அமிர்தாவின் திருமணம் பற்றி யோசிக்கும் குடும்பம், தொழிலை விடாமல் செய்ய முடிவு செய்த பாக்கியா – இன்றைய எபிசோட்!

0
அமிர்தாவின் திருமணம் பற்றி யோசிக்கும் குடும்பம், தொழிலை விடாமல் செய்ய முடிவு செய்த பாக்கியா - இன்றைய எபிசோட்!
அமிர்தாவின் திருமணம் பற்றி யோசிக்கும் குடும்பம், தொழிலை விடாமல் செய்ய முடிவு செய்த பாக்கியா - இன்றைய எபிசோட்!
அமிர்தாவின் திருமணம் பற்றி யோசிக்கும் குடும்பம், தொழிலை விடாமல் செய்ய முடிவு செய்த பாக்கியா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், செழியன் பாக்கியாவிற்கு உதவி செய்ய வேண்டும் என ஜெனி சொல்ல ஆனால் செழியன் முடியாது என சொல்கிறார். மறுபக்கம் அமிர்தாவின் திருமணம் பற்றி அம்மா அப்பா பேசுகின்றனர். பின் பாக்கியா தொழிலை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என முடிவு செய்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், செழியனிடம் ஜெனி ஆண்டிக்கு உதவி செய்தால் என்ன என கேட்கிறார். நான் அம்மா கேட்டதால் தான் எப்போதும் கொடுக்கும் பணத்தை கொடுக்கிறேன் அதற்கு மேல் ஒரு ரூபாய் கூட கொடுக்கமாட்டேன். அம்மாவிற்கு அப்போது தான் செய்த தவறு என்ன என்பது தெரிய வரும் என சொல்கிறார். பின் ஜெனி நீயும் அங்கிள் மாதிரி தான் இருக்கிறாய் குடும்பம் என்றால் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து தான் இருக்க வேண்டும் என ஜெனி சொல்கிறார். ஆனால் செழியன் நான் அப்பா மாதிரி தான் இருக்கேன் ஆனால் நீ அம்மா மாதிரி இருக்கிறாய் என செழியன் சொல்ல, நீயும் உன் அப்பா போல செய்ய தயங்க மாட்டாய் போல என ஜெனி சொல்கிறார். உடனே செழியனுக்கு கோவம் வருகிறது.

மறுபக்கம் அமிர்தாவை பார்க்க எழில் வருகிறார். நிலாவை தூக்கி கொஞ்ச வீட்டில் ஒரே பிரச்சனையாக இருக்கிறது என சொல்கிறார். அம்மா ஒரு பக்கம் பாட்டி ஒரு பக்கம் ஜெனி ஒரு பக்கம் இருக்கின்றனர். தினமும் பணம் தேவை வந்து பிரச்சனையை அதிகப்படுத்துகிறது என எழில் சொல்கிறார். அம்மா எப்படி தான் சமாளிக்க போறாங்களோ என எழில் கேட்க அமிர்தா உண்மையாகவே அம்மா பாவம் தான் என சொல்கிறார். பின் எழில் வீட்டில் இவ்வளவு பிரச்சனை என்றால் ஆபிஸில் ப்ரொடியூசர் வேற கதையை மாற்று இல்லை என்றால் ஆபிஸை காலி செய்துவிடு என சொல்வதாக சொல்கிறார். இப்படியா சொல்றாங்க நீங்க கவலைப்படாதீங்க என அமிர்தா சொல்ல, அம்மாவிற்கு வீட்டில் பண கஷ்டம் இருக்கிறது ஆனால் உதவி செய்ய முடியவில்லை என கஷ்டமாக இருப்பதாக சொல்ல அப்போது அமிர்தாவின் அப்பா அம்மா வருகின்றனர்.

அமிர்தாவை காபி கொடுக்க சொல்ல ஆனால் எழில் கிளம்புவதாக சொல்கிறார். மறுபக்கம் ஜெனி பணத்தேவையை பற்றி யோசித்து கொண்டிருக்க செல்வி என்ன யோசிக்கிறாய் என கேட்கிறார். அப்போது ஜெனி ஆன்டிக்கு உதவி செய்யாமல் செழியன் பேசுவது சரி இல்லை. கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் அங்கிள் பக்கம் நியாயம் இருப்பது போல பேசுவது சரியா என கேட்க செல்வி அதெல்லாம் ஒன்றுமில்லை சார் மீது செழியன் தம்பிக்கு பாசம் என சொல்கிறார். அக்கா அதெல்லாம் சமாளித்துவிடும் நீ எதுவும் சண்டை போடாதே என சொல்கிறார். பின் ஜெனி ஆண்டியிடம் இது பற்றி எதுவும் சொல்ல வேண்டாம் என ஜெனி சொல்கிறார். பின் பாக்கியாவிற்கு கஸ்டமர் ஒருவர் போன் செய்கிறார். ஆர்டர் வாங்கிக்கொண்டு சாப்பாடு கொடுக்காமல் இருந்தால் என்ன அர்த்தம் என அவர் சத்தம் போடுகிறார்

