தில் எழில் வருகிறார். எழில் பாக்கியாவிடம் ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என கேட்க ஜெனி நடந்ததை சொல்கிறார். உடனே எழில் கோவப்பட அதெல்லாம் அவள் புரிந்து கொள்கிற நிலைமையில் இல்லை என பாக்கியா சொல்கிறார்.

என்னமோ நான் உங்க எல்லாரையும் அப்பாவிடம் இருந்து பிரிக்க பாக்குறேன் என நினைக்கிறார்கள். செழியனுக்கே அதெல்லாம் புரியவில்லை, இனியா சின்ன பெண் என பாக்கியா சொல்கிறார். பின் பாக்கியாவிற்கு மெசேஜ் ஒன்று வர ஜெனியிடம் கொடுத்து பாக்கியா என்ன என பார்க்க சொல்கிறார். பின் ஜெனி ஆமாம் கல்யாண மண்டபத்தில் இருந்து தான் பண்ணிருக்காங்க நேர்காணலுக்கு வர சொல்லிருப்பதாக சொல்ல, பாக்கியா எனக்கு நம்பிக்கை இருந்தது என சொல்லி சந்தோசப்படுகிறார். பாக்கியா எழிலிடம் இது பற்றி தெரியுமா என கேட்க, எனக்கு எப்படி தெரியும் என எழில் கேட்கிறார். சமையல் நேர்காணல் எல்லாம் சுலபமாக தான் இருக்கும் என ஜெனி சொல்ல, எப்படியாவது இதில் தேர்வாக வேண்டும் என பாக்கியா சொல்கிறார்.

பின் ஈஸ்வரி தாத்தாவிற்கு கை அமுக்கி விட பாக்கியா கிளம்பி வந்து நிற்கிறார். தாத்தா எழில் உடன் எங்கே கிளம்பி இருக்கிறாய் என கேட்க, எழில் அம்மா நேர்காணல் போக இருப்பதாக சொல்கிறார். தாத்தா ரொம்ப சந்தோசம் என சொல்ல இப்படி ஏற்றி விட்டு தான் இவள் இப்படி இருக்கிறாள் என ஈஸ்வரி சொல்கிறார். ஆனால் தாத்தா அதை எல்லாம் கேட்காதே நீ கிளம்பு என சொல்ல, ஈஸ்வரி ஆமாம் நீ கிளம்பு இந்த வீட்டில் எல்லாம் தானாக நடக்கும் என சொல்கிறார். இங்கே ஒருவன் நன்றாக சம்பாரித்தான் ஆனால் அவனை விரட்டிவிட்டு இப்போ என்னென்னமோ செய்து கொண்டிருக்கிறாய் என சொல்ல, தாத்தா தப்பு செய்தவன் வீட்டை விட்டு சென்றுவிட்டான் என சொல்கிறார். பின் இனியா ஸ்கூலிற்கு கிளம்ப எழில் இனிமேல் ஸ்கூல் முடிந்த பின் வீட்டிற்கு வர வேண்டும் என சொல்கிறார். அதன் பின் பாக்கியாவும் கிளம்ப ஜெனி செல்வி வாழ்த்து சொல்லி அனுப்புகின்றனர். ஆனால் ஈஸ்வரிக்கு அதெல்லாம் பிடிக்காமல் இருக்கிறது. தாத்தா எல்லாம் நல்லபடியாக நடக்கும் என வாழ்த்து சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here