ஈஸ்வரியிடம் உண்மையை சொன்ன ராமமூர்த்தி, ராதிகாவை மிரட்டும் ராஜேஷ் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ஈஸ்வரியிடம் உண்மையை சொன்ன ராமமூர்த்தி, ராதிகாவை மிரட்டும் ராஜேஷ் - இன்றைய
ஈஸ்வரியிடம் உண்மையை சொன்ன ராமமூர்த்தி, ராதிகாவை மிரட்டும் ராஜேஷ் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ஈஸ்வரியிடம் உண்மையை சொன்ன ராமமூர்த்தி, ராதிகாவை மிரட்டும் ராஜேஷ் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் மயூராவிடம் ராதிகா மன்னிப்பு கேட்க அப்போது ராதிகாவின் நீ செய்த தவறுக்காக குழந்தையை கஷ்டப்படுத்துகிறாய் என சொல்கிறார். மறுபக்கம் எழிலிடம் ஈஸ்வரி கோபி பற்றி கேட்க ராமமூர்த்தி வந்து உண்மையை சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் மயூராவிடம் ராதிகா பேசியதை நினைத்து மன்னிப்பு கேட்கிறார். அப்போது ராதிகாவின் அம்மா வந்து நீ எடுக்கும் முடிவால் குழந்தை தான் கஷ்டப்படுகிறது என சொல்கிறார். என்னுடைய நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் என சொல்ல அப்போது ராஜேஷ் வீட்டிற்கு வருகிறார். ராஜேஷ் ராதிகாவிடம் இவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அழகு குறையாமல் இருக்கிறாய் என கேட்க அப்போது ராதிகாவின் அண்ணன் எதற்கு இப்போது இங்கே வந்தாய் என கேட்கிறார். உனக்கும் ராதிகாவிற்கும் தான் ஒன்றுமில்லை என கோர்ட் சொல்லிவிட்டது என சொல்ல, ராஜேஷ் என் மகள் இங்கே தான் இருக்கிறாள் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

என் மகளை நான் என்னுடன் அழைத்து செல்ல எல்லா வேலைகளையும் செய்துவிட்டேன் என சொல்ல ராதிகா அவனை திட்டி வெளியே போக சொல்கிறார். பின் ராதிகாவின் அண்ணன் நீ கோபியை திருமணம் செய்யாமல் இருந்தால் இவன் மீண்டும் தொல்லை செய்வான் என சொல்கிறார். மறுபக்கம் எழில் தாத்தாவிடம் இப்போது எப்படி நான் வெளியே போவேன் என சொல்லி வருத்தப்படுகிறார். அப்போது ஈஸ்வரி அழைக்க எழில் வெளியே செல்கிறார். ஈஸ்வரி அவரிடம் எவனோ ஒருவன் வந்து கோபியை பற்றி பேசுகிறான் நீ ஏன் அமைதியாக இருக்கிறாய் என கேட்கிறார்.

நீயும் தாத்தாவும் ஏன் கோபியிடம் பேசாமல் இருக்கீங்க என கேட்க எழில் அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்கிறார். ஈஸ்வரி அப்போ ஏன் தாத்தாவை உள்ளே அழைத்து சென்றாய். பாக்கியாவை யாரவது இப்படி பேசினால் சும்மா இருப்பியா இப்போது கோபியை மட்டும் ஏன் செய்கிறாய். அவன் அப்படி என்ன செய்தான் என கோபியை நினைத்து வருத்தப்பட அப்போது தாத்தா கோபத்துடன் வந்து உன் மகன் நீ கவலைப்படும் அளவிற்கு யோக்கியன் இல்லை என சொல்கிறார்.

அவன் வந்து சொன்னது எல்லாம் உண்மை தான் உன் மகனிற்கு வேறு பெண்ணுடன் தொடர்ப்பு இருக்கிறது என சொல்ல, இது எனக்கும் எழிலிற்கும் தெரியும் என சொல்கிறார். பின் எழில் நான் வேறு பெண்ணுடன் பல முறை பார்த்திருக்கேன் என சொல்ல ஈஸ்வரி செழியனிடம் சொல்லி கோபியை சீக்கிரம் வர சொல்கிறார். பின் அவரே சென்று கோபிக்கு போன் செய்து உடனே வர சொல்கிறார். கோபி என்ன ஆச்சு என கேட்க எவனோ வந்து உன்னை பற்றி எதோ சொல்கிறான் என்ன நடக்கிறது என கேட்கிறார்.

ஆதார், பான் இணைப்பிற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவு – வருமான வரித்துறை எச்சரிக்கை!

பின் கோபியை உடனே வர சொல்ல கோபி எல்லாத்தையும் நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே வேகமாக வண்டியை ஓட்டுகிறார் அப்போது இனியா வந்து நான் அம்மாவை கூட்டிட்டு வருகிறேன் என சொல்லி வெளியே செல்கிறார். கோபி நடந்ததை எல்லாம் நினைத்து வேகமாக வண்டியை ஓட்டி வருகிறார். அம்மாவிற்கு உண்மை எல்லாம் தெரிந்திருக்குமா என நினைத்துக் கொண்டே வண்டியை ஓட்ட இனியா வேகமாக பாக்கியாவை தேடி செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here