பெரிய கேட்டரிங் ஆர்டர் வாங்க விண்ணப்பிக்கும் பாக்கியா, இனியாவை காணாமல் தவிக்கும் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

0
பெரிய கேட்டரிங் ஆர்டர் வாங்க விண்ணப்பிக்கும் பாக்கியா, இனியாவை காணாமல் தவிக்கும் குடும்பத்தினர் - இன்றைய எபிசோட்!
பெரிய கேட்டரிங் ஆர்டர் வாங்க விண்ணப்பிக்கும் பாக்கியா, இனியாவை காணாமல் தவிக்கும் குடும்பத்தினர் - இன்றைய எபிசோட்!
பெரிய கேட்டரிங் ஆர்டர் வாங்க விண்ணப்பிக்கும் பாக்கியா, இனியாவை காணாமல் தவிக்கும் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா கோபி திருமணம் பற்றி சந்துரு பேசுகிறார். ஆனால் ராதிகா அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருக்கிறார். மறுபக்கம் பாக்கியா பெரிய கேட்டரிங் ஆர்டர் ஒன்றை வாங்க போட்டி ஒன்றில் கலந்து கொள்கிறார். பின் குடும்பத்தினர் இனியாவை காணாமல் பதட்டம் அடைகின்றனர்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகாவின் அண்ணன் சந்துரு கோபியிடம் கல்யாண வேலையை உடனே ஆரம்பிக்கலாம் என சொல்ல ராதிகா என்னது கல்யாணமா இப்போ எதற்கு கல்யாண பேச்சு என கேட்க, சந்துரு இப்போ வேண்டாம் என்றால் எப்போ கல்யாணம் செய்ய போகிறாய் என சந்துரு கேட்கிறார். பின் ராதிகாவின் அம்மா உங்க இருவருக்கும் என்ன வயது ஆகிறது இப்போ கல்யாணம் செய்யாமல் என்ன செய்ய போகிறாய் என கேட்கிறார். பின் கோபி என்னை பிடித்திருக்கா இல்லையா ஓப்பனாக சொல்லு என கேட்க பிடிக்காமல் தான் இப்படி உட்கார்ந்து பேசி கொண்டிருக்கேனா என ராதிகா கேட்கிறார்.

அப்போ திருமணம் செய்ய என்ன பிரச்சனை என கோபி கேட்க நான் ஒப்பானாக சொல்கிறேன் எனக்கு குடும்பம் இல்லை, வீடு இல்லை உடம்பு சரியில்லாமல் போனால் பார்க்க ஆள் இல்லை என கோபி கேட்கிறார். எல்லாம் உனக்காக தான் செய்தேன் என கோபி சொல்ல, ஒருவன் அம்மா அப்பா எல்லாத்தையும் விட்டு வந்திருக்கான் என்றால் அது எவ்வளவு பெரிய முடிவு நான் உனக்காக அந்த ரிஸ்க் எடுத்து இருக்கிறேன் என கோபி சொல்கிறார். உனக்காக தான் என் வாழ்க்கையில் சுயமாக யோசித்து முடிவு எடுத்தேன் என கோபி சொல்கிறார். நீ இப்படி தயங்குவதை பார்த்தால் எனக்கு வேதனையாக இருப்பதாக கோபி சொல்கிறார். நீ என்னை கல்யாணம் செய்தால் பாக்கியா என்ன நினைப்பார், என் குடும்பம் என்ன நினைக்கும் அவங்க பேசியது எல்லாம் உண்மையாகிவிடும், கோபி கல்யாணத்திற்கு பின் இப்படி மீண்டும் ஏமாற்றி விடுவான் என தான நினைக்கிறாய் என கேட்கிறார்.

