கோபியை திருமணம் செய்வதாக எழுதி கொடுத்த ராதிகா, மயூராவை அக்கறையுடன் கவனிக்கும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

0
கோபியை திருமணம் செய்வதாக எழுதி கொடுத்த ராதிகா, மயூராவை அக்கறையுடன் கவனிக்கும் பாக்கியா - இன்றைய எபிசோட்!
கோபியை திருமணம் செய்வதாக எழுதி கொடுத்த ராதிகா, மயூராவை அக்கறையுடன் கவனிக்கும் பாக்கியா - இன்றைய எபிசோட்!
கோபியை திருமணம் செய்வதாக எழுதி கொடுத்த ராதிகா, மயூராவை அக்கறையுடன் கவனிக்கும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் மயூரா வீட்டில் தனியாக இருக்க பாக்கியா வந்து மயூராவிற்கு தைரியம் சொல்கிறார். மறுபக்கம் போலீஸ் கோபியும் ராதிகாவும் திருமணம் செய்து கொள்வார்கள் என எழுதி கொடுத்துவிட்டு போக சொல்கிறார். ராதிகா வேறு வழியில்லாமல் எழுதி கொடுக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், மயூரா பாக்கியாவிடம் அப்பா புகார் கொடுத்து இருக்கிறார், அம்மாவிற்கு எதாவது நடந்துவிடும் என பயமாக இருப்பதாக சொல்லி அழுகிறார். என்னை போலீஸ் ஸ்டேஷன் வர கூடாது என சொல்லிவிட்டு இப்படி தனியாக விட்டு சென்றுவிட்டார் என சொல்கிறார். நீ தனியாக இருக்கிறாய் எனக்கு ஒரு போன் செய்தால் நான் வந்து துணைக்கு இருந்திருப்பேன் இல்லை என்றால் என் வீட்டிற்கு உன்னை கூட்டிக் கொண்டு சென்று இருப்பேன் என சொல்லி மயூராவை அழாமல் இருக்க சொல்கிறார்

பின் ராதிகா போலீசிடம் இப்படி எல்லாம் எழுதி கொடுக்க மாட்டேன் என ராதிகா பிடிவாதமாக இருக்கிறார். அப்போது ராதிகாவின் அண்ணன் அப்போ மயூரா உன்னை விட்டு சென்றுவிடுவாள் என சொல்கிறார். கோபியிடம் சண்டை போடாதே என சொல்லியும் கேட்கவில்லை என சொல்ல கண்டிப்பாக நீ எழுதி கொடுத்தால் தான் பிரச்சனை சரியாகும் என சொல்கிறார். பின் ராதிகா எழுதி கொடுக்க சம்மதிக்கிறார். பின் பாக்கியா மம்மி வரும் வரை நான் உன் உடன் இருக்கிறேன் என சொல்கிறார். அவர் கொண்டு வந்த பிஸ்கட் கொடுத்து சாப்பிட சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

மம்மி கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்தால் என்னை டாடியிடம் அனுப்பி விடுவார்கள் என மயூரா சொல்ல பாக்கியா அப்படி எல்லாம் நடக்காது என சொல்கிறார். பின் ராதிகா கோபியை திருமணம் செய்ய இருப்பதாக கையெழுத்து போடுகிறார். ராஜேஷ் அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின் ராதிகா எதுவும் பேசாமல் வீட்டிற்கு வருகிறார். மறுபக்கம் பாக்கியா மயூராவை சாப்பிட வைத்து தூங்க சொல்கிறார். மயூரா தூங்கிவிட ராதிகா வீட்டிற்கு வருகிறார். அங்கே பாக்கியா இருப்பதை பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

பாக்கியா என்ன நான் உங்க வீட்டில் இருக்கிறேன் என அதிர்ச்சியாக இருக்கிறதா என கேட்கிறார். பின் மயூராவை ஏன் தனியாக விட்டு சென்றீர்கள் என கேட்கிறார். என்னிடம் சொல்லி இருந்தா நான் அவளை பார்த்து கொண்டிருப்பேன் இல்லையென்றால் என் வீட்டிற்கு கூட்டிட்டு போயிருப்பேன் என சொல்கிறார். ராதிகாவால் எதுவும் பேச முடியவில்லை. பின் பாக்கியா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க அங்க எல்லாம் சரியாகிவிட்டதா என கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை என ராதிகா சொல்கிறார்.

TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – இப்படி படித்தால் வெற்றி நிச்சயம்!

பின் பாக்கியா ராதிகாவிற்கு காபி போட்டு கொடுக்க அவருக்கும் காபி போடுகிறார். எல்லாம் சரியாகிவிடும் ராதிகா நீங்க இன்னோரு திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக இருக்க வேண்டும் நானும் அதை தான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் என சொல்ல ராதிகாவுக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. பின் இதோ வருகிறேன் என சொல்லிவிட்டு ராதிகா எழுந்து செல்கிறார். பின் ராதிகாவின் அண்ணன் கோபியிடம் நன்றி சொல்ல ராதிகாவின் அம்மா பாக்கியா தான் உங்க மனைவி என முன்னதாக சொல்லி இருந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது என சொல்கிறார். எல்லாம் ராதிகாவை திருமணம் செய்ய தான் விவகாரத்து வரை சென்றேன் என கோபி சொல்ல, ராதிகாவின் அண்ணன் நீங்க கண்டிப்பாக ராதிகாவை திருமணம் செய்து கொள்வீர்களா என கேட்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!