பாக்கியா இனிமேல் சரியாக சாப்பாடு கொடுக்கிறோம் என பாக்கியா சொல்கிறார். பின் பாக்கியா ஜெனியிடம் ஆர்டர் கொடுத்தவங்க போன் பேசியதாக சொல்ல, செல்வி நினைத்தேன் ஒரு வாரம் ஆனால் பிரச்சனை வர தான் செய்யும் என சொல்கிறார். உடனே பாக்கியா சொந்த பிரச்சனையை விட்டுவிட்டு ஆர்டர் கொடுத்திருக்க வேண்டும் என சொல்கிறார். இனிமேல் என்ன பிரச்சனை வந்தாலும் சப்பளை நிறுத்த கூடாது என பாக்கியா சொல்கிறார். இனிமேல் எதாவது செய்து ஜெயிக்க வேண்டும் என பாக்கியா நினைக்கிறார். மறுபக்கம் அமிர்தாவின் அப்பா அம்மா ஒன்று கேட்டால் தவறாக நினைக்கமாட்டியே என கேட்கின்றனர். அமிர்தா என்ன அப்பா என கேட்க எழில் குடும்பத்தில் நடப்பது எதுவும் சரி இல்லை

அவருடைய அப்பா இவ்வளவு மோசமாக இருப்பார் என நினைத்து கூட பார்க்கவில்லை. பதிலுக்கு எழில் அம்மா கோர்ட் வரை சென்று விவாகரத்து வாங்கி இருக்கிறார். அதனால் உன்னுடைய திருமணம் பற்றி எப்படி பேசுவது என கேட்கின்றனர். உன்னுடைய முடிவு சரியாக இருக்குமா என எங்களுக்கு சந்தேகமும் பயமும் வந்துள்ளது என சொல்ல அமிர்தா அதை கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர். ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க என அமிர்தா கேட்க எழில் நல்ல பையன் தான் ஆனால் குடும்பத்தை பற்றி நாம நினைக்க வேண்டும் இந்த சூழ்நிலையில் உங்க கல்யாணத்தை அவர்கள் சம்மதிக்கமாட்டார்கள் என அமிர்தாவின் அம்மா சொல்கிறார். அமிர்தா எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார்

PF பயனர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் நாமினி பதிவு!

எழில் அப்பா தான் சரி இல்லை பாக்கியா அம்மா எழிலிற்கு தான் ஆதரவாக இருப்பார் என சொல்ல, புரியாமல் பேசாதே பாக்கியா மட்டும் குடும்பம் இல்லை என அமிர்தாவின் அப்பா சொல்கிறார். கல்யாண விஷயத்தில் கவன குறைவாக இருக்க முடியாது என அமிர்தாவின் அப்பா அம்மா சொல்கின்றனர். அமிர்தா எல்லாம் சீக்கிரமாக சரியாகிவிடும் என சொல்கின்றனர். அமிர்தாவின் அம்மா அப்பா நன்றாக யோசித்து கொள் என சொல்கிறார்.

மறுபக்கம் ராதிகா ஏன் கோபியை வர சொன்னாய் என சந்துருவை கேள்வி கேட்கிறார். அப்போது சந்துரு எதாவது முடிவு எடுக்க தான் வேண்டும் என சொல்ல, ராதிகாவின் அம்மா உனக்கு ஒரு பெண் இருக்கிறாள் அதனால் சரியான முடிவு எடுக்க வேண்டும். கோபி உனக்காக தான் குடும்பத்தை விட்டு வந்திருப்பதாக சொல்கிறார். அப்போது கோபி வர மயூரா எங்கே என கேட்கிறார். அவள் பக்கத்து வீட்டில் விளையாடுவதாக ராதிகா சொல்கிறார். சந்துரு என்ன முடிவு செய்திருப்பதாக கோபியிடம் கேட்க நான் என்ன முடிவு செய்ய ராதிகா தான் முடிவு செய்ய வேண்டும் என கோபி சொல்கிறார்.

இவ்வளவு கஷ்டமும் ராதிகாவிற்காக தான் செய்தேன் அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என கோபி கேட்க அவளால் முடிவு செய்ய முடியவில்லை என ராதிகாவின் அம்மா சொல்கிறார். சந்துரு இனிமேல் தள்ளி போட வேண்டாம் என சொல்ல உங்களுக்கு சரி என்றால் சொல்லுங்கள் திருமண ஏற்பாடுகளை செய்யலாம் என சந்துரு சொல்கிறார். அதை கேட்ட ராதிகா எதற்கு திருமணம் பற்றி இப்போது பேச வேண்டும் என அதிர்ச்சியுடன் கேட்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!