நான் உனக்கு சத்தியம் செய்து கொடுக்கிறேன் நான் எப்போதும் இதே போல உன்னுடன் வாழ போகிறேன் என கோபி சொல்கிறார். ராதிகா இனிமேல் நானும் என் மயூராவும் கஷ்டப்பட கூடாது என சொல்ல கோபி அது இனிமேல் நடக்காது என சொல்கிறார். உடனே ராதிகாவின் அம்மா கல்யாண ஏற்பாடுகளை செய்ய சொல்கிறார். மறுபக்கம் செல்வி வேலை பார்த்து கொண்டிருக்க பாக்கியா நியூஸ் பேப்பரில் விளம்பரம் ஒன்றை பார்க்கிறார். அதில் பெரிய சமையல் ஆர்டர் பற்றி இருக்கிறது. பாக்கியா அதை படித்துவிட்டு பெரிய மஹாலில் சமையல் ஆர்டர் செய்ய ஆள் வேண்டும் என போட்டிருப்பதாக சொல்ல செல்வி அதெல்லாம் பெரிய விஷயம் என சொல்கிறார்.

பாக்கியா நீ எதுவும் சொல்ல வேண்டாம் என சொல்லிவிட்டு ஜெனியிடம் சென்று விளம்பரத்தை காட்டி பாக்கியா எனக்கு விண்ணப்பித்து தரும்படி கேட்கிறார். ஆன்டி இது பெரிய விஷயம் இதில் பெரிய ஆட்கள் கலந்து கொள்வார்கள் நிறைய இடத்தில்ஒரே நேரத்தில் சமைக்க வேண்டும். இதில் பெரிய ஆட்கள் தான் அப்ளை செய்வார்கள் என சொல்ல, பாக்கியா இருக்கட்டும் அதனால் என்ன என கேட்கிறார். என் பையன் இருந்தால் அவனிடம் கேட்டு இருப்பேன் அவன் இல்லாதனாலே தான் உன்னிடம் கேட்கிறேன் என பாக்கியா சொல்கிறார். ஜெனி எனக்கு இதில் விருப்பம் இல்லாமல் இருந்தாலும் நான் அப்ளை செய்கிறேன் என ஜெனி சொல்கிறார்.

கோபியிடம் சவால் விடும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!

மறுபக்கம் கோபி இனியாவை பார்க்க ஸ்கூலிற்கு வருகிறார். இனியா கோபியை பார்த்து அழ ஏன் அழுகிறாய் என கேட்கிறார். எனக்கு நீங்க இல்லாமல் வீட்டில் இருக்க பிடிக்கவில்லை என சொல்ல, கோபி சீக்கரம் உன்னை கூட்டி செல்கிறேன் என சத்தியம் செய்கிறார். பின் உன்னை கூப்பிட யாரும் வரவில்லையா என கேட்க, ஆமாம் என்னை ஸ்கூல் பஸில் வர சொன்னதாக சொல்கிறார். கோபி பாக்கியாவை திட்டிவிட்டு எல்லாம் சில நாட்களில் சரியாகிவிடும் என சொல்கிறார். பின் இனியாவை அழைத்து கொண்டு ஹோட்டல் செல்ல, இனியா சந்தோசமாக இருக்கிறார்.

மறுபக்கம் பாக்கியா இனியாவை இன்னும் காணாமல் வாசலை பார்த்துக் கொண்டே இருக்கிறார். அப்போது ஜெனி வந்து என்ன வாசலை பார்த்து கொண்டிருக்கீங்க என கேட்க இனியா இன்னும் வரவில்லை என சொல்கிறார். ஜெனி இனியா வந்துவிடுவாள் என சொல்ல, சரி உங்களை சந்தோஷப்படுத்த ஒரு விஷயம் சொல்லவா நீங்க அப்ளை செய்தது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என சொல்கிறார். பின் பாக்கியா இனியா வராமல் நான் தவித்து இருப்பதாக சொல்ல, தாத்தாவும் ஈஸ்வரியும் என்ன ஆச்சு என கேட்கின்றனர். இனியா இன்னும் வரவில்லை என பாக்கியா சொல்ல, தாத்தா வந்துவிடுவாள் என சொல்கிறார். உடனே ஈஸ்வரி நாடு கெட்டு கிடக்கிறது இதுவே கோபி இருந்தால் இனியாவை சரியாக கூட்டிக் கொண்டு வந்திருப்பான் என ஈஸ்வரி சொல்கிறார். பின் பாக்கியா வேன் டிரைவருக்கு போன் செய்ய இனியா ஸ்கூல் பஸில் ஏறவில்லை என அவர் சொல்ல குடும்பத்தினர் வருத்தப்படுகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here